புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் !
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் – புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் 01/07/24 அன்று நாட்டு நலப்பணித் திட்டத்தால் என் பாரத இணைய முகப்பு குறித்த கூட்டமானது நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பாலமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இணைய வழியில் மாணவிகள் பாரத இணைய முகப்பில் தங்கள் விபரங்களை பதிவு செய்யும் முறையையும், அதனால் மாணவிகள் பெறும் பயன் குறித்தும் விளக்கமாக உரையாற்றினார்.
நாட்டு நலப் பணித்திட்டம் 100 மாணவிகள் இதன் மூலமாகப் பயனடைந்தனர். 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கள் குறிப்புகளைப் பதிவு செய்து தங்களின் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொண்டனர்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி தலைமையில், கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி சற்குணா மேரி அவர்கள் முன்னிலையில் இக்கூட்டமானது இனிதே நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்முனைவர் மெர்லின் கோகிலா,திட்ட அலுவலர்கள் முனைவர் டாலி ஆரோக்கிய மேரி, முனைவர் ரோஸி லிடியா, பேராசிரியர் குழந்தை பிரியா, முனைவர் ஷீலா அவர்களும் கலந்து கொண்டு சிறப்புச் செய்தனர்.