தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் ஹேக்கத்தான் ‘ஸ்மார்ட்டத்தான் 26’ போட்டிகள் நிறைவு!
திருச்சிராப்பள்ளி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியில் உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை மற்றும் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் (IIC) ஆகியவை இணைந்து நடத்திய ‘ஸ்மார்ட்டத்தான் 26’ எனும் 24 மணி நேர தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இப்போட்டியானது ‘Neyes Infotech Solutions’ நிறுவனத்தின் கூட்டு ஆதரவுடன், “கண்டுபிடி, உருவாக்கு, போட்டியிடு” என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள அமைந்துள்ள அதிநவீன ‘குவாண்டம் சோனில்’ நடைபெற்றது.
தேசிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த 24 மணி நேர ஹேக்கத்தான் போட்டியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 500-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள்ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பங்கேற்ற அணிகள் இடைவிடாது 24 மணி நேரமும் நவீன தொழில்நுட்ப சவால்களை எதிர்கொண்டு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் சார்ந்த தீர்வுகளையும் புத்தாக்க மென்பொருள் மாதிரிகளையும் திறம்பட உருவாக்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு, துணைவேந்தர் டாக்டர் சி. கே. ரஞ்சன்மற்றும் பதிவாளர் டாக்டர் எஸ். செல்வக்குமார் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியின் டீன் டாக்டர் எஸ். பத்மப்ரியா ஒருங்கிணைப்பில், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் திருமதி. எம். ஜெயஸ்ரீ, திருமதி. பி. அனிதா மற்றும் திருமதி. சி. மெர்லின் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாகப் பணியாற்றி நிகழ்வைச் சிறப்பாக வழிநடத்தினர்.
போட்டியின் நிறைவில், துறைசார் வல்லுநர்கள் மற்றும் நடுவர் குழுவினரால் திட்டப்பணிகள் மற்றும் செயல்முறைகள் தீவிர மதிப்பீடு செய்யப்பட்டுச் சிறந்த அணிகள் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற மாணவ அணிகளுக்குக்கவர்ச்சிகரமான ரொக்கப் பரிசுத் தொகைகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.






Comments are closed, but trackbacks and pingbacks are open.