நியோமேக்ஸ் 4-ம் கட்ட ஏலம்! 3,654 பிளாட்டுகள்…
நியோமேக்ஸ் ஏல விவகாரத்தில், மூன்று சுற்றுகளாக நடைபெற்ற டி.டி.சி.பி. அனுமதி பெறப்பட்ட வீட்டு மனைகளுக்கான ஏலத்தில் இடம்பெற்று பல்வேறு காரணங்களால் ஏலம் ரத்து செய்யப்பட்ட வீட்டு மனைகளுக்கான மறு ஏல அறிவிப்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்த நியோமேக்ஸின் 20 திட்டங்களை சேர்ந்த 3654 வீட்டுமனைகள் இந்த ஏலத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
முக்கிய தேதிகள் :
ஏலம் நடைபெறும் தேதி : 09.11.2026 காலை 10.30 மணி முதல் 24.11.2026 மாலை 5 மணி வரையில்.
கள ஆய்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு : 21.10.2026 முதல் 06.11.2026 வரையில்
கள ஆய்வு மற்றும் சொத்து விவரங்களுக்கு EOW போலீசாரை தொடர்புகொள்ள : 90803 81065 மற்றும் 87782 45559
பதிவு மற்றும் ஏல உதவி மையம் MSTC அலுவலர்களை தொடர்புகொள்ள : 94990 54101 – 94990 54102 – 94990 54103 – 94990 54104.
ஏலம் தொடர்பான அறிவிப்புக்கு : https://tneow.tn.gov.in/
MSTC இணையதளம் : www.mstcecommerce.com & https://www.mstcindia.co.in/
— அங்குசம் புலனாய்வுக்குழு.
Comments are closed, but trackbacks and pingbacks are open.