அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

698 கிலோ கஞ்சா, 63 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா, விற்பனை மற்றும் நுகர்வோரை தடுக்கும் வகையில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் (2026) கஞ்சா விற்பனை மற்றும் பயன்படுத்துதல் சம்பந்தமாக திருச்சி 134, புதுக்கோட்டை 60, கரூர் 91, பெரம்பலூர் 26, அரியலூர் 26, தஞ்சாவூர் 142, திருவாரூர் 79, நாகப்பட்டிணம் 41 மற்றும் மயிலாடுதுறை 198 என மொத்தம் 797 வழக்குகள் பதியப்பட்டு, மேற்படி வழக்குகளில் சம்பந்தபட்ட நபர்கள் திருச்சி 159, புதுக்கோட்டை 93, கரூர் 119, பெரம்பலூர் 30, அரியலூர் 38, தஞ்சாவூர் 187, திருவாரூர் 85, நாகப்பட்டிணம் 66 மற்றும் மயிலாடுதுறை 200 நபர்கள் என மொத்தம் 977 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் 5 நபர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் 55 நபர்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். எதிரிகளிடமிருந்து மொத்தம் 698 கிலோ கஞ்சா, 63 இரு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம் மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்படி எதிரிகளிடம் தடை செய்யப்பட்ட கஞ்சா மொத்தமாக விற்பனை செய்த நபர்களை கண்டறிந்ததில் திருச்சி 1, கரூர் 7, பெரம்பலூர் 1, அரியலூர் 15, நாகப்பட்டிணம் 2 என மொத்தம் 26 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தடை செய்யப்பட்ட கஞ்சா மேற்கண்ட எதிரிகளிடம் மொத்தமாக வாங்கி சில்லரைக்கு விற்ற நபர்களை கண்டறிந்ததில் திருச்சி 4, கரூர் 7, அரியலூர் 9, திருவாரூர் 4 என மொத்தம் 24 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

எனவே வரும் நாட்களில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் விற்பனை மற்றும் நுகர்வோரை தடுக்கும்பொருட்டு தொடர் சோதனைகள் நடத்தி எதிரிகளை கைது செய்து தடுப்பு காவலில் வைக்க மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.