தாராபுரத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தாராபுரம் நகராட்சி வார்டு எண் 10-க்கு உட்பட்ட உப்புதுரைப்பாளையம், அரசு பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கழக வேட்பாளர் வழக்கறிஞர் எஸ். சுகன்யாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அப்பகுதி பொதுமக்களை நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அவர்களின் குறைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேலும், மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்து, அவற்றுக்கு உரிய தீர்வு காணும் வகையில் செயல்படக்கூடிய பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். கழக வேட்பாளர் வழக்கறிஞர் எஸ்.சுகன்யாவுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

தீவிர வாக்குச் சேகரிப்பில்இந்நிகழ்வுகளில் தாராபுரம் நகரக் கழகச் செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகர அவைத் தலைவர் கதிரவன், திருச்சி மாநகரச் செயலாளர் மு.மதிவாணன், மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன், பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ் மற்றும் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.