கல்வியா … ? செல்வமா … ? மானமா … ? காசு தான் எல்லாமே ! பணியிட மாறுதல் கலந்தாய்வு சர்ச்சையில் பள்ளிக்கல்வித்துறை !

0

கல்வியா … ? செல்வமா … ? மானமா … ?  காசுதான் எல்லாமே ! பணியிட மாறுதல் கலந்தாய்வு சர்ச்சையில் பள்ளிக்கல்வித்துறை ! –  பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு சிக்கல் தொடர்பான வழக்கு விசாரணை ஜூலை-9 அன்று விசாரணைக்கு வரும் நிலையில், அதற்குள்ளாக அவசரம் அவசரமாக பணியிட மாறுதல் கலந்தாய்வை பள்ளிக்கல்வித்துறை முடுக்கி விட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முற்றுகைப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள் ஆசிரியர் கூட்டமைப்பான டிட்டோஜாக் அமைப்பினர்.

மேலும், பல இடங்களில் பணம் பெற்றுக்கொண்டு பல இடங்களில் விதிமுறைகளை மீறிய பணியிட மாறுதல் வழங்கப்படுவதாகவும் ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தப் பொறுப்பாளரும்; ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளருமான வா.அண்ணாமலை, வழக்கம் போல தனது பாணியில் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

https://businesstrichy.com/the-royal-mahal/

ஆசிரியர் பணியிட மாற்றம்
ஆசிரியர் பணியிட மாற்றம்

அவரது அறிக்கையில், “பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் நிர்வாக மாறுதலினை கையில் எடுத்துக் கொண்டு முற்றிலும் வியாபாரத் துறையாக செயல்பட தொடங்கி விட்டதா?

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

மானம் காத்திட வீதிக்கு வராவிட்டால் காலிப் பணியிடம் மட்டுமல்ல; பணியாற்றிக் கொண்டிருக்கும் இடமும் விலை மதிப்பீட்டை பொறுத்து இடம் மாறும் அபாய சூழ்நிலை வெகு தூரத்தில் இல்லை! போர்க்குண தழும்புகள் பெற்றுள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர் பேரினமே! பெரும்படையே! டிட்டோஜாக் அறைகூவலை ஏற்று தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் செய்யும் அறிவிப்பு ஜூலை 3 முதல் தொடங்க உள்ளது.

மாறுதல் கலந்தாய்வினை தடுத்து நிறுத்திட அரசாணை எண்:- 243 -க்கு திருந்திய அரசாணை வெளியிட வலியுறுத்தியும், ஜூலை 9-ஆம் தேதி பதவி உயர்வு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வரை ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வினை அதுவரை நிறுத்தி வைத்திட வலியுறுத்தி மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் 58 மாவட்ட த்தொடக்க கல்வி அலுவலகங்கள் முன்பும் மறியல் போராட்டத்தினை ஒன்றிய அளவிலான முன்னுரிமையினை மீண்டும் கொண்டு வந்து நிறுத்திட வைக்கும் போராட்டமாக நடத்தி காட்டுவோம்! அனைத்து ஆசிரியர்களும் முதல் நாள் மறியல் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுவோம்!

ஐபெக்டோ அண்ணாமலை
ஐபெக்டோ அண்ணாமலை

முசிறியில் நடந்ததென்ன? ஜூலை மாதம் ஒன்றாம் தேதி ஒன்றிய அளவில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் நடைபெற்றது. ஆனால், கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருந்து ஒரு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு முறைப்படி விண்ணப்பம் அனுப்பாதவருக்கு திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியத்திற்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

முசிறி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மேலிடத்தின் விசுவாசத்தினை சிரமேற்கொண்டு மாறுதல் பெற்றவரை அவரே அழைத்துச் சென்று பணியில் அமர்த்தி வந்துள்ளார். Self service என்பதா? பெருந்தொண்டு என்பதா?

டிட்டோஜாக் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் முசிறி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் மாலை வரை நடத்தி இருக்கிறார்கள். மாறுதல் ஆணை ரத்து செய்யப்படவில்லை. மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார்கள்.

டிட்டோஜாக் பெரும்படையே! மறியல் போராட்டத்தின் போது அன்றாடம் நடத்தி வரும் நிர்வாக மாறுதலினை பட்டியலிட்டு விலைப்பட்டியலினையும் கேட்டு தொகுத்து அறிவியுங்கள்! ஒரே மாதிரியான விலைப் பட்டியலினை முகவர்கள் மூலமாக வெளியிடுவதும் இல்லை முடிந்தவரை கைப்பற்றுகிறவர்கள் தான் அதிகம்.

அமைச்சர் அன்பில் மகேஸ்
அமைச்சர் அன்பில் மகேஸ்

எது வரினும் எதிர்கொள்வோம்! தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் காலத்தினை கொண்டு வந்து நிறுத்தி பார்த்தாலும் ஆறுதல் பெற முடியவில்லையே!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் செயல்பாடுகளை முதலமைச்சர் கண்கொண்டு உள்ளும் புறமும் ஆய்வு செய்து, உண்மைத் தன்மையை உணர்ந்திட வேணுமாய் பெரிதும் வேண்டுகிறோம்.

அரசுக்கும் கல்வித்துறைக்கும் வரலாற்றுப் பிழை ஏற்படாமல் பாதுகாப்போம்! கல்வியா?.. செல்வமா?.. மானமா?.. செல்வம்தான் ! மாற்றம் வரவேண்டுமென பெரிதும் வேண்டும்… இயக்கத்தின் மூத்தப் பொறுப்பாளர்…” என்பதாக தமது விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார் வா.அண்ணாமலை.

– அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.