தேனியில் பனை விதைகள் நடவு விழா ! ஆறு ஆண்டுகளாக தொடரும் சேவை !
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா லட்சுமிபுரம் செங்குளம் கண்மாயில் தன்னார்வலர்கள் பலர் குழுவாக ஒருங்கிணைந்து பனை விதைகள் நடவு, மரங்களில் ஆணிகளை அகற்றுவதற்கு ஆணி பிடுங்கும் திருவிழா நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் தன்னார்வலர்கள் குழுவின், 6-ம் ஆண்டு பனை விதைகள் நடவு தொடக்க விழா பெரியகுளம் அருகே லட்சு மிபுரத்தில் உள்ள செங்குளம் கண்மாயில் நடந்தது.
விழாவில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ் குமார் கலந்துகொண்டு பனை விதைகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
இதில், கவுமாரியம்மன் உணவு குழும நிர்வாக இயக்குனர் சுதாகர் வரவேற்றார். தேனி மேலப் பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜ மோகன், தேனி ரூரல் அப்ளிமெண்ட் தன்னார்வலர் அமைப்பின் தலைவர் யாசர் அராபத் முன்னிலை வகித்தனர்.
கண்மாய் கரையில் நூற்றுக்கணக்கான பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. இதில், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். பனை விதைகள் நடவு செய்யும் பணியை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்பட தன்னார்வலர்கள் செய்திருந்தனர். பனை விதைகள் நடவு மற்றும் மரங்களின் ஆணிகளை அகற்றும் விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஜெய்ஸ்ரீராம்