படிக்க ஆசைபட்டு – வீட்டு வேலை – கொடூர தாக்குதல் – வழக்கு பதிவு – தலைமறைவு – மருமகள் ஆடியோ ! எம்.எல்.ஏ. குடும்பத்தில் நடப்பது ? என்ன ?

0

படிக்க ஆசைபட்டு – வீட்டு வேலை – கொடூர தாக்குதல் – வழக்கு பதிவு – தலைமறைவு – மருமகள் ஆடியோ  ! எம்.எல்.ஏ. குடும்பத்தில் நடப்பது என்ன ?

Andro Mathivanan - Merlin
Andro Mathivanan – Merlin

வலிதாங்காமல் நான் அழ கூடவே அவர்கள் குழந்தையும் அழ … குழந்தையை சமாதானப்படுத்த பாட்டுப்பாடி ஆடச் சொன்னார்கள் !
// ஒரு முறை என்னை கடுமையாக அடிப்பதை அவர்களது குழந்தை பார்த்துவிட்டு அழுதாள். அவளை சமாதானப்படுத்துவதற்காக என்னை பாட்டு பாடிக் கொண்டே ஆடச் சொன்னார். நானும் ஆடினேன். பின்னால் நின்று இடி கல்லால் என்னை முதுகில் குத்தி நான்றாக ஆடுடி என்று தாக்கினார். இதனால் எனக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. //

வீட்டு வேலைக்கு அமர்த்திய பெண்ணை சித்திரவதைக்குள்ளாக்கிய சர்ச்சையில் சிக்கிய பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மார்லீனா அன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

மருமகள் ஆடியோ லிங்

மேற்படி வீட்டில் தான் அனுபவித்த சித்திரவதைகளை பட்டியலிட்டு நீண்ட புகார் கடிதம் ஒன்றை, தலைமை செயலருக்கு அனுப்பியிருக்கிறார் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்.அவரது புகார் கடிதம் பின்வருமாறு: ”நான் மேற்கண்ட முகவரியில் என் அம்மா செல்வி (39), தம்பி சதிஸ் (16) ஆகியோருடன் வசித்து வருகின்றேன். நான் தாழ்த்தப்பட்ட இந்து பட்டியல் சாதி ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவள். எனக்கு வயது 18.

பாதிக்கப்பட்ட மாணவி
பாதிக்கப்பட்ட மாணவி

நான் ம.குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2023-ஆம் வருடம் பயோமேத்தமேடிக்ஸ் 12-ஆம் வகுப்பு தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 433 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன். எனக்கு நீட் தேர்வு எழுத வேண்டும் என்று ஆசை இருந்தது. எனது தாயார் சென்னையில் ஒரு மருத்துவர் வீட்டில் பணி செய்து வருகிறார். பொருளாதார ரீதியாக நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தோம். ஆகவே, படிப்பதற்கு பணம் தேவைப்பட்டதால் வேலை செய்து படிக்கலாம் என்று நானும் எனது தாயாரும் முடிவெடுத்தோம்.

அதனடிப்படையில் ஏஜன்ட் ஒருவர் மூலமாக வீட்டு வேலைக்காக சென்னை திருவான்மியூரில் உள்ள கிரீன் மேடோஸ் என்கிற அபார்ட்மெண்டில் குடியிருக்கக்கூடிய மார்லீனா அன் – ஆண்டோ மதிவாணன் வீட்டில் வீட்டு வேலைக்காக அமர்த்தப்பட்டேன். ஆண்டோ மதிவாணனின் தந்தை இ.கருணாநிதி. இவர் சென்னை, பல்லாவரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மருமகள் ஆடியோ லிங்

நான் கடந்த 26.04.2023 அன்று வேலைக்கு சேர்க்கப்பட்டேன். வேலையில் சேரும் போது சமையலுக்கு காய்கறிகளை நறுக்கி கொடுக்க வேண்டும். வீட்டினை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறிதான் வேலைக்கு எடுத்தனர். மாதம் தோறும் எனக்கு ரூ.16 ஆயிரம் சம்பளம் என்று பேசப்பட்டது. எனக்கு சொன்ன வேலையைவிட காலை, மதியம், இரவு என்று உணவினை சமைக்க கூறினார் மார்லீனா அன். எனக்கு சமையல் அவ்வளவாக தெரியாது என்று கூறினேன்.

இதை மனதில் வைத்துக் கொண்டு வேலைக்கு சேர்ந்த இரண்டாவது நாளே வேலை சரியாக செய்யவில்லை என்று கூறி மார்லீனா அன் என்னை கன்னத்தில் அறைந்தார். அதுமட்டுமல்லாமல் என் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டார். என் செல்போனை கேட்டதற்கு தரையில் ஓங்கி அடித்து செல்போனை உடைத்து கொடுத்தார். அதுமுதல் என் செல்போன் சரியாக வேலை செய்யவில்லை.

எவிடன்ஸ் கதிர் - பாதிக்கப்பட்ட மாணவி -
எவிடன்ஸ் கதிர் – பாதிக்கப்பட்ட மாணவி –

மறுநாளும் அடிக்க ஆரம்பித்தார். நான் அவரிடத்தில் எனக்கு வேலை பிடிக்கவில்லை. நான் வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறி அழுதேன். உடனே ஏஜன்ட் சித்ராவையும் என் தாயார் செல்வி ஆகியோரை மார்லீனா அன் வீட்டிற்கு அழைத்தார். நான் ஆறு மாதம் வேலை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார். இதுமட்டுமல்லாமல் என் செல்போனை என் அம்மா செல்வியிடம் கொடுத்த மார்லீனா அன், இந்த போன் இருப்பதால் ரேகா ஒழுங்காக வேலை செய்யமாட்டாள். யார் கூடவாவது பேசுவாள், கெட்டுப்போய்விடுவாள். ஆகவே, நீங்களே எடுத்து செல்லுங்கள் என்று கொடுத்துவிட்டார்.

மார்லீனா அன் எனக்கு சம்பளம் கொடுக்கவில்லை. வேலையில் ஏற்படுகிற சின்ன தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டி கடுமையாக அடிக்க ஆரம்பித்தார். செருப்பு, துடைப்பகட்டை, கரண்டி உள்ளிட்ட பொருட்களால் என்னை கடுமையாக அடிக்க ஆரம்பித்தார். என் அம்மா செல்வி, எனக்கு போன் செய்யும் போது கூடவே நிற்பார். நான் சந்தோசமாக இருக்கிறேன் அம்மா, எனக்கு வேலை பளு அதிகமாக இல்லை என்று சொல்ல சொல்லுவார்.

Andro Mathivanan - Merlin
Andro Mathivanan – Merlin

அப்படி நான் சொல்லவில்லை என்றால் அலைபேசியை மியூட்டில் வைத்துவிட்டு என்னை அடிப்பார். வாரத்திற்கு 2 முறை என் அம்மா போன் செய்யும் போது என்னை அதிகபட்சம் 1 – 2 நிமிடம் மட்டும் பேச வைப்பார். நான் வேலைக்கு சேர்ந்த மறுநாளே என்னிடத்தில், நான் எம்.எல்.ஏ. மருமகள். நான் நினைத்தால் உன்னையும் உன் அம்மாவையும் போலீஸிடம் சொல்லி சிறையில் தள்ளுவேன் என்று கூறினார். நானும் அவர்கள் பெரிய இடம் என்று பயந்து இங்கு நடப்பதை என் அம்மாவிடம் சொல்லவில்லை.

இரண்டு மாதம் சுடந்து என் அம்மா செல்வி, மார்லீனா அன்னிற்கு போன் செய்து என் மகளை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுங்கள். நான் அவளை படிக்க வைக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு மார்லீனா அன், உங்க மகளை நான் ஆன்லைன் மூலமாக பி.பி.ஏ. படிக்க வைக்கப் போகிறோம். அதனால் நீங்கள் கவலைப்படாதீர்கள். நாங்களே அவளை நன்றாக படிக்க வைத்து நல்ல வேலை வாங்கி கொடுப்போம் என்று கூறினார்.

பின் கடந்த 3 மாதத்திற்கு முன்பு, என் அம்மா செல்வி, மார்லீனா அன்னிற்கு போன் செய்து, நீங்கள் எந்த சம்பளமும் இதுவரை கொடுக்கவில்லை. நாங்கள் பணம் இல்லாமல் சிரமப்படுகிறோம். பாதி சம்பளமாவது கொடுங்கள். என் மகளை படிக்க வைக்கிறேன் என்று சொன்னீர்கள். ஆனால், படிக்க வைக்கவில்லை என்று கேட்டதற்கு, உங்கள் மகளை நான் ஆன்லைன் வகுப்பில் ரூ.2 இலட்சம் செலவு செய்து படிக்க வைக்கிறேன் என்று கூறினார். என் அம்மாவும் மகள் படிக்கிறாள் என்பதற்காக சம்பளம் குறித்து எதுவும் கேட்கவில்லை.

Andro Mathivanan - Merlin - MLA
Andro Mathivanan – Merlin – MLA

மார்லீனா அன், நாளுக்கு நாள் என்னை தினமும் கடுமையாக அடிக்க ஆரம்பித்தார். அவர் கரண்டி, செருப்பு, துடைப்பக்கட்டை போன்றவற்றால் அடிக்கிறபோது என் தலை முகம், கால் முட்டி, கை முட்டி என்று எல்லா இடங்களில் அடிப்பார். ஒரு நாள் காலை 11.00 மணி முதல் இரவு 10.00 வரை அடித்தார். எனக்கு இரத்த காயங்கள் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் கத்திரிக்கோலை கொண்டு என் முடியை வெட்டிவிட்டு தாக்கினார். இதனால் என் உடல் முழுவதும் கடுமையாக காயங்கள் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கைகளை தூக்க சொல்லி குழம்பு சுரண்டியை கொண்டு என் மார்பில் அடிப்பார். என்னை கீழே படுக்க வைத்து என் முகத்தில் செருப்பு காலால் எட்டி உதைப்பார். இரண்டு கைகளிலும், கன்னத்திலும் தாடையிலும் சூடு வைத்துள்ளார்.
ஒரு நாள் என்னை ஆடைகளை கழட்டி நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கினார். காலால் எட்டியும் உதைத்தார். அவர் என்னை கடுமையாக தாக்குகிற போதெல்லாம் வீட்டில் இருக்கக்கூடிய சிசிடிவி கேமராவை ஆப் செய்துவிடுவார். ஒரு முறை அவர்களது 4 வயது மகள் ஆண்டோ மதிவாணனிடம் அம்மா தொடர்ந்து ரேகாவை அடிக்கிறார் என்று சொன்னதற்கு அவர் கேமராவை எடுத்து பரிசோதனை பண்ணி பார்த்தார். அப்போது அந்த நாள் அணைக்கப்பட்டிருந்தது.

அந்த இளம் பெண்
அந்த இளம் பெண்
4 bismi svs

ஆண்டோ மதிவாணனும் என்னை இரண்டு முறை அடித்திருக்கிறார். ஒரு முறை தனது மனைவி மார்லீனா அன்னிடம், நீ அந்த நாயை என்ன வேண்டுமானாலும் செய்து கொள். ஆனால் என் குழந்தை முன்னால் அடிக்காதே அதனால் நம் குழந்தை பாதிக்கப்படுகிறது. அது முதல் அவர்களுக்கு இடையே பிரச்சனை வந்தது. அதற்கும் நான்தான் காரணம் என்று கூறி மார்லீனா அன் என்னை கடுமையாக அடித்து சித்திரவதை செய்தார்.

ஒரு முறை என்னை கடுமையாக அடிப்பதை அவர்களது குழந்தை பார்த்துவிட்டு அழுதாள். அவளை சமாதானப்படுத்துவதற்காக என்னை பாட்டு பாடிக் கொண்டே ஆடச் சொன்னார். நானும் ஆடினேன். பின்னால் நின்று இடி கல்லால் என்னை முதுகில் குத்தி நான்றாக ஆடுடி என்று தாக்கினார். இதனால் எனக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.

மாணவி வாக்குமூலம்

நான் ஏதேனும் வேலையில் தவறு செய்துவிட்டால், மிளகாய் தூளை தண்ணீரில் கரைத்து குடிக்க சொல்வார். குடிக்காமல் இருந்தால் கரண்டியை எடுத்து தாக்குவார். இதுவரை மூன்று முறை நான் மிளகாய் பொடி தண்ணீரை குடித்திருக்கிறேன்.

காலை 6.30 மணி முதல் இரவு 1.00 மணிவரை வீட்டு வேலை செய்ய வேண்டும். நான் செய்த ரேசன் அரிசி உணவினை பிரிட்ஜில் வைத்து சாப்பிட நிர்பந்திக்கப்பட்டேன். கடந்த 8 மாதமாக நான் அடிவாங்காத நாட்களே கிடையாது. தினமும் என்னை அடித்து துன்புறுத்தினார். நீயும் உன் அம்மாவும் ரெட் லைட் ஏரியாவிற்கு சென்றால் நன்றாக சம்பாதிப்பீர்கள். உங்கள் வீட்டில் வைத்தே தொழிலை செய்தால் நன்றாக சம்பாதிப்பீர்கள் என்று இழிவுபடுத்தினார். அதுமட்டுமல்லாமல் என்னிடம், படிப்பிற்காக 2 லட்ச ரூபாய் கட்டியிருக்கிறோம். இதனால் 3 வருடம் நீ வேலை செய்ய வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் என் மீதும் என் தம்பி மீதும், என் அம்மா மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என்று எழுதப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார்கள்.

Andro Mathivanan
Andro Mathivanan

அதுமட்டுமல்லாமல் என்னை தேவிடியா என்றும் பறச்சி என்றும் ஆபாசமாகவும் சாதி ரீதியாகவும் இழிவாக பேசுவார். ஒன்னும் இல்லாத நாய் என்று அடிக்கடி சொல்லி காட்டுவார். எனது உடைகளை எல்லாம் எனக்கு என்று ஒதுக்கப்பட்ட கழிவறையில் வைக்க கூறினார். அதுமட்டுமல்லாமல் நீ தனியாக சமைத்து சாப்பிடு, நீ பற நாய் நீயும் நானும் ஒன்னு இல்ல. என் சாப்பாட்டை நீ சாப்பிடக் கூடாது என்று கூறி, எனக்கு என்று ஒரு மூட்டை ரேசன் அரிசி வாங்கி கொடுத்தார். என் தாயாரிடம் ஆன்லைன் வகுப்பு சேர்த்துவிட்டதாக கூறினாலும் ஒருநாள் கூட நான் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டதில்லை. என்னை எந்த கல்லூரியிலும் சேர்த்தும் விடவில்லை.

மாணவியின் பகீர் வாக்குமூலம் 

அதுமட்டுமல்லாமல் மார்லீனா அன்னும் ஆண்டோ மதிவாணனும் வெளியே செல்லும் போது என்னை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு தான் செல்வார்கள். யாராவது வீட்டிற்கு வந்தால் என் உடலில் இருக்கிற காயத்தை சுட்டிக் காட்டி அவளே சுட்டுக் கொண்டாள், அவளே இடித்துக் கொண்டாள் என்று என் மீது பழிவை போடுவார். அவர்கள் முன்பு என்னிடம் சிரித்து பேசி நல்லவர் போன்று காட்டி கொள்வார். என் அம்மாவும் சென்னையில் பணி செய்து வருவதனால் என்னை பார்க்க வீட்டிற்கு வருகிறோம் என்று சொன்னபோது மார்லீனா அன் நாங்கள் தற்போது சென்னையில் இல்லை. பெங்களூருக்கு வேலை விசயமாக வந்திருக்கிறோம். இங்கு தான் தங்கி இருக்கிறோம் என்று கூறினார். அதனால் என் அம்மாவும் நாங்கள் பெங்களூரில் தான் தங்கியிருக்கிறோம் என்று நம்பிக் கொண்டிருந்தார்.

கடந்த 12.01.2024 அன்று மதியம் சுமார் 2.00 மணியளவில் நான் துணி காயவைக்கவில்லை என்று கூறி குழம்பு கரண்டியால் வலது கண் மற்றும் நெற்றி பகுதியில் கடுமையாக தாக்கி மார்லீனா அன் இரத்த காயம் ஏற்படுத்தினார்.

Andro Mathivanan
Andro Mathivanan

கடந்த 14.012024 அன்று என் அம்மா, மார்லீனா அன்னிடம் தயவு செய்து என் மகளை வீட்டிற்கு அனுப்பி வையுங்கள். அவளை பார்த்து 8 மாதம் ஆகிவிட்டது என்று கோபமாக கூற, மறுநாள் 15.012024 அன்று மார்லீனா அன், ஆண்டோ மதிவாணன் மற்றும் மார்லீனா அன்னின் பெற்றோர்கள் ஆகியோர் என்னை எனது சொந்த ஊரான திருநருங்குன்றத்திற்கு அழைத்து வந்தனர் என்னை பார்த்ததும் என் அம்மா செல்வி பதட்டத்துடன், உன் மீது என்ன இவ்வளவு காயம் என்று கேட்டார். அதற்கு மார்லீனா அன், அவளாகவே கபோர்டில் இடித்துக் கொண்டாள் என்று கூறினார்.

அவர்கள் சென்ற பிறகு எனக்கு நடந்த கொடுமையை என் அம்மாவிடம் கூறினேன். மார்லீனா அன் மற்றும் ஆண்டோ மதிவாணன் ஆகியோர் என்னை அடித்ததனால் உடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன். தலையிலும் உடல் முழுவதும் வலி இருந்தது. 16.01.2024 அன்று உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டேன். அங்கிருந்த மருத்துவர்களிடம் எனக்கு நடந்த கொடுமையை சொன்னேன். இதனடிப்படையில் 17,012024 அன்று இரவு 10.00 மணி முதல் 18.01.2024 அன்று விடியற்காலை 1.40 மணி வரை சென்னை, நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரித்து என்னிடம் வாக்குமூலம் வாங்கி சென்றனர்.

Andro Mathivanan
Andro Mathivanan

மேலும், என்னை படிக்க வைப்பதாக கூறி என்னுடைய 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், ஆதார் கார்டு போன்றவற்றை மார்லீனா ஆன் வாங்கி வைத்துள்ளார். அதனை என்னிடம் பெற்றுத் தர வேண்டும்.
ஆகவே கனம் சமூகம் அவர்கள், பட்டியல் சாதி இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த என்னை கடுமையாக அடித்து சித்திரவதை செய்த மார்லீனா அன், ஆண்டோ மதிவாணன் ஆகிய இருவர் மீதும் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 மற்றும் இ.த.ச. ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்து, என் சான்றிதழ்களை பெற்றுக் கொடுத்து, பாதிக்கப்பட்ட எனக்கு தகுந்த நீதி, நிவாரணம் மற்றும் பாதுகாப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்பதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் தலைமை செயலருக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மருமகள் ஆடியோ லிங்

பல்லாவரம்  எம்எல்ஏ கருணாநிதி,   அவர் தரப்பில் இருந்து “என் மகனுக்கு 7 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகிவிட்டது. அவர் அவரது குடும்பத்துடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். நான் வேறு பகுதியில் வசிக்கிறேன். அவர்கள் எப்போதாவது இங்கு வருவார்கள். நானும் எப்போதாவது அங்கு செல்வேன். அங்கு நடந்தது என்னவென்ற முழு விவரம்கூட எனக்குத் தெரியாது. நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். நான் இதில் ஏதும் தலையிடவில்லை. இந்த விவகாரத்தில் எனக்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.

இந்நிலையில், எம்.எல்.ஏ.கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் செர்லினா மீது நீலாங்கரை போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆண்ட்ரோ மதிவாணன் - மெர்லின்
ஆண்ட்ரோ மதிவாணன் – மெர்லின்

புகார் வெளியான நாளில் இருந்து கடந்த 3 நாட்களாக  ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மார்லீனா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.  இதற்கு இடையில் மார்லீனா ஒரு ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  அதில் எங்கள் குடும்பத்தினர் மீது அபாண்டமான குற்றசாட்டு, கடந்த  3 நாளா சாப்பிடாமல் என் குழந்தையை பார்க்க முடியாமல் தவிக்கிறேன். அந்த பெண்ணை என் பெண் மாதிரி தான் பாத்தேன், இது அவளுக்கே நல்லா தெரியும்.  ரே… அக்காவை பத்தி உனக்கு நல்லாவே தெரியும், உன்னை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தனும் நான் நினைச்சதே இல்லை ! உன் கைப்பட லெட்டர் எழுதி வச்சிருக்கே இப்ப தான் திறந்து பாக்குறேன். அந்த அளவுக்கு என் மேல லவ் இருக்கும் போது, நீ எதுக்காக இதலெல்லாம் செய்றமா, உனக்கு என்ன வேணுமா,? ஏதாவது வேணும்னா என்கிட்ட நேரடியாக பேசியிருக்கலாமே , என்னைய பத்தியும் அண்ணனை பத்தியும் என் குழந்தையை பத்தியும் பேசற பரவாயில்லை, ஏன். என் மாமனாரை பத்தி இப்படி பேசுற… என்று அழுகிற ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. …

– அங்குசம் செய்திப் பிரிவு.

மருமகள் ஆடியோ லிங்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.