அங்குசம் பார்வையில் … ஒரு தவறு செய்தால் !

“ஒருத்தனை முட்டாளாக்கணும்னா அவனோட புத்திக்கு லைட்டா வேலை கொடுக்கணும்’. ”பொம்பள போட்டோவை ‘பிளர்’ரா போட்டாலே போதும் கண்டிப்பா அந்த லிங்கை ஓப்பன் பண்ணுவானுக” ...

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

                                         அங்குசம் பார்வையில் … ஒரு தவறு செய்தால் !

தயாரிப்பு: ‘கே.எம்.பி. பிக்சர்ஸ்’ கே.மகேஷ் பாண்டியன். டைரக்‌ஷன்: மணி தாமோதரன். நடிகர்—நடிகைகள்: பாரி, ஸ்ரீதர், உபாசனா ஆர்.சி., தாஷ்மிகா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், சந்தோஷ், சுரேந்தர், ராமச்சந்திரன், தேனி முருகன், லக்‌ஷ்மண்.  இசை: கே.எம்.ராயன், ஒளிப்பதிவு: விஜய் கிருஷ்ணா & மகேஷ் ஸ்ரீதர், எடிட்டிங்: விது ஜீவா. பி.ஆர்.ஓ.நிகில் முருகன்.

ம்ம எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் கைகளில் லட்சங்கள் புரள ஆரம்பித்தாலே லவுசும் ரவுசும் தாங்க முடியாது. கோடிகள் புரள ஆரம்பித்தால் குஜிலிகளுடன் குஜால் தான், அஜால்குஜால் படங்கள் தான்.  அதிலும் இப்பெல்லாம் பி.ஜே.பி.காரர்கள் ரொம்பவே ‘எக்ஸ்பெர்ட்’. கர்நாடக சட்டசபையிலேயே புளூ ஃபிலிம் பார்த்த பி.ஜே.பி. எம்.எல்.ஏவைப் பற்றிய செய்திகள் ரிலீசாகி நாறியது. முக்கால்வாசி பி.ஜே.பி. எம்.பிக்கள், இளம் பெண்களுடன் கும்மாளம் அடிப்பதையே முழு நேரத் தொழிலாக செய்து வருகின்றனர்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

தமிழ்நாடு பி.ஜே.பி.யைச் சேர்ந்த கே.டி.ராகவனின் கேடுகெட்டதனம் அம்மணமாக ரிலீசாகி நாடே நாறியது. சந்தி சிரித்த பின் வீதிக்கு வராமலேயே, “அந்த வீடியோவுல இருப்பது நான் இல்லை. அது மார்ஃபிங்” என வீடியோ மூலமே விளக்கம் அளித்து மேலும் கேவலப்படுவார்கள்.

இந்தப் படத்தைப் பற்றி விமர்சனம் எழுதாம, இதெல்லாம் ஏன்யா எழுதுறேன்னு நீங்க கேட்கலாம். ஆனால் மேற்படி நாம் சொன்னதைத் தான் கொஞ்சம் மாற்றி யோசித்து ‘ஒரு தவறு செய்தால்’ என்ற சரியான படத்தை, மிகச் சரியாக தேர்தல் நேரத்தில் ரிலீஸ் பண்ணி அதிரடி கிளப்பியிருக்கிறார்கள் தயாரிப்பாளர் மகேஷ் பாண்டியனும் டைரக்டர் மணி தாமோதரனும்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

சினிமாவில் டைரக்டராக வேண்டும் என்பதற்காக சென்னையில் வந்து தங்கி, வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல், ஒரு இரவு நேராத்தில் ஹவுஸ் ஓனரால் விரட்டப்பட்டு, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருகிறார்கள் பாரியும் அவரது நண்பர்களும்.  அங்கே கூலியாக இருக்கும் ராம்ஸின் ஐடியாப்படி,  சட்டமன்றத் தேர்தல் என்பதால் க்ரிமினல் வேலையை ஆரம்பிக்கிறார்கள். அதாவது கே.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் பணக்கார சுயேட்சை வேட்பாளர் நமோ நாராயணனுக்கு ஆதரவாக, ஆளும் கட்சி வேட்பாளர் தனியாக இருக்கும் வீடியோ க்ளிப்பிங்கை ஒரு இளம் பெண்ணுடன் மேட்ச் பண்ணி, நமோவுக்கு அனுப்பி பேரம் பேசுகிறார்கள். எல்லாமே செல்போன் காண்டாக்ட் மூலம் தான்  பேரம் நடக்கிறது.

தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஓட்டுக்கு ரேட் பேசுவது போல, தொகுதியில் இருக்கும் ஒன்றரை லட்சம் வாக்காளர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் இந்த ஃபேக் வீடியோவை அனுப்ப, 17 கோடி பேரம் பேசுகிறார்கள். நமோவும் ஒத்துக் கொள்கிறார். அதன் பின் கிரிமினல் ஆட்டத்தில் பாரியும் அவரது நண்பர்களும் ஜெயித்தார்களா? 17 கோடி கிடைத்ததா? என்பதற்கான விடை தான் ‘ஒரு தவறு செய்தால்’.

இரண்டேகால் மணி நேரப்படமும் செம ஜெட் வேகத்தில் போகிறது. இப்படியொரு பிரிலியண்டான ஸ்கிரிப்ட் சினிமாவைப் பார்த்து ரொம்ப நாளாச்சு.  மனுசப்பிறவிகளை ஆண்ட்ராய்டு போனும் அது படுத்தும்பாட்டையும் சூப்பர் இண்ட்ரஸ்டிங்காக கதை சொல்லி பட்டையைக் கிளப்பிவிட்டார் டைரக்டர் மணி தாமோதரன்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதே போல் டுபாக்கூர் யூடியூப்பர்களையும் கூலிப்படை ( சவுக்கு சங்கர் மாதிரியான பிளாக்மெயில் பேர்வழிகள்) யூடியூப்பர்களையும் பொளந்துகட்டீட்டாரு டைரக்டர்.

பாரிக்கும் உபாசனாவுக்குமிடையே கவிதையாக ஒரு ஃப்ளாஷ்பேக் காதல் ரசனையாகவும் இருக்கு, உபாசனாவின் குழந்தைக்கு கேன்சர் சிகிச்சைக்காக சென்னை வந்து ஏமாறும் கதை செண்டிமெண்டாகவும் இருக்கு. இந்த இடத்திலிருந்து தான் படத்தின் ஸ்பீட் ஆரம்பிக்கிறது.

மார்ஃபிங் வீடியோவை கிரியேட் பண்ணுவதிலும் வீடியோ காலில் ஃபேஸ் மாஸ்க் ஆப் யூஸ் பண்ணி சீட்டிங் பண்ணுவதிலும் எக்ஸ்பெர்ட்டாக வரும் தாஷ்மிகாவும் பின்னிப் பெடலெடுக்கிறார். பாரியின் நண்பர்களாக வருபவர்களும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.

“ஒருத்தனை முட்டாளாக்கணும்னா அவனோட புத்திக்கு லைட்டா வேலை கொடுக்கணும்’. ”பொம்பள போட்டோவை ‘பிளர்’ரா போட்டாலே போதும் கண்டிப்பா அந்த லிங்கை ஓப்பன் பண்ணுவானுக” “என்னம்மா இதெல்லாம் பார்த்தா பயந்துருவோமோ” தாஷ்மிகாவிடம் எம்.எஸ்.பாஸ்கர் கேட்கும் போது, “பயமா இல்லையா? அப்படின்னா இன்னொரு வீடியோ அனுப்பட்டுமா?” என தாஷ்மிகா போட்டுத் தாக்கியதும் பாஸ்கர் பயம் கண்களில் தெரிவது என டயலாக்கிலும் சீன் சீக்வென்ஸிலும் சிக்ஸர் அடிக்கிறார் டைரக்டர்.

ஓட்டுக்குப் பணம் வாங்கும் கேவலம் குறித்து தனது மனைவியிடம் மாற்றுத்திறனாளி கணவன் பேசும் அந்த டயலாக் போர்ஷன் செமத்தியான செருப்படி. இசையமைப்பாளரும்  ஒளிப்பதிவாளரும் நேர்த்தியான உழைப்பைத்  தந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்—நடிகைகளைப் பற்றியோ, அவர்களின் நடிப்பைப் பற்றியோ நாம் குறை சொல்ல விரும்பவில்லை, சொல்லவும் கூடாது. அதே நேரத்தில் இந்த மாதிரி ஸ்கிர்ப்ட்டில் கொஞ்சம் வேல்யூ உள்ள ஆர்ட்டிஸ்டுகளை கொண்டு வந்திருந்தால், படம் தாறுமாறாக ஹிட்டாகியிருக்கும்.

ஒரு வேளை அந்த மாதிரி ஆர்ட்டிஸ்டுகளிடம் பேசி, அதில் டைரக்டர் தோற்றுப் போயிருக்கலாம். இருந்தாலும் தப்பு சொல்வதற்கு இடம் கொடுக்காமல் ‘ஒரு தவறு செய்தால்’ படத்தைப் படைத்ததற்காக டைரக்டர் மணி தாமோதரனை வாழ்த்துவோம்.

மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.