நியோமேக்ஸ் : ஏலத்துக்கு வந்த ஏஜெண்டுகளின் வீடுகள் !
நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக நடைபெற்று வரும் நியோமேக்ஸ் தொடர்பான வழக்கில், நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் பொது ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, மூன்று கட்டங்களாக நடைபெற்ற ஏலம் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து அடையாளம் காணப்படும் சொத்துக்களையும் தொடர்ந்து ஏலத்துக்கு கொண்டு வரும் முயற்சியில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி ஏஜெண்டுகளாக அறியப்பட்ட சிவகங்கை சார்லஸ், தேவக்கோட்டை முத்துக்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகள் மற்றும் தரிசு நிலங்களுக்கான ஏல அறிவிப்பை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டிருக்கிறார்கள்.
முக்கிய தேதிகள் :
கள ஆய்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு : 01.09.2026 முதல் 24.09.2026 வரையில்
ஏலத்தை நடத்தும் MSTC அலுவலர்கள் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு அலுவலகத்தில் இருக்கும் நாட்கள் : 07.09.2026 முதல் 25.09.2026 வரையில்
ஏலம் நடைபெறும் தேதி : 29.09.2026 காலை 10.30 மணி முதல் 30.09.2026 மாலை 5 மணி வரையில்.
கள ஆய்வு மற்றும் சொத்து விவரங்களுக்கு EOW போலீசாரை தொடர்புகொள்ள : 90803 81065 மற்றும் 87782 45559
பதிவு மற்றும் ஏல உதவி மையம் MSTC அலுவலர்களை தொடர்புகொள்ள : 94990 54101 – 94990 54102 – 94990 54103 – 94990 54104.
ஏலம் தொடர்பான அறிவிப்புக்கு : https://tneow.tn.gov.in/
MSTC இணையதளம் : www.mstcecommerce.com & https://www.mstcindia.co.in/
– அங்குசம் புலனாய்வுக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.