நியோமேக்ஸ் ஏலம் | MSTC இணையதளத்தில் விண்ணப்பிப்பது எப்படி ?
நியோமேக்ஸ் நிலம் ஏலம் | MSTC இணையதளத்தில் விண்ணப்பிப்பது எப்படி ?
நியோமேக்ஸ் மோசடி வழக்கு விவகாரத்தில், நீண்ட நெடிய சட்டப்போராட்டங்களுக்குப்பிறகு, ஒருவழியாக இதுவரை அரசுடமையாக்கப்பட்ட நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்னிலையில் நடைபெற்று வரும் (CRL.OP(MD) No. 15498/2024 and others ) பிணை ரத்து தொடர்பான வழக்கில், முதற்கட்டமாக அட்டவணை-அ வில் இடம்பெற்றுள்ள 29 புராஜெக்டுகளில் உள்ள 10,158 பிளாட்டுகள் ஏலத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
ஏல அறிவிப்பு, ஏலத்தில் இடம்பெற்றுள்ள சொத்துக்களின் விவரங்கள் மற்றும் புகார்தாரர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் ஏலம் தொடர்பான அறிவிப்புகள் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசின் இணையதளத்தில் (www.tneow.tn.gov.in) வெளியாகியிருக்கிறது.
மின்னணு முறையில் நடைபெறும் ஏலத்தை, ஒன்றிய அரசின் நிறுவனமான MSTC நடத்துகிறது. இதற்கான பதிவுகள் தொடர்பான விவரங்களுக்கு MSTC வலைதளம் :
https://www.mstcecommerce.com/
www.mstcindia.co.in
ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் MSTC இணையதளத்தில் எவ்வாறு பதிவு செய்வது என்பதற்கான, வழிகாட்டுதல் வீடியோவை MSTC நிறுவனமே தமிழில் வெளியிட்டிருக்கிறது.
MSTC வலைதளத்தில் பதிவு செய்வது மற்றும் ஏலத்தில் பங்கேற்பது தொடர்பான சந்தேகங்களுக்கு MSTC அலுவலர்களை தொடர்பு கொள்ள :
9499054101 – 9499054102 – 9499054103 – 9499054104
நியோமேக்ஸ் தொடா்பான அறிவிப்புகளை தொிந்து கொள்ள
👇👇👇
நியோமேக்ஸ் : ஏலம் தொடர்பான நீதிமன்ற அறிவிப்புகள் முழுமையாக ஒரே இடத்தில் !
– அங்குசம் புலனாய்வுக்குழு








Comments are closed, but trackbacks and pingbacks are open.