பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம் தலைமை நெருக்கடி கொடுத்தால் தற்கொலை செய்வோம்
பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம்
தலைமை நெருக்கடி கொடுத்தால் தற்கொலை செய்து கொள்வோம்.
வெற்றி பெற்ற பெண் வேட்பாளர் கணவர் பேட்டி
தர்மபுரி மாவட்டம் ,பொ. மல்லாபுரம் பேரூராட்சியில் போட்டி வேட்பாளராக நின்று திமுக சார்பில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர் சாந்தி புஷ்பராஜ் என்பவரின் கணவர் புஷ்பராஜ்,
இவர் இன்று பொம்மிடியில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பாமக கட்சியும், ரகசிய கூட்டணி வைத்து தலைவர் தேர்தலில் நின்று வெற்றி பெற முயற்சித்தனர்
அதற்காகவே தாம் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்றதாகவும், தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்
திமுக தலைமை வற்புறுத்தினாலும் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம்
தொடர்ந்து தலைமை தங்களை ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்தி வருவதாகவும். அதிக நெருக்கடி ஏற்பட்டால் தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்
தங்கள் வெற்றிக்கு வாக்களித்த கவுன்சிலர்கள் 7 பேரும் அவரவர் வீட்டில் தான் உள்ளனர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பாமகவினர் ரகசிய கூட்டு வைத்தது தலைமைக்கு தெரியாது
எனவே நாங்கள் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம்
நடப்பது நடக்கட்டும் என செய்தியாளர் சந்திப்பில் கூறினார்