விஜயிடம் கட்சியை அடமானம் வைத்து விடுவார் போலிருக்கே … எடப்பாடிக்கு எதிர்ப்பு !
”வாழ்க்கை ஒரு வட்டம் இன்று தோற்பவன் நாளை ஜெயிப்பான். இன்று கீழே இருப்பவன் நாளை மேலே வருவான்.” என்று நடிகர் விஜய் நடித்த படங்களில் வசனம் பேசுவார். அதுபோல கால நிலையும் அதற்கு ஏற்றார் போல் மாறி மாறி வருகிறது. சமீபத்தில் நேற்று கூட பாலைவனமாக காட்சி தந்த துபாயில் பணி படர்ந்து பனிக்கட்டியாக மாறி வருகிறது. இதுதான் ஒரு வட்டம் போல! இதுபோலத்தான் தமிழக அரசியல் களமும் மாறி வருகிறது.
சரி விசயத்திற்கு வருவோம் நடிகர் விஜய் அரசியல் மாநாடு நடத்தினாலும் நடத்தினார் தமிழக அரசியலில் புயலைக்கிளப்பி வருகிறது. அரசியல் மேடையில் விஜய் ”எங்களுடன் யார் வருகிறார்களோ அவர்களுக்கு ஆட்சியில் பங்கு உண்டு” என்று பேசினார். இந்த பேச்சுதான் தமிழகத்தில் உள்ள திமுக அதிமுக தவிர அனைத்து கட்சியின் பார்வை நடிகர் விஜய் மீது விழுந்திருக்கிறது.
”எங்களது அண்ணன் விஜய் நேரடியாக திமுகவையும் பாஜகவையும் எதிர்த்து அரசியல் பண்ண ஆரம்பித்து விட்டார். காரணம் தமிழகத்தில் சொத்து வரி 200 % உயர்வு, மின் கட்டண உயர்வு; திமுகவினர் பணம் கேட்டு மிரட்டுவது; தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிகமாகி சட்டம் ஒழுங்கு சீர்கெடுவது என்று தமிழக மக்கள் திமுகவினர் மீது அதிருப்தியில் உள்ளனர்.
தொழிலாளர், வணிகர்களுக்கு விரோதமாக ஜி.எஸ்.டி.; கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல் விலை குறைக்காதது; சாமானிய மக்களும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய சொல்லி வற்புறுத்துவது என்று பாஜக அரசின் மீது உள்ள அதிருப்திக்கு எதிரான வாக்குகளையும்; பிரிந்து கிடக்கும் அ.இ.அ.தி.மு.க. வாக்குகளையும் குறி வைத்து தனது ஆட்டத்தை துவங்கி விட்டார்” என்கிறார்கள், பெயர் வெளியிட விரும்பாத மதுரை விஜய் ரசிகர்கள்.
“நடிகர் விஜய் கூட்டணி மந்திரி சபை என்றதும் முதலில் சிக்கியது விடுதலை சிறுத்தை கட்சி திருமாதானாம். ஆனால், இப்போதைக்கு வர முடியாது. 2026-இல் வருகிறோம் என்று திருமா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக விஜய் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.ர் அதுபோல் மற்ற பாமக ,தேமுதிக ஆகிய கட்சிகள் விஜய் பின்னால் வரிசையில் நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், அ.இ.அ.தி.மு.க. எடப்பாடியோ சமீபத்தில் நடந்த அ.இ.அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், “அடுத்து நாம் தான் ஆட்சியை பிடிக்க போகிறோம். விஜய் கூட்டணிக்கு ஏற்பாடு பண்ணிவிட்டேன். விஜய் கட்சிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப் போகிறேன். அதனால் யாரும் கவலை பட வேண்டாம். அது வரை யாரும் டி.வி.யில் பேட்டி கொடுக்காமல் மவுனமாக இருக்க வேண்டும். ஜெயக்குமார் மட்டும் பேட்டி கொடுக்கச் சொல்லி உள்ளேன்.” என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசினாராம்.
இந்த பேச்சை அதிமுக சீனியர் லீடர்கள் ரசிக்க வில்லையாம். அதற்கு மாறாக இவரின் சர்வாதிகாரத்தால் அ.தி.மு.க. ஒற்றுமை செய்வதை விட்டு விட்டு நடிகர் விஜய்யிடம் அதிமுகவை ஒப்படைத்து விடுவார் போலிருக்கு என்று சீனியர் அதிமுக நிர்வாகிகள் புலம்பி வருகிறார்களாம். ஆனால், நடிகர் விஜய் அதிமுக , திமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளின் வாக்குகளை குறி வைத்து விட்டார். நான் முதல்வர் என நம்மிடம் வருபவர்களுக்கு துணை முதல்வர் பதவியிலிருந்து அனைத்தையும் பிரித்து கொடுக்க தயாராகி விட்டார் என்றே தெரிய வருகிறது.” என்கிறார், ரத்தத்தின் ரத்தம் ஒருவர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.