அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி மாவட்ட காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகளின் விபரங்கள்

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப  கடந்த 06.01.2025 முதல் தற்போது வரை பணிபுரிந்து வருகிறார். மேற்படி காலகட்டத்தில் திருச்சி மாவட்ட காவல்துறையினை மேம்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள், திட்டங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் கீழ்க்கானும் தலைப்புகளில் விவரிக்கப்படுகிறது.

*போக்கிரி மீதான நடவடிக்கைகள்:

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

திருச்சிமாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டுகளில் 420 எண்ணிக்கையிலான சரித்திர பதிவேடு கொண்ட குற்றவாளிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில், 2025-2026 ஆம் ஆண்டுகளில் தொடர் மற்றும் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி, திருட்டு. கஞ்சா விற்பனையாளர்கள் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 505 குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்கள் மீது புதிதாக சரித்திர பதிவேடுகள் துவங்கப்பட்டது. அதில் கொலை குற்றவாளிகள் 73 நபர்கள் மீதும், போக்சோ, கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகள் 55 நபர்கள் என மொத்தமாக 925 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமான முறையில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களை அச்சுறுத்தக்கூடிய வகையில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 119 நபர்கள் மீது 2025 -ம் ஆண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் நடப்பாண்டு 2026-ல் இது நாள்வரை 49 நபர்களின் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கடந்த 10.05.2026 ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 364 முக்கியமான சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு முதல் முறையாக சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் ஆஜர் அணிவகுப்பு (HS Parade) நடத்தப்பட்டது.

* கொலை வழக்குகளில் நடவடிக்கை:

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 40 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2025 ஆம் ஆண்டு 34 கொலை வழக்குகளும், 2026 ஆம் ஆண்டு 13 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 44 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, சில வழக்குகள் சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில், காவல் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற புலன்விசாரணைக்குப் பின் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பபட்டது குறிப்பிடத்தக்கது. சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதன் விளைவாக கொலை மற்றும் இதர குற்ற சம்பவங்கள் குறைக்கப்பட்டது.

*திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை :

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் 542 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 422 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1,79,21,289 மதிப்பிலான வழக்கு சொத்துக்கள் 42% வரை மீட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், 06.01.2025 முதல் தற்போது வரை 641 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 685 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 11,86,30,889 மதிப்பிலான 87% வழக்கு சொத்துக்கள் மீட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் முக்கிய வழக்குகளான சமயபுரம். துவரங்குறிச்சி, புத்தாநத்தம் பகுதிகளில் நடைபெற்ற கொள்ளை வழக்குகளில் களவு போன 25 4 கிலோ அளவிலான தங்க நகைகள் குற்றவாளிகளிடமிருந்து மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருச்சி எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம்
திருச்சி எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம்

*வழக்குகளில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகள்.

கடந்த 06.01.2025 முதல் தற்போது வரை காவல் கண்காணிப்பாளரின் உந்துதலின் பேரில் பல்வேறு காவல் நிலையங்களில் நீதிமன்ற விசாரணையில் இருந்த வழக்குகளில் உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கீழ்கண்ட பிரிவுகளில் பெற்று தரப்பட்டது.

*போதை பொருட்களான கஞ்சா மற்றும் குட்கா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 111 கஞ்சா மற்றும் 420 குட்கா வழக்குகள் 648 எதிரிகள் மீது பதிவு செய்யப்பட்டு, அதில், 80.630 கிலோ கஞ்சா மற்றும் 2222.220 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 06.01.2025 முதல் தற்போது வரை 394 கஞ்சா வழக்குகள் 509 எதிரிகள் மீது பதிவு செய்யப்பட்டு, அதில் 317.595 கிலோ கஞ்சாவும், 1786 குட்கா வழக்குகள் 1856 எதிரிகள் மீது பதிவு செய்யப்பட்டு, அதில் 9795.170 கிலோ குட்காவும் கைப்பற்றப்பட்டது. முந்தைய ஆண்டை காட்டிலும் 339.141% அதிகமாக கைப்பற்றப்பட்டது.

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

* சாலை விபத்துகள் மற்றம் தடுப்பு நடவடிக்கைகள்

திருச்சி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு முதல் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட நபர்கள் மீது 5,21,864 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து அபராத தொகையான ரூ.8,95,18,000/-வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும், நெடுஞ்சாலைகளில் தடுப்பு அரண்கள் (பேரிகார்ட்) அமைத்தும் (Hotspot) பகுதிகளில் தனி கவனம் செலுத்தியும் மற்றும் இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் சமிஞ்கை விளக்குகள் மற்றும் ஒளிரும் விளக்குகள் அமைத்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

*கண்காணிப்பு கேமராக்கள்

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்களை குறைக்கவும். குற்ற சம்பவங்களை கண்டறியும் பொருட்டும். நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 2,281 கண்காணிப்பு கேமராக்கள் புதியதாக நிறுவப்பட்டுள்ளது. மேலும், நடமாடும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள பெரிய அளவிலான திரை மூலமாக மக்கள் அதிமாக கூடும் இடங்களில் ஒவ்வொரு நாட்களிலும், ஒவ்வொரு தலைப்புகளில், வெவ்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள்.

திருச்சி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களை குறைக்கும் பொருட்டு திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவலர்கள் மூலம் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் பற்றியும், குடும்ப வன்முறைகள் குறித்து 2025 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 47,284 விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டது. மேலும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காவலன் உதவி ஆப் குறித்து விளக்கி கூறி, 48, 233 நபர்களின் அலைபேசியில் பதிவேற்றம் செய்து மாநில அளவில் திருச்சி மாவட்டம் நான்காவது இடத்தில் இருந்து வருகிறது.

2025 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்ட புதிய திட்டங்கள்

1 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, சட்ட விரோத செயல்கள், மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் 925 சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்களை கண்காணித்து, குற்ற சம்பவங்கள் நடைபெறாவண்ணம் குறிப்பிட்ட இடைவெளியில் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து 03 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்க 01 காவலர் என ஒதுக்கப்பட்டு, காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரை 300 காவல் ஆளிநர்கள் குற்றவாளிகளின் இருப்பிடத்திற்கு சென்று தணிக்கை செய்த வந்த நிலையில், குற்றவாளிகளை காவல் உயர் அதிகாரிகள் எந்நேரத்திலும் கண்காணிக்கும் பொருட்டு திருச்சிராப்பள்ளி அண்ணா பல்கலைக்கழக கணிணி அறிவியல் துறையுடன் சேர்ந்து சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கும் கருடன்” எனும் புதிய மொபைல் செயலி உருவாக்கப்பட்டு, 03.10.2025 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகிறது.

2 விபத்து மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய ஏதுவாகவும், பொதுமக்கள் தங்கள் அவசர மற்றும் ஆபத்து நேரத்தில் 24 மணிநேரமும் காவலர்களை உடனடியாக அணுகும் வகையில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தனியார் நிறுவனமான டால்மியா சிமெண்ட் ஆலையின் CSR (Corporate Social Responsibility) நிதி பெற்று, கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் ரவுண்டானா மற்றும் திருச்சி சென்னை சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பாலத்தின் கீழ்பகுதியில் “காவலர் உதவி மையம்”(Police Assistance Booth) அமைக்கப்பட்டு, தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பொதுமக்கள் சேவைக்காக திறக்கப்பட்டு, மேற்படி காவல் உதவி மையத்திலிருந்து நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள CCTV கேமராக்களை கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  1. G.O. (MS) 351, dated 10.07.2025 Home (Police-IX) Department, Secretariat, Chennai -ன் படி அனைத்து மாவட்ட ஆயுதப்படை வளாகத்திலும் காவலர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது குழந்தைகள் பயன்பெறும் வகையில் காவலர் மன்றம் ஆரம்பிக்கப்பட அறிவுறுத்தியதன் பேரில் திருச்சிராப்பள்ளி மாவட்டம். ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை புதுப்பித்து, அதற்கு “காவலர் மன்றம்” என பெயரிட்டு, கடந்த 25.022026) அன்று மாலை 16.30 மணிக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேற்படி மன்றத்தில் காவலர்களது குழந்தைகள் தங்களது ஒய்வு நேரத்தை பயனுள்ள விதமாக செலவிடும் வகையில் புத்தகங்கள், செஸ், கேரம்போர்டு மற்றும் வாலிபால், கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டு உபகரணங்களும், கிரிக்கெட் பயிற்சி மற்றும் பேட்மிட்டன் விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
  2. மேலும், திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தின் காவலர் குடியிருப்பில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த காவலர் மருத்துவமனை போதுமான இடம் மற்றும் படுக்கை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வந்த நிலையில், காவல் கண்காணிப்பாளர் அவர்களின் சீரிய முயற்சியினால் GVN மருத்துவமனையுடன் இணைந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டம். ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஒருகட்டிடத்தை புதுப்பித்து, தனி மருத்துவர் அறை மற்றும் 05-படுக்கை வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட காவலர் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, 26.05.2026 அன்று காவலர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

* 2025 முதல் தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட மெச்சதகுந்த நடவடிக்கைகள்

1) திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள காலாவதியான பழைய பதிவேடுகள் மற்றும் தேவையில்லாத காகிதங்களான சுமார் 21 மெட்ரிக் டன் மற்றும் 220 கிலோ பழைய காகிதங்கள் கடந்த 28.0725 அன்று புகழூர் காகித ஆலைக்கு அனுப்பட்டு, அதன் எடை மதிப்பிற்கு ஏற்றவாறு 1220 ரிம் xerox பேப்பர் பண்டல்கள் பெறப்பட்டது. அதே போன்று மீண்டும் 17.04.2026 அன்று 17.544 டன் பழைய காகிதங்கள் அனுப்பபட்டு 860 ரிம் xerox (மொத்தம் 2080) ரிம் பேப்பர்கள் பெறப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து அலவலகங்களுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டு, பேப்பர் தட்டுப்பாட்டை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கண்காணித்து தடுப்பதற்காகவும், மேலும், காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதிகளில் ரோந்து அலுவல் புரிவதற்காகவும், 04 நான்கு சக்கர வாகனங்களும், 45- இருசக்கர வாகனங்களும், 11-நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களும், 13 நிரந்தர சோதனை சாவடிகளும் நிறுவப்பட்டுள்ளது மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக்கிய இடங்களில் பெண்காவலர்கள் இரவு ரோந்து அலுவலாக நியமித்ததால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று. பொதுமக்கள் குறைகளை களைய ஏதுவாக உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.