பரிதாபங்களின் ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ பர்ஸ்ட் லுக்!
யூடியூப் ஏரியாக்களில் எகிடுதகிடாக ஹிட் அடித்து, பல பேரை வீடுகட்டி அடித்துக் கொண்டிருக்கும் உலகப் புகழ் பெற்ற ‘பரிதாபங்கள்’ கோபி, சுதாகர் காம்போவின் தயாரிப்பு & நடிப்பில் ஃபேண்டஸி ஃபேமிலி எண்டெர்டெய்ன் ஜானரில் உருவாகியுள்ள படம் ‘ ஓ காட் பியூட்டிஃபுல்’. அறிமுக இயக்குனர் விஷ்ணு விஜயன் இயக்கியுள்ளார்.
படத்தில் விடிவி கணேஷ், வின்சு சாம், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்கரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம், பிரசன்னா, ஹரிதா, உட்பட பலர் நடித்துள்ளனர். சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் ஷூட்டிங் நடத்தப்பட்டு, இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் ரிலீசாகியுள்ளது. படத்திற்கு ஒளிப்பதிவு : சக்திவேல், கே.பி.ஸ்ரீகார்த்திக், இசை : ஜே.சி.ஜோ, எடிட்டிங் : சாம் ஆர்டிஎக்ஸ், பி.ஆர்.ஓ. : சதீஷ் & சிவா [ எய்ம் ].
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே பல உண்மைகளைச் சொல்வதால், பரிதாபங்களின் புகழ் மேலும் மேலும் ஓங்கட்டும்.
— மதுரை மாறன்