தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் !
கிராம அளவில் சிதிலடமடைந்த கோயில்களை கண்டறிந்து அதை புனரமைப்பது; ஆன்மீகத்தையும், இறை அன்பையும் இளைஞர்கள் இடத்தில் கொண்டு செல்வது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி கவனத்தை பெற்றிருக்கிறார்கள், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பினர்.
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் மாநில செயற்குழு கூட்டம், செப்-14 அன்று திருச்சி சங்கீதா ஹோட்டலில் நடைபெற்றது.
தமிழ் மாநில பொதுசெயலர் சிவந்தி அடிகளார் முன்னிலை வகிக்க, தேசியத் தலைவர் வழக்கறிஞர் பி.இராமசாமி, தேசிய பொதுச்செயலர் வழக்கறிஞர் பெ.சந்திரபோஸ், மாநிலத்தலைவர் புலவர் ஆதி.நெடுஞ்செழியன், மாநில பொதுச்செயலர் ஏ.டி.ராஜாசுப்ரமணியன், மாநில பொருளாளர் எம்.சிவக்குமார், மாநில செயலர் எம்.ஏழுமலை, மாநில செயலர் கா.சொக்கலிங்கம், தலைவர், புதுச்சேரி யூனியன் பிரதேசம் வைஜெயந்தி ராஜன், பொதுச்செயலர் புதுச்சேரி யூனியன் பிரதேசம் வழக்கறிஞர் ஜி.வைரக்குமார், புதுச்சேரி யூனியன் பிரதேசம் பொருளாளர் க.பார்த்திபன் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
— தஞ்சை க.நடராஜன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.