நியோமேக்ஸ் – இதுதான் பிரச்சினை… தேவை தனி கவனம் !
நியோமேக்ஸ் | இதுதான் பிரச்சினை… தேவை தனி கவனம் !
நியோமேக்ஸ் மோசடி வழக்கு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. முதல்கட்டமாக, நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களை மதிப்பீடு செய்வதற்கான கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கமிட்டியின் செயல்பாடுகளில் எழுந்த சிக்கல்களை கருத்தில் கொண்டு, அக்கமிட்டியை மறுசீரமைப்பு செய்து அதற்கும் சில அவகாசம் வழங்கியிருக்கிறார், நீதியரசர் பரதசக்ரவர்த்தி.
இந்நிலையில், நியோமேக்ஸ் விவகாரம் வழக்கானது தொடங்கி, தற்போது நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக விசாரணையை எதிர்கொண்டு வரும் வரையிலான கால கட்டத்தில் இந்த வழக்கு எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் குறித்து பேசுகிறது, இந்த காணொளி.
மிக முக்கியமாக, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வழக்கமாக விசாரிக்கும் மோசடி வழக்குகளை போல, நியோமேக்ஸ் போன்ற வழக்குகளை கையாண்டு விட முடியாது. இது ஏன் தனிக்கவனம் கொடுத்து விசாரிக்கப்பட வேண்டியிருக்கிறது, என்பதன் பின்னணி குறித்து அலசுகிறது, இந்த வீடியோ.
முழுமையான வீடியோவை காண :