மோடிக்குப் பிடித்த உப்புமாவும் … உருப்படாத இந்தியாவும் …

பத்து வருசமா ‘ஷோ’ காட்டியது பத்தாதுன்னு வருகிற 09,10,11,13 தேதிகளில் தமிழ்நாட்டில் மோடி ரோட் ஷோ காட்டப் போறராம். எந்த டிசைன்ல உருட்டப் போறாரோ இந்த ‘பொய் ராஜா’.

0

மோடிக்குப் பிடித்த உப்புமாவும் … உருப்படாத இந்தியாவும் …

சினிமா ஏரியாக்களில் ‘உப்புமா’ கம்பெனிகளின் ‘உப்புமா படம்’ என்று சொல்வார்கள். அதுக்கு என்ன அர்த்தம்னா..? சினிமா தயாரிக்கப் போவதாகச் சொல்லி இரண்டு டேபிள், நான்கு சேர்களுடன் ஆபீஸ் போடுவார்கள். அப்புறம் சில சாமி படங்களுக்கு முன்னால் இரண்டு இளம் பெண்களை நிற்க வைத்து,  பூஜை போடுவார்கள். தங்களுக்கு ‘செட்’ டாகும் பி.ஆர்.ஓ.வை செட் பண்ணி பூஜை ஸ்டில்களை ரிலீஸ் பண்ணுவார்கள். இந்த வகையில் அவர்களுக்கு சில ஆயிரங்கள் தான் செலவாகும்.

அதற்குப் பிறகு அவர்கள் படம் எடுப்பார்களா? எடுத்தாலும் ரிலீஸ் பண்ணுவார்களா? ரிலீஸ் ஆனாலும் அந்தப் படம் உருப்படுமா? என்றெல்லாம் அவர்களுக்கே தெரியாது. இதான் உப்புமாக் கம்பெனிகள்.

அந்த டைப் தான் நம்ம பிரதமர் மோடியும். சில நாட்களுக்கு முன்பு தந்தி டி.வி.க்கு அளித்த ஸ்பெஷல் பேட்டியில் தனக்குப் பிடித்த தமிழ்நாட்டு உணவு உப்புமா தான் என பெருமிதம் பொங்கச் சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

4 bismi svs

உப்புமா சினிமாக் கம்பெனி மாதிரி தான் பி.ஜே.பி.யின் ஆட்சிக் கம்பெனியும். மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்ட ஒத்த செங்கல்லை வச்சு அஞ்சு வருசம் ஆச்சு. ஏற்கனவே ஓடிக்கிட்டிருந்த சதாப்தி எக்ஸ்பிரஸை ‘வந்தே பார்த்’னு பெயர் மாத்தியாச்சு. ஏழரை லட்சம் கோடி ஊழல் பண்ணியாச்சு. 6 லட்சம் கோடிய அம்பானி & அதானி கும்பலுக்கு தூக்கிக் கொடுத்தாச்சு. அரசாங்கத்தின் துறைமுகங்கள், ஏர்-இந்தியா, எல்.ஐ.சி. இதையெல்லாம் தனியாருக்கு வித்தாச்சு. லடாக்கிலும் அருணாச்சலப் பிரதேசத்திலும் சில ஆயிரம் சதுர கிலோமீட்டர் ஏரியாக்களை சீனாவுக்கு குத்தகைக்கு விட்டாச்சு. இப்ப கச்சத்தீவைப் பத்தி கத்த ஆரம்பிச்சாச்சு.

வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிய வங்கிக் கொள்ளையர்களான விஜய் மல்லய்யா, நீரவ் மோடி, மொகுல் சோக்‌ஷி மாதிரியான அயோக்கியப் பயல்களை பிடிக்க வக்கில்லாம போச்சு.  முக்கால்வாசி மீடியாக்களை மொத்த காண்ட்ராக்ட் எடுத்து கூலிக்கு கூவச் சொல்லியாச்சு. பொய் வாந்தியை வழிச்சு நக்கச் சொல்லியாச்சு.

எல்லாத்தையும் சோலி முடிச்சாச்சு. இந்தியா நாசமாப் போச்சு. பத்து வருசமா ‘ஷோ’ காட்டியது பத்தாதுன்னு வருகிற 09,10,11,13 தேதிகளில் தமிழ்நாட்டில் மோடி ரோட் ஷோ காட்டப் போறராம். எந்த டிசைன்ல உருட்டப் போறாரோ இந்த ‘பொய் ராஜா’.

ஸ்ஸ்ஸ்… ஸப்பா.. வெப்ப அலையால கொப்புளம் வந்த கொடுமையைக் கூட தாங்கிக்கலாம். இந்த ‘ரோட் ஷோ’ ரணத்தை எப்படித் தான் தாங்கப் போறமோ…?

கரிகாலன்   

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.