அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பஞ்சப்பூருக்கு மாறிய பிறகு கல்லூரி நேரத்தில் பேருந்துகளே வருவதில்லை !

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர்.

கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொலைதூர கிராமங்களிலிருந்து மற்றும் நகர புறப்பகுதிகளிலிருந்து வந்து படித்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்குத் தேவையான அளவில் பேருந்துகள் ஒதுக்கப்படாததால், தினமும் கல்லூரி வருகை மற்றும் வீடு திரும்புவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக, கல்லூரி நேரத்தில் அதிக நெரிசல் காணப்படுவதால் மாணவர்கள் பேருந்துகளில் ஏற முடியாமல், படிப்பில் பாதிப்பு அடைகிற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்தப் பிரச்சினையை கடந்த காலங்களில் பலமுறை இந்திய மாணவர் சங்கம் எடுத்துரைத்தும், அவ்வப்போது சில கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பின்னர் மீண்டும் பழைய நிலை தொடர்கிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் பஞ்சப்பூர் மாற்றப்பட்டதற்கு பிறகு இன்னும் சிரமம் அதிகரித்துள்ளது. இதனால், மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மன்னார்புரத்திலிருந்து தினமும் நடந்து வரக்கூடிய அவல நிலை உள்ளது.

மாணவர்கள், “ தினமும் கல்லூரி செல்லும் போதும், வீடு திரும்பும் போதும் மிகவும் கஷ்டப்படுகிறோம். மாணவர்களுக்கு நிரந்தரமாக போதுமான பேருந்து சேவைகள் வழங்க அரசு மற்றும் போக்குவரத்துத் துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று  இந்திய மாணவர் சங்கம் சார்பில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுழைவாயில் முன்பு கையெழுத்து இயக்கம் மாவட்டத் தலைவர் ஜி.கே.மோகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர்கள் அன்பு, மாவட்டத் துணை செயலாளர் ஆர்த்தி, சுதேசனா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சாலினி கிளை நிர்வாகி பூபதி, தேவா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.