“இந்த இனம் சுமக்கும் வலி தான் ‘நந்தன்’ படம்”

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“இந்த இனம் சுமக்கும் வலி தான் ‘நந்தன்’ படம்” Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா. சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். வரும் 20–ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 13 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

Nandhan Movie
Nandhan Movie

அங்குசம் இதழ்..

இதில் பேசியவர்கள்…. ஒளிப்பதிவாளர் சரண்
” இதற்கு முன் ‘கிடாயின் கருணை மனு’, ‘விழித்திரு’ திரைப்படங்களில் மட்டுமே பணியாற்றி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்து இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பை அளித்த சரவணனுக்கு என் நன்றிகள். நடிகர் சசிகுமார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர், அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. சமுத்திரகனியுடன் பணியாற்றியதும் நல்ல அனுபவம். ஜிப்ரானின் இசை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.

எடிட்டர் நெல்சன் ஆண்டனி
” அண்ணன் சசிகுமார் படங்களை ரசிகனாக பார்த்திருக்கிறேன் அவரது படத்தை ரஷ்ஷாக பார்த்து, எடிட் பண்ணியது புதிய அனுபவமாக இருந்தது. இயக்குநருக்கு நன்றி. பெரிய மனிதர்கள் மேடையில் இருக்கிறார்கள் . இவர்களுடன் இருப்பதற்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி”.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

கலை இயக்குநர் உதயகுமார்

“இந்தப் படத்தில் என்னை பரிந்துரை செய்த இணை இயக்குநர் குரு அவர்களுக்கு நன்றி. அண்ணன் சசிகுமார் அவர்களுடன், நான் மூன்று வருடங்கள் பணியாற்றி இருக்கிறேன். இயக்குநர் வினோத் அவர்களின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நான் அசிஸ்டெண்டாக பணியாற்றினேன். அவர் இருக்கும் மேடையில் கலை இயக்குநராக நான் இருப்பது, எனக்கு பெருமை. அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது”.

Nandhan Movie - சீமானுடன்
Nandhan Movie – சீமானுடன்

நடிகர் நிலா சுதாகர்
“எத்தனையோ இயக்குநர்கள் இங்கு வசூலை முன்வைத்து படம் எடுக்கிறார்கள். ஆனால் அண்ணன் சரவணன் சமூகம் சார்ந்து படத்தை எடுத்திருக்கிறார்.தன் மண்ணைப் பற்றிய வேதனையை பதிவு செய்யும் விதமாக இப்படத்தை எடுத்துருக்கார். படத்தில் அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் மிக அற்புதமாக வந்திருக்கிறது, உங்கள் ஆதரவை தாருங்கள்”.

Think Music சந்தோஷ்

“இரா. சரவணன் எனக்கு மிக நெருக்கமான நண்பர். நான், வினோத், சரவணன் எல்லோரும் நண்பர்கள். ஒரு நாள் நண்பர் வினோத், சரவணன் ஒரு படம் எடுத்திருக்கிறார், நீங்கள் பாருங்கள் என்று என்னை அழைத்தார். அப்போது மியூசிக் எல்லாம் பிக்ஸ் செய்யாமல் இருந்தது. எந்த எஃபெக்ட்டும் இல்லாமல், டப்பிங் கூட செய்யாமல், படத்தைப் பார்த்தேன். மிக அதிர்ச்சியாக இருந்தது. நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன் இப்படி எல்லாம் ஊர்ப் பக்கம் நடக்கிறதா? என்று கேட்டேன். ஆம் ஊர்ப் பக்கம் எல்லாம் இது மிக சாதாரணம் என்றார்கள். ஜிப்ரான் படத்தின் உணர்வுகளை.. காட்சிகளை.. இன்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்த படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.

Nandhan Movie -
Nandhan Movie –

இயக்குநர் பாலாஜி சக்திவேல்

“படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும், படத்தில் உழைத்த கலைஞர்களுக்கும் எனது நன்றிகள். இயக்குனர் சரவணன் தயாரிப்பாளராகவும் இப்படத்தை தொடங்கினார், அவர் எவ்வளவு கஷ்டத்திற்கு இடையில், இந்த படத்தை தொடங்கினார் என்பது எனக்கு தெரியும். இயக்குனர் சரவணன் ஒரு பத்திரிகையாளராகவும் இருப்பது, அவருக்கு சமூக பொறுப்புடன் கூடிய அக்கறையெல்லாம், படத்தில் உண்மையாக வந்திருக்கிறது”.

ஸ்ருதி பெரியசாமி

“இந்த மேடை எனக்கு மிக மிக முக்கியமான மேடை. ரொம்ப ரொம்ப எமோஷனல் ஆக உள்ளது. ஒரு புதிய முகத்திற்கு இவ்வளவு பெரிய கேரக்டர் தருவது, மிகப்பெரிய விசயம், ஆனால் என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை எனக்கு தந்த இயக்குநர் சரவணன் சாருக்கு நன்றி. நான் இனிமேல் நாயகியாக நடிப்பேனா என்பது தெரியாது, ஆனால் என்றென்றைக்கும் இந்தப்படம், என் மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும். இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கும், ஆதரவு தந்ததற்கும், அனைவருக்கும் என் நன்றி” டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் “தமிழ் சினிமாவுக்கு என, சில மரபுகள் இருக்கும். படம் ஆரம்பிக்கும் போது, கோயில், பசு மாடு, என காட்சி வைப்பார்கள். ஆனால் இந்த படத்தில் காலணியை குளோசப்பில் காட்சிபடுத்தி இருந்தார்கள். படம் முடியும் போது எனக்கு அத்தனை பிரமிப்பாக இருந்தது. எப்படி இப்படி ஒரு படத்தை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. உடனடியாக இந்தப் படத்தை நாம் தான் வெளியிடுகிறோம் என்று சொல்லி, ஒப்பந்தம் செய்து விட்டேன். ஒரு வாழ்வியலை சினிமாவாக கொண்டுவர, மிகவும் மெனக்கெட்டு, இப்படத்தை செய்துள்ளார்கள். சசிகுமார் அப்படியே உருக்கிவிட்டார். இத்தனை வருட சினிமா அனுபவத்தில் ஒரு திரைப்படத்தை பார்த்து, பிரமிப்பது புதிதாக இருந்தது. எங்களின் அனைத்து படத்திற்கும் தந்த ஆதரவைப் போல, இந்த படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.

இயக்குநர் ஹெச். வினோத்
” என்னைப் பொறுத்தவரை எது நல்ல படம் என்றால், ஒரு மனிதனை இன்னும் கொஞ்சமாவது நல்லவனாக மாற்ற முயற்சிக்கும் சினிமா தான் நல்ல சினிமா என்பேன், அந்த வகையில் இந்த திரைப்படம் மனிதனின் மனதை மாற்றும் சினிமாவாக இருக்கிறது. உண்மையிலேயே இது சிறந்த திரைப்படம்”.

Nandhan Movie -  சசிகுமார்
Nandhan Movie – சசிகுமார்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இயக்குநர் இரா. சரவணன்

“சினிமாவிற்கு வந்து பத்து வருடங்களாகி விட்டது. முதல் இரண்டு படங்களுக்கு மேடை எதுவும் அமையவில்லை, இது இதுதான் எனக்கு முதல் மேடை. அண்ணன் சீமான் எப்போது இந்த நிகழ்வுக்கு வர ஒப்புக்கொண்டாரோ, அப்போதே நந்தன் திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக ஆகிவிட்டது.

ஒரு படத்தின் பிசினஸ் என்பது பொண்ணு பார்ப்பது மாதிரி. பொண்ணு எவ்வளவு அழகாக இருந்தாலும், பெர்ஃபெக்ட்டாக இருந்தாலும், வரதட்சணையை கூட்டி கேட்பதற்கு, ஏதாவது குறை சொல்லி பேசுவது தான் வழக்கம். அது போல் தான் படம் பார்க்க வருபவர்களும்.. பிசினஸுக்காக படம் பார்க்க வருபவர்களும், படம் பார்க்கும் போது சிரிக்க கூட மாட்டார்கள். ஆனால் ரவீந்திரன் சார் படம் பார்த்துவிட்டு, பிஸினஸ் பேசாமல், ஒன்றரை மணி நேரம் படத்தைப் பற்றியே என்னிடம் பேசினார். சார் படத்தின் பிசினஸ் என்று நான் ஆரம்பித்த போது, இந்த படத்தை நான் தான் வெளியிடுவேன் என்றார்.

இந்த விசயத்தையும் சாத்தியப்படுத்தி தந்ததும் சசிகுமார் சார் தான். எப்போதும் எனக்கு அண்ணனாக, முதுகெலும்பாக இருப்பது சசிகுமார் சார் தான். முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரமாக மாறி, இந்த படத்திற்காக அவர் முழுதாக உயிரையே தந்து நடித்த தந்தார்.

ஜிப்ரான் மிக அற்புதமான இசையை தந்துள்ளார். என் படத்தை நானே பார்த்து பிரமிக்கும் அளவு, ஒரு இசையை அவர் தந்திருக்கிறார். இப்படத்தை நான் நினைத்தபடி எடுக்க உதவியாக இருந்த ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், எடிட்டர் என அனைவருக்கும் என் நன்றிகள் .

இந்தப் படத்துக்காக உழைத்து மறைந்து போன மூன்று பேரை இந்த இடத்தில் நினைவு கூறுகிறேன், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்”.

இயக்குநர் & நடிகர் சமுத்திரகனி
“நல்ல கதையை நாம் எழுதிவிட்டால் போதும், அதுவே அதனை உருவாக்கிக் கொள்ளும். நாம் யாரையாவது நினைத்து எழுதியிருப்போம், ஆனால் அது முடிவு செய்வதுதான். அப்படித்தான் சசிகுமார் இந்தப் படத்திற்குள் வந்திருக்கிறார். அப்படித்தான் இந்தக் கதையில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் என்னையும் நடிக்கச் சொன்னார்கள், நன்றி மகிழ்ச்சி.

சசி என் நண்பன், அவனை பொத்திப் பொத்தி பார்த்துக் கொள்வேன். ஆனால் இந்த படத்தில் அத்தனை கஷ்டப்பட்டு இருக்கிறான். பட்ட கஷ்டத்திற்கெல்லாம், இந்தப் படம் அவனுக்கு பெருமை தேடித் தரும். நந்தனுக்கு முன் – நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான்.

இந்தப் படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமே என்ற தவிப்பு என்னிடம் இருந்தது. மிகச்சரியாக வந்து சேர்ந்தார் ரவீந்திரன் சார்”.

இசையமைப்பாளர் ஜிப்ரான்
“நண்பர் சந்தோஷ் தான் முதலில் போன் செய்தார். பின் இயக்குனர் வினோத்தும் இந்த படத்தை பார்க்க பரிந்துரைத்தார். அப்போதுதான் இந்தப் படத்தை பார்த்தேன். படத்தை பார்த்தவுடனே, இயக்குனர் சரவணனுக்கு ஃபோன் செய்து, இந்த படத்தை கண்டிப்பாக செய்கிறேன் என்று சொல்லிவிட்டேன். படம் கண்டிப்பாக பெரிய ஒரு தளத்திற்கு செல்லும், அதில் நாமும் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்று தோன்றியது. கண்டிப்பாக இந்தப் படம் பேசும் அரசியல் முக்கியமானது. நான் இந்தப் படத்திற்குள் இருக்கிறேன் என்பதுதான் எனக்கு பெருமை, நான் எந்த உதவியும் செய்யவில்லை. படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது”.

ஹீரோ சசிகுமார்

” பல வேலைகளுக்கு மத்தியில் எங்களை வாழ்த்த இங்கு வந்திருக்கும் சீமான் அண்ணன் அவர்களுக்கும், இயக்குநர் வினோத் முதலான பிரபலங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். உண்மையிலேயே சரவணனின் நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மற்றவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் குடும்பம் குழந்தை என அனைத்தையும் விட்டுவிட்டு, சென்று நிற்பவர் சரவணன். இப்போது அவர் பின்னால் நிற்பவர்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

இயக்குநர் பின்னால் எப்போதும் துணையாக நிற்பது அவர் மனைவி கலா அக்கா தான். அவர் ஆசிரியர் வேலையை விட்டு விட்டு வந்து, இந்த படத்திற்காக பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தார். நாங்கள் பட்ட கஷ்டத்தை எல்லாம் விட, அவர் பட்ட கஷ்டம் தான் அதிகம். எங்கள் படத்தை நாங்களே நன்றாக இருக்கிறது என்று சொல்வதை விட , நீங்கள் பார்த்து சொல்லுங்கள். இந்தப்படம் உங்கள் எல்லோரையும் கண்டிப்பாக திருப்தி செய்யும்.

இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற போது, நான் யோசித்தது ரவி சாரை தான். அவர் மிக கறாராக இருக்க கூடியவர். ஆனால் அவரே படத்தை துளித் துளியாக ரசித்தது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி கண்டிப்பாக மக்கள் எல்லோரும் ரசிப்பார்கள்”.

சீமான் “இறைவனைக் காண இசை பாடல் பாடிய வரலாறு நம்மிடம் இருக்கிறது. ஆனால் இந்த நந்தன் இசை வெளியீடு, இறைவனைக் காண அல்ல, மனிதனைக் காண. நாம் ரசிப்பதற்கு அல்ல, இந்த இசை, நாம் ஆழ்ந்து யோசிப்பதற்குத் தான் இந்த இசை. இந்த இசையை உருவாக்கி இருக்கும் நண்பர் ஜிப்ரானுக்கு என் வாழ்த்துக்கள்.

Nandhan Movie
Nandhan Movie

ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான், நாம் பார்த்த பிறகும் நம் மனதில் தாக்கத்தை உருவாக்கும் படி இருக்கும். அப்படி ஒரு திரைப்படத்தைத் தான் நம்ம தம்பி இயக்குநர் சரவணன் உருவாக்கி இருக்கிறான். பல நூறு ஆண்டுகளாக இந்த இனம் தூக்கிச் சுமந்து வரும் வலியை, திரை மொழியில் பதிவு செய்து இருக்கிறான் இரா சரவணன்.

அத்தனை பேரும் அற்புதமாக நடித்துள்ளனர். மிக அருமையாக நாம் வாழும் நிலத்தின் கதையை வழங்கி இருக்கிறான் சரவணன். வலியின் மொழி தான் இந்த திரைப்படம், வலி உங்களுக்குப் புரிந்தால் இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும். ஒரு ஒரு ஆகச் சிறந்த படைப்பு, என் தம்பிகள் இணைந்து மிகச் சிறந்த படைப்பை வழங்கியிருக்கிறார்கள். அவனோடு இணைந்து ஒத்துழைத்து, இப்படைப்பை வழங்கிய அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்”.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.