ஜென் ஸி  : இதனால்தான் ஆர்.பி.ஐ கவலைப்படுகிறது !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இந்திய ரிசர்வ் வங்கியே வேதனைப்படும் அளவுக்கு 2கே கிட்ஸ்சும், ஜென் ஸி தலைமுறையினர் வங்கிகளில் பர்சனல் லோன், கிரிடிட் கார்டு மற்றும் கடன் ஆப்கள் வழியாக கடன்களை வாங்கி குவித்துள்ளார்களாம். 5 லட்சம் கோடி கடன் வரவேண்டியுள்ளது என க அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐ.டி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்கு நுழைபவர்களின் மாத சம்பளத்தை பார்த்து வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், கடன் செயலிகள் பலவிதமான கடன்களை தர ஓடிவருகின்றன. இவர்கள் சம்பளத்துக்காக வங்கி கணக்கை தொடங்கும்போதே கிரிடிட் கார்டையும் கையில் திணிக்கின்றன. இதனைப்பார்த்து ஆஹா என வாயை பிளக்கும் பெரும்பாலான இளைஞர்கள் தொலைநோக்கு சிந்தனையும், திட்டமிடல் இல்லாமல் கடன் வாங்குகிறார்கள்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்போதுயெல்லாம் அடிக்கடி லேஆப் செய்து கை நிறைய சம்பாதித்தவர்களை கையேந்தவிடுகிறது. ஒரு பெரியநிறுவனத்தில் வேலை செய்வதிலிருந்து ஒருவர் விலகியபின் அவர்களால் சிறிய நிறுவனத்தில் வேலை செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. பணம்மில்லையா இருக்கவே இருக்கிறது கிரிடிட் கார்டு. எனக்கு தெரிந்து ஐ.டி எம்ப்ளாயி இளைஞன் ஒருவன் 5 கிரிடிட் கார்டு வைத்திருந்தான்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இவர்களுக்கு திடீரென வேலை போனால் சம்பளம் வராது. சம்பளம் வரவில்லை என இ.எம்.ஐகள் கட்டாமல் இருக்கமுடியாது. நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கடன் வாங்கியிருந்தால் ஒருமாதம், இரண்டு மாதத்துக்கு பின்பு தருகிறேன் எனச்சொல்லலாம். வங்கிகளில் தேதி, நேரம் தவறாமல் கட்டவேண்டும். இதுப்பற்றியெல்லாம் தெரிந்தும் ஆங் பார்த்துக்கலாம் என எதிலும் அவசரம் என்பதுப்போல் செயல்படுகிறது இன்றைய தலைமுறை. அளவுக்குமீறி கடன் வாங்கி சிக்கிக்கொள்கிறது. அதன்பின் பயம் வந்து அந்த கடனை அடைக்க வேலை பிடிக்குதோ பிடிக்கவில்லையோ வேலைக்கு போகவேண்டும், உயரதிகாரிகளின் எவ்வளவு அடிமையாக நடத்தினாலும் சுயமரியாதை விட்டுவிட்டு வேலை செய்யவேண்டிய அவலம். பெண்களாக இருந்தால் இன்னும் சில சுரண்டல்களையும் சகித்துக்கொண்டும், காம்பர்மைஸ் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்..

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

கடன் வாங்காத என்றால் நான் சம்பாதிக்கறேன், நான் கட்டுவேன், என்னை கேட்க யார் எனக்கேட்டு போய்யா பூமர் என கிண்டலடிக்கிறது. இவுங்கயெல்லாம் பட்டால்தான் புத்தி வரும், பட்டு திருந்தட்டும் என நினைத்தாலும் அப்போது எல்லாம் கை மீறி போயிருக்குமே என அச்சப்படவேண்டி இருக்கிறது. இதனால்தான் ஆர்.பி.ஐ கவலைப்படுகிறது.

ராஜா ராஜ்பிரியன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.