நியோமேக்ஸ் வெளிநாடுகளில் முதலீடு – ஆவணங்கள் சிக்கியதாக அடுத்தடுத்து புகார் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நியோமேக்ஸ் வெளிநாடுகளில் முதலீடு – ஆவணங்கள் சிக்கியதாக அடுத்தடுத்து புகார் !

நியோ மேக்ஸ் நிறுவன இயக்குனர்களுக்கு முன் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு நியோமேக்ஸ் நிறுவனம் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளது. அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் நிறுவனத்தின் பணங்கள் வெளிநாட்டு எக்ஸ்சேஞ்ச் மூலம் மாற்றப்பட்டுள்ளது அரசு தரப்பு வாதம்குற்றப்பிரிவு போலீசார் நிறுவனங்களில் சோதனை செய்ததில் பணங்கள் தங்க நகை வெள்ளி பொருட்கள் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன

அங்குசம் இதழ்..

நியோமேக்ஸ்’ நிதி நிறுவன மோசடி வழக்கில் நிறுவன பங்குதாரர்கள் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் வழக்கின் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4ஆம் தேதி ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை தலைமையாக கொண்டு ‘நியோமேக்ஸ்’ பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குநர்களாக வீரசக்தி, மற்றும் கமலக்கண்ணன் பாலசுப்ரமணியன், பலர் உள்ளனர் இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை கோவில்பட்டி மதுரை பைபாஸ் மற்றும் திருச்சி தஞ்சை என பல மாவட்டத்தில் அலுவலகங்கள் செயல்பட்டன தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 12% முதல் 30% வரை வட்டி தருவதாகவும். இரண்டரை முதல் 3 ஆண்டுல் இரட்டிப்பாக தரப்படும் எனக் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

நியோமேக்ஸ்
நியோமேக்ஸ்

இதைநம்பி ரூ.10 லட்சம் மூலம் பல கோடிக்கு முதலீடுகளை பலர் செய்துள்ளனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றி யுள்ளனர். இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் புகார் மனு அளித்தனர் இதனடிப்படையில் 17 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். சிலர் கைது செய்யபட்டனர்.

இந்நிலையில் நியோமேக்ஸ் ப்ராபரிட்டிஸ் நிறுவன பாலசுப்ரமணியன் கார்லாண்டோப்ராப்பர்ட்டிஸ் பழனிசாமி டிரான்சோ ப்ராப்பரிட்டிஸ் அசோக் மேத்தா பன்சால் டிரைடாஸ் ப்ராப்பர்ட்டிஸ் சார்லஸ் கிளோமேக்ஸ் ப்ராப்பர்ட்டிஸ் தியாகராஜன் மற்றும் இந்நிறுவனங்களின் இயக்குநர்கள் கமலகண்ணன் தாராயணசாமி மணிவண்ணன் செல்லம்மாள் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் மீண்டும் மனு செய்துள்ளனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதேபோல் மற்றொரு இயக்குநரான பாலசுப்ரமணியன் என்பவரும் முன்ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர. இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில் இந்த வழக்கு ஆரம்ப கட்ட விசாரணையில் உள்ளது குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளதால் இவர்களை கைது செய்து போலீஸ்காவலில் எடுத்து விசாரணை செய்வது முக்கியமாக உள்ளது எனவே இவர்களுக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது.

மேலும் இதில் முக்கிய குற்றவாளிகள் முதலீட்டாளர்களுக்கு வாட்ஸ் அப்பில் யாரும் போலீசில் புகார் கொடுக்கக் கூடாது கொடுத்தால் பணம் கிடைக்காது என தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. நிறுவனத்தில் பல்வேறு இடங்களில் சோதனை செய்யப்பட்டதில் முக்கிய ஆவணங்கள் பணம் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கான செய்ததற்கான பணப்பரிமாற்றங்களும் நடந்து உள்ளது எனவே இவர்கள் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நியூ மேக்ஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நாங்கள் அரசு விதிமுறையின் படி பதிவு பெற்ற நிறுவனமாகவே செயல்படுகிறோம் எந்த முறைகேடும் நடைபெறவில்லை இடைக்காலமாக ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டனர்.

நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் தரப்பில் நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என
50க்கும் மேற்பட்ட இடை ஈட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

– ஷாகுல்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.