அங்குசம் சேனலில் இணைய

நியோமேக்ஸ் வழக்கு : வேகம் காட்டும் நீதியரசர் பரதசக்ரவர்த்தி ! பின்னணி இதுதானா ?

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில், பிணை ரத்து தொடர்பான வழக்குகளை விசாரித்துவரும் நீதியரசர் பரதசக்ரவர்த்தி, அடுத்தடுத்து பத்துக்கும் மேற்பட்ட இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.

அவர் முன்பாக விசாரணையில் இருந்து வரும் வழக்குகளின் கோரிக்கை, “நீதிமன்றத்தின் நிபந்தணைகளை மீறிய நியோமேக்ஸ் குற்றவாளி இயக்குநர்களின் பிணையை ரத்து செய்ய வேண்டும்” என்பதுதான். ஆனால், அதை செய்யாமல், பல்வேறு உத்தரவுகளை அவர் எப்படி பிறப்பிக்க முடியும்?  பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பிலிருந்து நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள மறுக்கிறார். அது எனது வரம்பில் வராது என்கிறார். அப்புறம் பிணை ரத்து வழக்கில் மட்டும் இப்படியெல்லாம் உத்தரவுகளை பிறப்பிக்கலாமா? நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுகிறார். என்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பிலிருந்து ஒரு பிரிவினர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

நீதிபதி பரதசக்ரவர்த்தி
நீதிபதி பரதசக்ரவர்த்தி

மற்றொரு தரப்பில், “ நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் முன்னெடுப்பில்தான், இந்த வழக்கு இத்தனை தூரம் பயணித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு குறைந்தபட்சம் ஏதோ ஒன்றை செய்து தர வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த வழக்கை கையாண்டு வருகிறார்.” என்பதாக சொல்கிறார்கள்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

“அவர் யாருக்கு சாதகமாகவோ – பாதகமாகவோ எல்லாம் செயல்படவில்லை. சட்டப்பூர்வமான சமரச முயற்சியாகவே கையாண்டு வருகிறார். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில், சமரச தீர்வுக்கான அமர்வை தனிச்சிறப்பாக கையாண்டு வரும் நீதியரசர் பரதசக்ரவர்த்தி அதே கண்ணோட்டத்தில் இந்த வழக்கையும் கையாண்டு வருகிறார்.

 

நியோமேக்ஸ்
நியோமேக்ஸ்

குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில்கூட, முழுமையான முதிர்வுத்தொகையுடன் கூடிய தீர்வுத் திட்டம் என்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் தரப்பில் முன்வைத்தபோதுகூட, நீதியரசர் குறுக்கிட்டு இப்படியெல்லாம் விடாப்பிடியாக நிற்பதால்தான் ஐநூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் பொருளாதாரக் குற்றப்பிரிவில் தீர்வு காணாமல் முடங்கிக்கிடக்கின்றன என்பதாக பதில் அளித்திருந்தார்.”

இந்த பின்னணியிலிருந்து, நியோமேக்ஸ் வழக்கில் நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் அணுகுமுறையை, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறார்கள்? மாறாக, எவ்வாறு புரிந்து கொள்ளப்பட வேண்டியிருக்கிறது? என்பதை பற்றி அலசுகிறது, இந்த காணொளிப்பதிவு.

 

  —         அங்குசம் புலனாய்வுக்குழு.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.