போலி என்சிசி பயிற்சியாளர், போலி வக்கீல், பண மோசடி ; எலி பேஸ்ட் சாப்பிட்ட நாம் தமிழர் தில்லாலங்கடி சிவராமன் !
போலி என்சிசி பயிற்சியாளர், போலி வக்கீல், பண மோசடி ; நாம் தமிழர் டுபாக்கூர் சிவராமன் மீது இறுகும் கிடுக்கிப்பிடி ! பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு , வழக்கை 15 நாளில் விசாரித்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு , தேசிய மகளிர் ஆணைய தாமாக முன்வந்து 3 நாட்களுக்குள் வழக்கு முடிக்க வேண்டும் என ஆணை நாம் தமிழர் கட்சிப் பதவியை வைத்து, தனியார் பள்ளிகளை மிரட்டி பயிற்சி முகாம்களை நடத்தியது அம்பலம் , சீமானுக்கு வன்னியரசு கேள்வி , நாம் தமிழர் டுபாக்கூர் சிவராமன் மீது கிடுக்கிப்பிடி
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள கிங்ஸ்லி என்ற தனியார் மேல்நிலை பள்ளி சார்பில் மாணவிகளுக்கு கடந்த 5-ஆ தேதி முதல் 9-ஆம் தேதி வரையில் தேசி மாணவர் படை (என்.சி.சி.) முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், அந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் 17 பேர் பங்கேற்றனர்.
இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்ற எட்டாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியை காவேரிப்பட்டணம் காந்திநகர் காலணியை சேர்ந்த டுபாக்கூர் மாஸ்டர் சிவராமன் , மாணவியை தணியாக அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், பர்கூர் அனைத்து மகளி போலீஸார் போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் பயிற்சியாளர் சிவராமன், பள்ளி முதல்வ சதீஷ்குமார் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர்.
விசாரணையில் அனுமதி பெறாம போலியாக என்சிசி முகாம் நடத்தப்பட்டதும், மாணவிகளுக்கு பாலியல் தொந்தர அளிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
நாம் தமிழர் கட்சி பதவியை காரணம் காட்டி போலி பயிற்சி
தனியார் பள்ளி, கல்லூரிகளில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தும் பள்ளியில் என்.சி.சி. பயிற்சியளிக்க மாணவி ஒருவருக்கு தலா ₹1,500 வசூல் செய்துள்ளார் சிவராமன்.
அந்தப் பணத்தில் மாணவிகளுக்கு பதக்கங்கள், கேடயங்கள் வழங்கியுள்ளார். மேலும் சில கல்வி நிறுவனங்களிலும் போலியாக முகாம் நடத்தியுள்ளார் என போலீஸ்க்கு தகவல் கிடைத்துள்ளது. நாதக கட்சிப் பதவியை வைத்து, தனியார் பள்ளிகளை மிரட்டி பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளார், சிவராமன் என கிருஷ்ணகிரி மாவட்ட என்.சி.சி ஒருங்கிணைப்பாளர் கோபு தெரிவித்துள்ளார்.
தேசிய மகளிர் ஆணையம்
தேசிய மகளிர் ஆணைய தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது . மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரி சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து நியாயமான விசாரணையை உறுதி செய்து 3 நாள்களுக்குள் காவல்துறை மற்றும் மாநி அரசு எடுத்த விரிவான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணைய அறிவுறுத்தியுள்ளது.
சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
இந்த சம்பவங்களைப் பற்றி முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், பவானீஸ்வரி, காவல்துறை தலைவர் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) ஒன்றையும் அமைத்திட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து, அவர்களின் நலன் காத்திட தேவையான நடவடிக்கைகள் குறித்தும், இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து, இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்கவும் , இக்குழுவில், மாநில சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானிடாம் வர்கீஸ், பள்ளிக்கல்வி இயக்குநர் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், மனநல மருத்துவர்கள் திருமதி. பூர்ண சந்திரிகா மற்றும் சத்யா ராஜ், காவல்துறை ஆய்வாளர் லதா, குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் வித்யா ரெட்டி உறுப்பினர்களாக இருப்பார்கள்.
மேற்கூறிய சம்பவம் குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனையை பெற்றுத்தர உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின்.
விசிக வன்னியரசு கேள்வி
கிருஷ்ணகிரியில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நாம் தமிழர் கட்சி ஆசாமியை கட்சியை விட்டு நீக்கிவிட்டு கடந்து செல்கிறார் சீமான், கிருஷ்ணகிரி பெண்பிள்ளைகளுக்கு நியாயம் கேட்டு போராட நேரமில்லையா? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
டுபாக்கூர் சிவராமன் மீது மோசடி வழக்கு
போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் தன்னை வக்கீல் என கூறி ₹36 லட்சம் மோசடி செய்த தாக கிருஷ்ணகிரி கொண்டேபள்ளி கிராமத்தை சேர்ந்த , சக்திவேல் மோகன், சாந்தி, நாராயணன், மஞ்சுளா, கோவிந்த சாமி மற்றும் சந்திரா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி , பெத்ததாளப்பள்ளிகிராமத்தில் எங்களுக்கு பாத்தியப் பட்ட சொத்தை வேறொ ருவர் போலியான கிரையபத்திரம் தயார் செய்து சுவாதினத்தில் வைத்துள்ளார். அந்த சொத்தை மீட்டுத் தருவதாகவும் தான் ஒரு வக்கீல் எனவும் சிவராமன் எங்களிடம் அறிமுகமானார்.
பின்னர் மாவட்ட முதன்மை நீதிமன்ற உத்தரவு என போலியான நீதி மன்ற ஆணையை எங்களிடம் காண்பித்து நீதிமன்ற வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என எங்களிடம் மொத்தம் ₹36 லட்சத்து 20 ஆயிரத்தை சிவராமன் வசூலித்தார்.
பின்னர் வங்கி கணக்கில் செலுத்தியது போன்ற போலியான வங்கி ரசீதையும் காண்பித்தார். இந்நிலையில் , பள்ளி மாணவியை பாலியல் வன் கொடுமை செய்த வழக்கில் சிவராமன் போலியாக என்சிசி முகாம் நடத்தியதும், போலியாக தன்னை வழக்கறிஞர் என காட்டிக் கொண்டதும் எங்களுக்கு தெரியவந்தது.
ஆகவே வக்கீல் என கூறி எங்களை ஏமாற்றிய சிவராமன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங் களுடைய பணம் ₹36 லட் சத்து 20 ஆயிரத்தை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த சம்பவத்தால், ஏமாற்றுதல், நீதிமன்றம் மற்றும் பத்திரப்பதிவு ஆவணங்களை போலியாக தயாரித்தல், பொய்யாக ஆவணத்தை தயாரித்து ஏமாற்றுவது உள்ளிட்ட பிரிவுகளில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் டுபாக்கூர் சிவராமன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி பிரமுகர் சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு , தற்கொலைக்கு முயன்ற சிவராமன் சேலம் மருத்துவமனையில் அட்மீட் .
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் என்சிசி என்ற பெயரில் போலியாக பயிற்சி முகாம் நடத்திய போது 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவராமன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி கந்திகுப்பத்தில் போலி என்.சி.சி முகாம் நடத்தி தனியார் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு வழக்கறிஞர் என்ற பெயரில் பண மோசடி செய்த வழக்கு , தற்போது இந்த பாலியல் வழக்கையும் சேர்த்து, சிவராமன் மீது 3-வது வழக்கு பாய்ந்துள்ளது.
இதற்கிடையே, இந்த வழக்ஞகைது செய்யப்படுவதற்கு முன்னதாக, சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டதை அடுத்து அவருக்கு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி பாலியில் குற்றவாளி தற்கொலை முயற்சி? விசாரணை அதிகாரிகள் பவானீஸ்வரி
மற்றும் ஜெயஸ்ரீ விளக்கம் !
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் பவானீஸ்வரி மற்றும் பல்நோக்கு குழுவின் தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 22) கிருஷ்ணகிரியில் பத்திரிக்கையாளர்க சந்தித்தனர்.
கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் போலியான என்.சி.சி முகாம் இந்த மாதம் தொடக்கத்தில் நடத்தப்பட்டுள்ளது. அந்த போலி என்சிசி முகாமின் ஒருங்கிணைப்பாளரான சிவராமன் என்பவர் முகாமில் கலந்துகொண்ட சிறுமிகளை பாலியல்
வன்கொடுமைக்கு ஆளாக்கியதால் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
மக்களிடம் பெரும் சலசலப்பை உருவாக்கிய இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் ஸ்டாலின் நேற்று சிறப்புப் புலனாய்வுக் குழு , பல்நோக்குக் குழு என இரண்டு குழுக்களை அமைக்க நேற்று உத்தரவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கிருஷ்ணகிரிக்கு நேற்று இரவே வந்துவிட்டனர் . இதைத் தொடர்ந்து இன்று பல்நோக்கு குழுவின் தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரனும், புலனாய்வுக் குழுவின் தலைவர் காவல்துறை அதிகாரி பவானீஸ்வரியும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
அதில் பேசிய காவல் துறை அதிகாரி பவானீஸ்வரி “இந்த சம்பவம் குறித்தும், இது போல மற்ற சம்பவங்கள் நடந்திருந்தால் அதையும் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து, விரைவாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம்” என்றார்.
கிருஷ்ணகிரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகள் புகார் அளிக்கத் தைரியமாக முன்வரவில்லை, என்ன நடந்தது என்று முழுமையாகக் கண்டறிய இந்த குழு எந்த மாதிரி நடவடிக்கைகள் எடுக்கும் என்று பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு….
அதற்கு பல்நோக்கு குழு தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன் “பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள், சம்பவம் நடந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே ஒரு முறை உளவியல் ஆலோசனை வழங்கியிருக்கிறோம். மேலும் ஆலோசனைகள் வழங்குவோம் ” என்றார்.
மேலும் “நான்கைந்து பள்ளிகளில் இது போலப் போலியாக முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விசாரணைக்குப் பின்பு தான் முழுமையாகச் சொல்ல முடியும்” என்று தெரிவித்தார்.ஜெயஸ்ரீ
முக்கிய குற்றவாளி சிவராமன் ஏன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற கேள்விக்கு? கைது செய்வதற்கு முன்பு சிவராமன் எலி மருந்து விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனால் தான் மருத்துவர்களின் ஆலோசனையின் படி அவரை காப்பாற்றுவதற்குச் சேலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என்றார்
இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடந்தால் மக்கள் என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்கு ?
நானும் ஒரு தாய் தான். எனக்கு இந்த வலி புரிகிறது. இந்த மாதிரி சம்பவங்கள் நடந்தால் மக்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும். அதற்காகத்தான் 1098 என்கிற உதவி எண் உள்ளது. அதற்கு ஃபோன் செய்து புகார் அளியுங்கள். குடும்பத்திற்குக் கெட்ட பெயர் வந்துவிடும் என்று பயப்படவேண்டாம். குற்றம் செய்தவர் தான் பயப்படவேண்டும்” என இவ்வாறு பவானீஸ்வரி , ஜெயஸ்ரீ ஆகியோர் பதிலளித்தார்கள்.
– மணிகண்டன்