இந்த குறுகிய மனப்பான்மை தான் … நியோமேக்ஸ் கயவர்களின் மூலதனம்!
வீடியோவை காண
நியோமேக்ஸ் மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களோடு பிரிந்து கிடக்கிறார்கள்.
அவற்றுள் ஒரு பிரிவினர் “நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டு உடனடி பணத்தேவைக்கு சட்டத்திற்கு உட்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்த விரும்புவோர் சங்கம்” என்பதாக வாட்சப் குழு ஒன்றை உருவாக்கி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களை அணிதிரட்டி வருகிறார்கள்.
இப்படி ஒரு தரப்பினர் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்து வருகிறார்கள் என்பதை அறிந்த மாத்திரத்தில் காட்டிய ஆர்வம்; அடுத்த கட்டமாக மதுரையில் ஜனவரி 6 ஆம் நாள் அன்று ஒன்று கூடுவதற்கு அழைப்பு விடுத்த நிலையில்; பலரும் வெளிப்படையாக கருத்துக்களை தெரிவிக்க தயங்கி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் இதுபோன்ற மனநிலை குறித்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் ஒருவர் தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
அவரது பதிவில்,
“எல்லா குழுக்களிலும் பயணிக்கும் அனைவருக்கும் வணக்கம் 🙏
இக் குழு (“நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டு உடனடி பணத்தேவைக்கு சட்டத்திற்கு உட்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்த விரும்புவோர் சங்கம்”) ஆரம்பித்த போது இருந்த வேகமும், ஊக்கமும் இப்போது ஒரு தொடக்க முயற்சியாக அனைவரும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் (ஜனவரி) 6 ந்தேதி ஒன்று கூடுவோம் என்று அறிவித்த பின் இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.
“யாரோ போராடுவார்கள், அதன் பலனை நாம் அனுபவித்துக் கொள்ளலாம்” என்ற நம்முடைய இந்த குறுகிய மனப்பான்மை தான் இந்த நியோமேக்ஸ் கயவர்களின் மூலதனம்.
இந்த மனப்பான்மை நம்மிடம் இருக்கும் வரை அவர்கள் தங்களுடைய படு பாதகச் செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருப்பார்கள்.
இந்த அடிப்படை உண்மை கூடத் தெரியாமல், “எனக்கு எப்படியும் நான் போட்ட முதலீடு திரும்பக் கிடைத்து விடும்” என்று வீட்டில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை விடப் பெரிய முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது.
ஏற்கனவே, நாம் செய்த முட்டாள்தனத்தின் தொடர்ச்சி தான் இந்த மனநிலை.
இப்படி இன்னும் எத்தனை முட்டாள்தனங்களைத் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கப் போகிறோம்?
இது இனியும் தொடர்ந்தால் நமது பணத்தை மீட்டெடுக்க வருடங்கள் பல ஆகும்.
நாமும் வருடக்கணக்கில் பல குழுக்களிலும் தொடர்ந்து பிதற்றிக் கொண்டும்; தத்துவங்களை பகிர்ந்து கொண்டும்; இந்த அயோக்கியர்களை வசை பாடிக் கொண்டே முடிவில் வானுலகம் போக வேண்டியதுதான்.
கண்ணுக்குத் தெரிந்ததும், தெரியாமலும் எத்தனை மரணங்கள்?
அந்த வரிசையில் நாமும் நின்று கொண்டு இருக்கிறோம் என்பது புரியவில்லையா?
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?
இன்னும் இந்த நியோமேக்ஸ் கயவர்களின் ரத்த வெறிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா?
நம்மை ஏமாற்றிய கயவர்கள் கம்பீரமாக நடந்து செல்ல நாமே ரத்தினக் கம்பளம் விரிப்பதற்குச் சாமானம் நாம் கையைக் கட்டிக் கொண்டு, எந்த முயற்சியும் செய்யாமல் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு, முயற்சி செய்பவர்களையும் விமர்சனம் செய்து கொண்டு இருப்பதுதான்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எல்லா வேலைகளையும் தூக்கி எறிந்து விட்டுக் காரணம் கூறாமல், 6-ந்தேதி மதுரை ஆட்சியர் அலுவலகம் நோக்கி படையெடுங்கள். நமது இந்த முதல் முயற்சியின் வெற்றியைக் கண்டு மற்ற அனைத்து குழுவில் இருப்பவர்களும், அத்தனை புகார்தாரர்களும் நமது குழுவில் வந்து சேரும் படி நமது இந்த முதல் முயற்சி அமைய வேண்டும்.
நண்பர்களே,போராடமல் வெற்றியில்லை!
எத்தனை நடுத்தர, ஏழை, முதியவர்களின் குடியைக் கெடுத்து விட்டு, இன்று நம் கண்ணெதிரேயே சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, நமது பணத்தையே நமக்கு எதிராக அதிகாரவர்க்கத்தினருக்கு வாரிக் கொடுத்துக்கொண்டு, நம்மையே கருவறுக்க நினைக்கும் கயவர்களுக்குச் சரியான பதிலடி கொடுக்க, எப்படி அலை அலையாகக் குழுவில் இணைந்தீர்களோ, அதே போல் பெருந்திரளாக மதுரை நோக்கி அணி திரண்டு வாருங்கள்.
இது நமது கடைசி முயற்சியாக எண்ணி இறுதி மூச்சு வரை போராடி இழந்த பணத்தை முழுமையாக மீட்டெடுப்போம் என்ற ஒரே குறிக்கோளுடன் ஒன்று திரண்டு வாருங்கள் நண்பர்களே!
இம்முறை நாம் வெல்வது நிச்சயம்.” என்பதாக அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.
— அங்குசம் புலனாய்வு குழு.
அங்குசம் வெளியிட்ட கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு…. உன்னுடைய கீழ் தரமான செயல்களால் உன்னுடைய தலைமுறைக்கு கேடு செய்து கொண்டிருக்கிறாய்… எல்லோருடைய சாபதிற்கு ஆளாகிக்கொண்டிருக்கிறாய்…. நீ பணம் கேட்டு மிரட்டியது இங்கு எல்லோரும் அறிந்ததே…. எல்லோரும் ஒன்னு சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்…. விரைவிலேயே உன்னுடைய ஒட்டுமொத்த வண்டவாளத்தையும் ஏற்றும் காலம் வெகு தூரம் இல்லை… எதுவும் இல்லாமல் ஆகிவிடக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொள்….குத்துயிரும், கொலையூறுமாய் இருந்து கொண்டிருக்கும் வேலையில் உதவி செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை.. உபத்திரம் செய்யவேண்டாம்… வேண்டாத பாவங்களை சாம்பாரிக்காதே!!!
வசமாக மாட்டிக் கொண்டேன். தினமும் ஒரு பொய் சொல்கின்றனர்.இனிமேல் ஏமாற மாட்டேன்.ஒன்று கூடுவோம்.வெற்றி நமதே.