நியோமேக்ஸ் முறைகேடு – மாநில அரசு தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

2009 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் தொழிலின் அடிப்படையில் நியோ மேக்ஸ் எனும் நிறுவனத்தை மதுரையை மையப்படுத்தி கமலக்கண்ணன் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் சேர்ந்து துவக்கி உள்ளனர். 10 ஏக்கர் முதல் 100 ஏக்கர் வரை நிலத்தை வாங்கி பிளாட்டுகளாக பிரித்து தேவைப்படும் நபர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சி பெற்றதை தொடர்ந்து 14.11.2013 ஆம் ஆண்டு கம்பெனி சட்டத்தில் பதிவு செய்துள்ளனர். மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகமாகவும் தமிழ்நாடு முழுவதும் பரவலாகவும் இந்த நிறுவனம் செயல்படத் தொடங்கியதை தொடர்ந்து 60 கிளை கம்பெனிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 12,000 பேர் ஏஜெண்டுகளாக உள்ளதாகச் சொல்லப்படுகிறது. சுமார் இரண்டு லட்சம் பேர் குறைந்தபட்சம் ரூபாய் ஒரு லட்சம் முதல் அதிக பட்சம் ரூபாய் ஒரு கோடி வரை முதலீடு செய்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததையொட்டி கம்பெனி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. முதலீடு செய்துள்ள சுமார் 2 லட்சம் பேரில் சுமார் 64 ஆயிரம் பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். 2023 ஆம் ஆண்டிலிருந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் சுமார் 70,475 ஏக்கர் நிலம் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்த நிறுவனத்திடம் உள்ளது. மேலும், விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மருத்துவமனைகளும், பள்ளிக்கூடம், கல்லூரி, ஹோட்டல், ரிசார்ட், பெட்ரோல் பங்க் ஆகியவையும் சுமார் 500 கோடி மதிப்புடன் சொத்துக்களாக உள்ளது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கும் முயற்சியில் சாதாரண ஏழைத் தொழிலாளிகள் தொடங்கி நடுத்தர வர்க்கத்தினர் வரை பணத்தை கட்டிவிட்டு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலமும் கிடைக்காமல், பணமும் திரும்பப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இரண்டு லட்சம் பேர் முதலீடு செய்திருந்தாலும் 64,000 பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில், நீதிமன்ற வரம்புக்குள் ரூபாய் 3000 கோடி மதிப்பிலான சொத்து நிறுவனம் சார்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய தற்போதைய சொத்து மதிப்பு ரூபாய் 8000 கோடி அளவுக்கு உள்ளதாக நிறுவனத்தில் பணியாற்றிய ஏஜெண்டுகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நிலம் வேண்டி பல லட்ச ரூபாய் முதலீடு செய்து பல ஆண்டு காலம் சுமார் 2 லட்சம் பேர் தவிக்கின்ற நிலையில், தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை விரைவுப்படுத்த வேண்மென்றும், நீதிமன்றத்திற்கு உட்படாத நிறுவனத்திடம் உள்ள நிலம் உள்ளிட்ட சொத்துக்களை முதலீடு செய்தவர்களுக்கு உரிய வகையில் பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்; முறைகேடு செய்த நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

(பெ.சண்முகம்)

மாநில செயலாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.