கேஷ் ஆன் டெலிவரி : இதைமட்டும் செஞ்சிராதீங்க !
மாலை 5.30 மணிக்கு பள்ளிக்கூடத்தில் இருந்த போது Delivery ஒரு அழைப்பு. பார்சல் வந்திருப்பதாக அழைக்க வாட்ச்மேனை கேட்டுக்கு அழைத்து பெற்று கொள்ள சொன்னேன். பெரும்பாலும் எனக்கு Amazon , சில சமயங்களில் Flipkart போடுவதுண்டு. Delhivery ல் பெரும்பாலும் புத்தகங்கள் XSeed அனுப்புவார்கள்.
அவர் ஏதோ Cosmetics என்றும் 600 ரூபாய் ஜிபேயில் அனுப்ப சொல்லும் போது போகவில்லை. சரி நானே வருகிறேன் என்று சொல்லி பணம் கொடுத்து வாங்கி விட்டேன்.
ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே கல் மாதிரி என்று மாடி ஏறுவதற்குள் பிரித்தால் கவருக்குள் இன்னொரு கவர். அதில் COD 499 என போட்டிருந்தது. மீண்டும் பிரித்தால் அதில் பொன்வண்டு சோப் வைத்திருக்கிறார்கள்.
பைக் கிளப்ப போனவரை உடனே இடைமறித்து சொன்னால், ”இல்ல நீங்கள் காசு கொடுத்து நான் ஓகே பண்ணிட்டேன். நீங்க அனுப்பிய வெப்சைட்டில் புகார் கொடுங்க” என்றார். அதில் அனுப்புனர் முகவரி இல்லை.
நாம ஏதும் போடவேயில்லை என்பது நினைவுக்கு வந்து அவர்கள் மேனேஜரிடம் பேசினேன். யார் அனுப்பினார்கள் என்பது உங்களுக்கு தெரியணும். எனவே, காசு திருப்பி கொடுக்கவும் என்று புகார் செய்தவுடன் முதலில் பணியாளரிடம் பிடிப்பார்கள் என மறுத்தவர் பின் ஐடி போட்டோ எடுத்து கொண்டு 600 ரூபாயை திருப்பி கொடுத்து விட்டார். தப்பை மட்டும் பிரபலப்படுத்தாமல் ஒத்துழைத்த பணியாளரை பாராட்டவே புகைப்படம் எடுத்து கொண்டேன்.
நீதி : நம்பிக்கையான Amazon, Flipkart போன்றவற்றில் அவர்கள் own delivery ல் பெரிதாக பிரச்னை இல்லை (எனக்கு ஒரு முறை கூட பிரச்னை வந்ததில்லை).
ஏதேனும் உங்கள் பெயருக்கு வந்தால் அதுவும் கேஷ் ஆன் டெலிவரி என்றால் சந்தேகமாக இருந்தால் பிரிக்கவே வேண்டாம். பிரிக்க வேண்டி இருந்தால் அப்போதே பிரிக்கவும் மக்களே
பெரோஸ்கான்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.