பத்மநாப சுவாமி கோயில் ஐப்பசி திருவிழா! திருவனந்தபுரம் விமான நிலையம் மூடல் !

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ஐப்பசி திருவிழா ஆறாட்டு ஊர்வலம்  விமான நிலையம் இன்று (20ம் தேதி ) மாலை 5 மணி நேரம் மூடப்படுகிறது.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் ஐப்பசி திருவிழா  ஆறாட்டு ஊர்வலத்தை முன்னிட்டு திருவனந்தபுரம் விமான நிலையம் இன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை மூடப்படுகிறது.

பிரசித்தி  பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ஐப்பசி திருவிழா கடந்த 11ம் தேதி தொடங்கியது. திருவிழா இறுதி நாளான இன்று மாலை சங்கு முகம் கடற்கரையில் சுவாமிக்கு ஆராட்டு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணி அளவில் யானை மீது சுவாமி விக்ரகம் வைக்கப்பட்டு கோயிலில் இருந்து ஆறாட்டு ஊர்வலம் புறப்படும். இந்த ஊர்வலம் திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை வழியாக சங்கு முகம் கடற்கரை அடையும். கடலில் ஆறாட்டை முடித்த பிறகு ஆறாட்டு ஊர்வலம் அதே பாதை வழியாக திரும்பி பத்மநாபசுவாமி கோயில் அடையும்.

திருவனந்தபுரம்  விமான நிலையம்  வருவதற்கு முன்பிருந்தே பங்குனி, ஐப்பசி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஆறாட்டு ஊர்வலம் விமான நிலையத்தின் ஓடுபாதை அமைந்துள்ள பாதை வழியாகத்தான் சென்று வந்தது.

1932 ம் ஆண்டு விமான நிலையம் செயல்பட்டுக்கு வந்த பின்னரும் இதே நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் ஒரு சில மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டு விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படும். இந்த வருட ஐப்பசி திருவிழாவை முன்னிட்டு இன்று (20ம் தேதி)  மாலை ஆறாட்டு ஊர்வலம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விமான  நிலையம் மூடப்படும். இந்த சமயத்தில் செல்ல வேண்டிய பயணிகள் தங்களது விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு புதிய நேரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.