மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் – பாரிவேந்தர் எம்.பி.பதவி தப்புமா ?

0

மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் – எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன
பாராளுமன்றச் சபாநாயகர் ஏற்பு
பெரம்பலூர் உறுப்பினர் பாரிவேந்தர் எம்.பி.பதவி தப்புமா?

மணிப்பூர் கலவரம் மற்றும் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி, பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக, ஒன்றியத் தலைமை அமைச்சர் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விளக்கம் அளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அவை தொடங்கிய 20ஆம் நாளிலிருந்து அவையைச் செயல்படாமல் முடக்கி வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக விதி எண்.176இன்படி விவாதிக்கலாம். உள்துறை அமைச்சர் விளக்கம் தருவார் என்று கூறப்பட்டது. எதிர்க்கட்சிகளோ விதி எண்.276இன்படி அவையை ஒத்திவைத்து மணிப்பூர் பிரச்சனை விவாதிக்கப்பட வேண்டும். தலைமை அமைச்சர் அவைக்கு வந்து விளக்கம் அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தன.

2 dhanalakshmi joseph

இந்நிலையில், தலைமை அமைச்சர் மோடி அவைக்கு வந்து விளக்கம் தரவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்த மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகோய் தீர்மானத்தை இன்று (ஜூலை 26) காலை 9.20 மணியளவில் தாக்கல் செய்தார். இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை உறுதி செய்துகொண்ட சபாநாயகர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார். விவாதம் நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

IJK _ DMK
IJK _ DMK
- Advertisement -

- Advertisement -

4 bismi svs

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது தலைமை அமைச்சர் மோடி முதலில் உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசுவர். இறுதியில் என் அரசின் மீது உறுப்பினர்கள் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று தலைமை அமைச்சர் மோடி கேட்டுக்கொண்டு உரையாற்றுவார். இதனைத் தொடர்ந்து அவையில் வாக்கெடுப்பு நடைபெறும். வாக்கெடுப்பின்படி நம்பிக்கையில்லாத் தீர்மானம் வென்றதா? தோற்றதா? என்பதைச் சபாநாயகர் அறிவிப்பார்.

தற்போது பாஜகவுக்கு 303 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு 150 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியுறும் வாய்ப்பே உள்ளது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு என்பது கட்சி ‘கொறடா’ உத்தரவின்படியே நடக்கும். கொறடா உத்தரவை மீறி உறுப்பினர்கள் வாக்களித்தால் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் என்பது விதியாகும். இதன் அடிப்படையில், நாடாளுமன்ற மக்களவையில் திமுக உறுப்பினராக உள்ள இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் தற்போது பாஜகவை ஆதரித்து வருகிறார். தில்லியில் நடைபெற்ற பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்திலும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். இவர் திமுக கொறடா உத்தரவின்படி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்தே வாக்களிக்கவேண்டும். மோடி அரசை ஆதரித்து வாக்களிக்கமுடியாது, ஆதரித்து வாக்களித்தால் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும். வாக்களிப்பில் கலந்துகொள்ளாமலும், திமுக கட்சியிலிருந்து விலகிச் சுயேட்சை உறுப்பினராக இருந்தாலும் பதவி பறிபோகும் வாய்ப்பு இருக்காது என்றே அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தாலும், மணிப்பூர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதில் எதிர்க்கட்சிகளுக்கு வெற்றியே கிடைக்கும் என்பதில் இருவேறு கருத்து இல்லை என்பதே உண்மை.

–ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.