திமுகவை எதிர்ப்பார்களாம் திருமாவுக்காக உருகுவார்களாம் – யார் அவர்கள்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

எனக்கு நிஜமாகவே ஒன்று புரியவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்நாட்டு சட்டசபைக்கான இடங்களை அதிகரித்துக்கொண்டே போகிறார்களா? பல தேர்தல்களாக அதே 234 இடங்கள்தானே. பிறகு திமுக மட்டும் எப்படி தன் கூட்டணிக் கட்சிகளுக்கு அடுத்தடுத்த தேர்தல்களில் அதிக சீட் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்?

எப்படி தேர்தலுக்குத் தேர்தல் ‘கட்சி வளர்ந்துள்ளது’ என்ற பெயரில் கூட்டணிக் கட்சிகளுக்கு முந்தைய தேர்தலை விட அதிக இடங்கள் ஒதுக்க முடியும்? கூட்டணிக் கட்சிகள் வளர்ந்துள்ளன என்றால், கூட்டணிக்கான தலைமைக் கட்சியும்  வளர்ந்திருக்கும்தானே? திமுக எவ்வளவு கூட்டங்களை நடத்தி உள்ளது? எவ்வளவு இளைஞர்களைச் சேர்த்துள்ளது? அப்படியென்றால் அதுவும் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் தனக்கான சீட்டுகளை ஏற்றிக்கொண்டே போனால் பிற கூட்டணிக் கட்சிகள் ஒப்புக்கொள்வார்களா?  குறிப்பாக, புதிய கட்சிகள் கூட்டணியில் சேரும்போது கூட்டணிக்கான தலைமைக் கட்சியில் இருந்து கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் வரை எல்லோரும் சீட்டுகளை விட்டுத் தருவதுதானே நியாயம்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

திருமாவளவன்
திருமாவளவன்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஆனால் இதையெல்லாம் பார்க்காமல் அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் ”திமுக தன் கூட்டணிக்கட்சிகளுக்கு சீட்டை அதிகம் கொடுக்க வேண்டும். திமுக விசிகவுக்கு 10க்கு மேல் தர வேண்டும். சி.பி.எம்முக்கு 15 தர வேண்டும்” என்றெல்லாம் சிலர் பேசுவது கேட்பதற்கு மிக நன்றாக இருக்கும், ஆனால் துளியும் நியாயம் இல்லாத பேச்சு அது.  அதிலும், இதுவரை திருமாவளவனை எதற்காகவும், எதிலும் ஆதரிக்காத ஆட்கள் எல்லாம் “அய்யோ அண்ணனை ஏமாத்திட்டீங்களே… அண்ணனுக்கு திமுக இப்படிலாம் பண்ணலாமா?” என கேட்கிறார்கள். காலக்கொடுமை இந்த ஆதவ் அர்ஜூனா எல்லாம் பேசுகிறான்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

கூட்டணி அந்தந்தக் கட்சிகள் சம்பந்தப்பட்டது, தலைமைகள் சம்பந்தப்பட்டது. ஒரு கூட்டணி என்பது மக்களுக்கும், நாட்டுக்கும், வெற்றிக்கும், கட்சிக்கும் எந்த அளவுக்குத் தேவை என்பதைப் பொறுத்து தலைவர்கள் முடிவு செய்வார்கள், செய்கிறார்கள். அதனால் அறிவுரைகளைத் தூக்கிக் கொண்டு வருவோர் சற்று….

—    டான் அசோக்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.