அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நியோமேக்ஸ் : ஏல நடைமுறைகள் என்ன ஆச்சு ?

திருச்சியில் அடகு நகையை விற்க

நியோமேக்ஸ் மோசடி விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் மேற்பார்வையில் முதற்கட்டமாக டி.டி.சி.பி. அனுமதி பெறப்பட்ட நிலங்கள் பொது ஏலத்திற்கு வந்திருக்கின்றன. ஏலத்தை மத்திய அரசு நிறுவனமான எம்.எஸ்.டி.சி. நடத்தி வருகிறது. மார்ச்-13 ஆம் தேதி தொடங்கிய ஏலம், மே-14 ஆம் தேதி வரையில் தொடர்கிறது. இதுவரை 233 பிளாட்டுகள் பொது ஏலத்தில் போனதாகவும்; இதன்வழியே ரூ.31,06,90,452/-க்கு ஏலம் நடைபெற்றிருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நீதிபதி பரதசக்ரவர்த்தி
நீதிபதி பரதசக்ரவர்த்தி

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ஏற்கெனவே, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு இ.எம்.டி. கட்டணத்திலிருந்து விலக்கு அளித்து சலுகை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒருவேளை ஏலத்தில் பங்கேற்று பிறகு சொன்னபடி பணத்தை கட்ட முடியாமல் போனாலும், பாண்டுகளின் மதிப்பிலிருந்து இ.எம்.டி. தொகை நேர் செய்யப்படாது என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

மேலும், தங்களது புகாரையும் ஏற்க வேண்டும்; தங்களுக்கும் இ.எம்.டி. சலுகையோடு ஏலத்தில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதாக எம்.ஸ்டார். அசோசியேசன் சார்பில் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அவர்களது புகார் உள்ளிட்டு, கடந்த 08.10.2025 ஆம் தேதிக்குப்பிறகு இதுநாள் வரையில் பெறப்பட்ட புகார்கள் அனைத்தையும் அடுத்த பட்டியலில் சேர்த்து அவற்றையும் ஆய்வுக்குட்படுத்தி உறுதிப்படுத்துமாறு உத்தரவிட்டிருக்கிறது.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஏலத்தில் பங்கேற்பது தொடர்பான சந்தேகங்களுக்கு, ஏலத்தை நடத்தும் எம்.எஸ்.டி.சி. அலுவலர்களை 9499054101 –  9499054102 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

முழுமையான வீடியோவை காண 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.