அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு: ‘ஆர்.கே.ட்ரீம் ஃபேக்டரி’ டி.ராதாகிருஷ்ணன், இணைத் தயாரிப்பு: புவனேஸ்வரன், ஷாஜு, ஜோதிலட்சுமி. டைரக்டர் & ஹீரோ: கார்த்தீஸ்வரன், லிவிங்ஸ்டன், ஸ்ரீநிதி, ஆதவன், மிருதுளா சுரேஷ், அகல்யா வெங்கடேசன், பிளாக் பாண்டி கோதை சந்தானம். ஒளிப்பதிவு: என்.எஸ்.ராஜேஷ், இசை: ஸ்ரீகாந்த் தேவா, எடிட்டிங்: சஜின், பி.ஆர்.ஓ.: நிகில் முருகன்.

இன்றைய ஆண்ட்ராய்டு போனில் டிசைன் டிசைனாக சீட்டிங் ஆட்டங்கள் தினம்தோறும் நடந்து அதில் சபலிஸ்டுகள் தினமும் வாண்டடாக போய் சிக்கி சின்னாபின்னமாகி லட்சக்கணக்கில் ஏமாறும் கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆன்லைன் ரம்மி ஒரு சீட்டிங் ரகம் என்றால், வாட்ஸ்-அப் வீடியோ காலில்  ‘நியூட்’ தரிசனம் பகீர் ரகம். அப்படி ஒரு வீடியோ காலில் விழுந்து 50 ஆயிரத்தை தண்டம் கட்டி கதறுகிறார் பிளாக் பாண்டி. இந்த பகீர் சீட்டிங் மூலம் மட்டுமே ஒரே நாளில் 500 கோடியை ஆட்டையப் போடுகிறது கே[ கார்த்தீஸ்வரன்] கும்பல்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அந்த சீட்டிங் கடையை குளோஸ் பண்ணிவிட்டு, 1 லட்ச ரூபாய்க்கு மாதம் 10 ஆயிரம் வட்டி என்ற பெயரில் நியூ சீட்டிங் சீட்டுக் கம்பெனியை வேறு ஒரு கெட்டப்பில் ஆரம்பிக்கிறது கே கும்பல். அதில் வந்து விழுந்து 50 லட்சத்தை இழந்து உயிரை விடுகிறார்கள் லிவிங்ஸ்டனும் அவரது மனைவியும். பெற்றோரை இழந்த மகள்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிதியிடம் புகார் கொடுக்கிறார்கள். இதை விசாரிக்க களம் இறங்கும் போதே அதே சீட்டிங் கும்பல் துபாய் ஷேக்குகள் வேசத்தில் 250 ரூபாய்க்கு ஆண்ட்ராய்டு போன் என்ற கடையை விரித்து 4000 கோடியை சுருட்டுகிறது. தனது நெருங்கிய தோழி ஒருத்தி அதே ’கே’ வின் காதல் வலையில் விழுந்து 500 கோடியை இழந்த தகவலும் ஸ்ரீனிதிக்கு கிடைக்கிறது.

நிர்வாகம் பொறுப்பல்லஅந்த ‘கே’கும்பல் சிக்கியதா? இல்லை தப்பியதா? இதான் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

நல்ல வெயிட்டான நம்பகத்தகுந்த கண்டெண்ட் தான். ஏன்னா விஜய் மல்லய்யா, நீரவ்மோடி, மொகுல் ஷோக்‌ஷி போன்ற காவாலிப்பயலுக பல ஆயிரம் கோடிகள் வங்கிப் பணத்தை கொள்ளையடித்துவிட்டு நாட்டைவிட்டு தபியோடி பல ஆண்டுகளாகிவிட்டன. வெளிநாடுகளில் உல்லாசமாக பொழுதைக் கழிக்கிறார்கள் அந்தக் கேடிகள். அவய்ங்கள்ல எவனையாவது பிடிக்க முடிஞ்சதா? இந்த கேடுகெட்ட ஒன்றிய அரசாங்கத்தால்? இந்த நித்தியானந்தாங்கிற கேடுகெட்ட சாமியார்பய பல இளம் பெண்களுடனும் ஆயிரக்கணக்கான கோடிகளுடனும் தலைமறைவாயிட்டான். கைலாசாங்கிற ஒரு நாட்டை உருவாக்கிட்டேன்ங்கிறான். அந்த நாட்டுக்குன்னு ரூயாய் நோட்டெல்லாம் அச்சடிச்சுட்டேங்கிறான். ஐநா சபையில ரெண்டு மூணு இளம் பெண் சாமியார் டிக்கெட்டுகளை பேச வைக்கிறான். இப்படிப்பட்ட சொறி நாயைக்கூட பிடிக்க முடியல இந்த கேடுகெட்ட ஒன்றிய அரசால்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதெல்லாம் நம் கண்ணுக்குத் தெரிந்த சாட்சிகளா இருக்கும் போது இந்த ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தில்  கார்த்தீஸ்வரன் பண்ணுவதையெல்லாம் நம்பினால் தப்பு ஒன்றுமல்ல. கார்த்தீஸ்வரனின் கூட்டாளிகளாக ஆதவன், அகல்யா வெங்கடேசன் மற்றும் இருவர் கூட்டணி போடும் சீட்டிங் ப்ளானெல்லாம் பக்காவாக இருக்கு. “பேராசைக்காரர்களை நம்ப வச்சு கழுத்தறுப்பதில் தப்பேயில்ல. டேர்ம்ஸ் & கண்டிஷன்னு 10 பாயிண்ட் போட்டிருக்கோம். அதில் 10-ஆவது பாயிண்டா நீங்க ஏமாந்தா நிர்வாகம் பொறுப்பல்லன்னு கொட்டை எழுத்துல போட்ருக்கோம். அதைக்கூட படிக்காம நம்ம கிட்ட பணத்தைக் கொட்டுகிற தற்குறிகளை நாம ஏமாத்துறதுல தப்பில்லை. சட்டத்துல ஓட்டை இருக்கலாம், ஆனா பெரிய ஓட்டைல தான் சட்டமே இருக்கு. அதுல தான் நாம பொழப்பை ஓட்டிக்கிட்டிருக்கோம்”  அங்கங்கே வசனங்களால் பொளந்து கட்டிருக்காரு கார்த்தீஸ்வரன்.

நிர்வாகம் பொறுப்பல்லஎன்ன ஒண்ணு இவருடைய பெர்ஃபாமென்ஸ் தான் கொஞ்சம் எரிச்சலைக் கிளப்புது. அதிலும் நான் ஏன் இப்படி ஆனேன்னு இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிதியிடம் சொல்லும் சீனில் கேமராவைப் பார்த்து [அதாவது நம்மைப் பார்த்து] பேசும் போது நமக்கு பகீர்னு ஆகிப்போச்சு.

காமெடியில் கொஞ்சம் முன்னேறியிருக்கார் சன் டிவி ஆதவன். இந்த சீட்டிங் கூட்டணியில் வரும் ‘ஆதித்யா டி.வி.’ அகல்யா வெங்கடேசன் பப்ளிமாஷ் மாதிரி இருக்கார். [ இப்படிச் சொன்னா கோவிச்சுக்குவாரோ என்னவோ}

இன்ஸ்பெக்டர் அன்பரசியாக ஸ்ரீனிதி நடிப்பு ரொம்பவும் சுமார் ரகம் தான். இரண்டு டப்பாங்குத்து பாடலுக்கு உதவியிருக்கார் ஸ்ரீகாந்த் தேவா.

கண்டெண்ட் ரீதியாக நல்ல வெயிட் தான். ஆனா படம் நாடகத்தனமாகவே போவது தான் பலவீனம்.

—   ஜெடிஆர்   

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.