இளம் தலைமுறையினரை குறி வைக்கும் ”கூலிப் போதைப்பொருள்”
மதுரை ஐகோர்ட்டில் பணியாற்றி வரும் நீதிபதி பரதசக்கரவர்த்தி, ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவா் நேற்று பிற்பகலில் கூலிப் எனும் போதைப்பொருள் விற்ற வழக்கில் ஜாமீன் கேட்டவா்களின் மனுவை விசாரித்தார். ஏற்கனவே இதுதொடர்பாக இதே நீதிபதி பிறக்கித்த உத்தரவில், பள்ளி மாணவா்கள் கூலிப் போதைக்கு அடிமையாகி இருப்பது தெரிய வருகிறது. தமிழகத்தில் இதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இவற்றை விற்க பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது. அங்கிருந்து தமிழகத்திற்கு கடத்தப்பட்டு மறைமுகமாக இங்கு விற்பனை நடக்கிறது. இத்தகைய பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறது. இந்த போதைப்பொருளால் இளம் தலைமுறையினா் சிந்திக்கும் ஆற்றலை முற்றிலுமாக இழந்து வருகின்றனா். எனவே அதனை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவித்து, நாடு முழுவதும் ஏன் தடை செய்யப்கூடாது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.
இந்தநிலையில் இதே வழக்கு சம்பந்தமாக நீதிபதி மீண்டும் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது.
இந்த வழக்கில் விரிவான பரிசீலனை செய்வது அவசியமாகிறது. எனவே மத்திய சுகாதாரத்துறை, தமிழக பள்ளிக்கல்வித்துறை, உணவு பாதுகாப்புத்துறைகள் எதிர்மனுதாரராக சோ்க்கப்பட்டு இருந்தன. ஆனால் புகையிலைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் மீதும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. எனவே இந்த வழக்கின் எதிர்தரப்பினராக கூலிப் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் அரியானா மாநிலம் நாத்பூரில் செயல்படும் சம்பந்தப்படட தனியார் நிறுவனம், கா்நாடக மாநிலம் தும்குரு அந்தரசனஹள்ளி தொழிற்பேட்டையில் செயல்படும் நிறவனம் உள்பட 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த வழக்கு விசாரணைக்காக இந்த கோர்ட்டுக்கு உதவும் வகையில் வக்கீல் மணி பாரதி நியமிக்கப்படுகிறார். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.