நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்: தமிழக அரசுக்கு கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் நன்றி!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

நீதிமன்ற வழக்குகளின் காரணமாக நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருந்த இரண்டாம் நிலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் வெளிப்படையான முறையில் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டதற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் பி. டேவிட் லிவிங்ஸ்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த வார அங்குசம் வார இதழில்…

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இரண்டாம் நிலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான முதல்வர் பணியிடங்கள் வெளிப்படையான, நியாயமான மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடைமுறையின் அடிப்படையில் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசு கல்லூரிகளின் நிர்வாகப் பணிகள் மேலும் திறம்பட நடைபெறுவதற்கும், கல்லூரிகளின் கல்வி மற்றும் நிர்வாகத் தரம் மேம்படுவதற்கும், மாணவ–மாணவியரின் கல்வி நலன் பாதுகாக்கப்படுவதற்கும் சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரசுக் கல்லூரி மாணவ–மாணவியரின் நலனை முதன்மையாகக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்காக பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களையும், மாணவர் நலத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

முனைவர் பி. டேவிட் லிவிங்ஸ்டன்
முனைவர் பி. டேவிட் லிவிங்ஸ்டன்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

குறிப்பாக, தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையின் வளர்ச்சிக்கும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கல்வி மற்றும் நிர்வாக மேம்பாட்டிற்கும், ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ–மாணவியர் தரமான உயர்கல்வியைப் பெறுவதற்கும் பெரும் முக்கியத்துவம் அளித்து, பல்வேறு சிறப்புத் திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் முன்னெடுத்து வரும் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசுக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கல்விச் சூழலை வளப்படுத்துதல், மாணவ–மாணவியருக்கு உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், கல்வித் தரத்தை உயர்த்துதல் மற்றும் அரசு கல்லூரிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்தல் போன்ற உயரிய நோக்கங்களுடன் உயர்கல்வித் துறையை வழிநடத்தி வரும் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் நடவடிக்கைகள், தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக அமைந்துள்ளன.

தமிழ்நாடு உயர்கல்வியில் தொடர்ந்து முன்னணி மாநிலமாகத் திகழவும், குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவ–மாணவியருக்கு உயர்கல்வி எளிதாகக் கிடைக்கவும், அவர்களின் கல்வித் தரத்தையும் எதிர்கால வாய்ப்புகளையும் மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.

இதேபோன்று, இந்நடவடிக்கைக்கு உரிய வழிகாட்டுதலையும் நிர்வாக ஒத்துழைப்பையும் வழங்கிய உயர்திரு உயர்கல்வித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உயர்திரு கல்லூரிக் கல்வி ஆணையர், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) உள்ளிட்ட உயர்கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதன் மூலம் அரசு கல்லூரிகளின் நிர்வாகம் மேலும் வலுப்பெற்று, கல்லூரிகளின் கல்விச் செயல்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு, மாணவ–மாணவியருக்கு தரமான, சமத்துவமான மற்றும் சிறந்த உயர்கல்வியை வழங்குவதற்கான சூழல் மேலும் மேம்படும் என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அரசு கல்லூரிகளின் வளர்ச்சியையும், ஆசிரியர்களின் நலனையும், மாணவ–மாணவியரின் உயர்கல்வி முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் வலியுறுத்துகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.