எடுத்த ஏலத்தை கேன்சல் செஞ்சா இனி 2.5 இலட்சம் அபராதம் ?! கடுப்பான நீதியரசர்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில், வெள்ளிக்கிழமைதோறும் இனி விசாரணை நடைபெறும் என அறிவித்து, எப்படியேனும் குறைந்தபட்ச முதற்கட்ட தீர்வை நோக்கியாவது முன்நகர்த்தி கொண்டு சென்றாக வேண்டுமென்ற நோக்கில், நீதியரசர் பரதசக்ரவர்த்தி அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஏலத்தில் பங்கேற்று நிலங்களை தேர்வு செய்தவர்கள் அடுத்தடுத்து கேன்சல் செய்துவரும் நிகழ்வுகள் பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன.
இதனை நீதிமன்ற விசாரணையில் கடுமையாகவே, எச்சரித்த நீதியரசர் பரதசக்ரவர்த்தி, “ என்னை என்ன, 20 வருஷத்துக்கு முந்தைய ஆளுனு நினைச்சிட்டீங்களா? இனி, 2.5 இலட்சம் ஃபைனுனு போட்டாத்தான் முடிவுக்கு வரும் போல” என பேசியிருப்பது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
ஏல நடைமுறையில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இந்த ஏலத்தில் பங்கு கொள்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்த ஒரு முழுமையான ஒருங்கிணைந்த பார்வை இல்லாததே பெரும் குறையாக நீடிக்கிறது. பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் இதனை தெளிவுபடுத்தும் வகையில் ஒரு விரிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நீதிபதி பரதசக்ரவர்த்தி
நீதிபதி பரதசக்ரவர்த்தி

இந்த வார அங்குசம் வார இதழில்…

ஜூன்-19 ஆம் தேதியன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், ஏலத்தில் பங்கேற்று எடுத்த இடத்தை கேன்சல் செய்தவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக; பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் அடையாளம் காணப்பட்ட நியோமேக்ஸ் தொடர்புடைய சொத்துக்களை அட்டாட்ச்மெண்ட் செய்து ஏலத்துக்கு கொண்டு வரும் விவகாரத்தில், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் சுணக்கம் காட்டி வருவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து; வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அட்டாட்ச்மெண்ட் செய்த இடங்களை ஏலத்துக்கு கொண்டுவருவதில் இருப்பதாக சொல்லப்படும் சிக்கல் குறித்து; ஒரே கைப்பேசி எண்ணில் பதிவான 700-க்கும் மேற்பட்ட புகார்கள் குறித்த சர்ச்சை தொடர்பாக; தீர்வு திட்டத்திற்கான சாஃப்ட்வேர் உருவாக்கம் தொடர்பாக; முழுமையான கண்ணோட்டத்தில் தீர்வு திட்டத்தை வகுப்பது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது. நியோமேக்ஸ் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் பலர், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியும், கல்ஃப் நாட்டிலிருந்து ஒரு முதலீட்டாளர் ஆன்லைனிலும் பங்கேற்று பல்வேறு கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.
ஜூன்-19 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் என்ன நடைபெற்றது என்பதை விரிவாக அலசுகிறது, இந்த வீடியோ பதிவு. வீடியோவை முழுமையாக காண:

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

– அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.