அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது : ஓபிஎஸ்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க

அனைவரும் ஒன்றிணைந்தால்
அதிமுகவை யாராலும்
வெல்ல முடியாது : ஓபிஎஸ்.

அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது என முன்னாளர் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ஓபிஎஸ் ஆதரவாளரும் ஒரத்தநாடு எம்எல்ஏ-வுமான வைத்திலிங்கம் இல்ல திருமணம் தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. இத்திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகர் ஆகிய இருவரும் இணைந்து நடத்தி வைத்தனர்.

 

https://www.livyashree.com/

இந்நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் பேசியதாவது:

இன்று 7-ஆம் தேதி எம்ஜிஆருக்குப் பிடித்தமான தேதியாகும். மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும்.

அதிமுகவை தொண்டர்களின் இயக்கமாக தோற்றுவித்தவர் எம்ஜிஆர்.

அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவை கட்டுக்கோப்புடனும் ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காகவும் வழிநடத்தி தமிழகத்தில் பொற்கால ஆட்சியை எம்ஜிஆர் வழியில் நிலைநிறுத்தியவர் ஜெயலலிதா.

பல்வேறு சோதனைகள், சதிகளை உடைத்து அதிமுகவை மாவெரும் இயக்கமாக உருவாக்கினார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்றால் அது ஜெயலலிதாவால் தான்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதிமுகவின் தூய தொண்டர்களின் எண்ணமே அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான்.

தொண்டர்கள் தான் இயக்கத்தின் ஆணிவேர், அச்சாணி. மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை மலரச் செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

அப்படி ஒன்றிணைந்து அரசியல் களத்தில் விளையாடினால் நம்மளை வெல்ல இந்தியாவிலேயே யாரும் கிடையாது.

அம்மாவின் ஆட்சியை அமைப்பதற்கான பிள்ளையார் சுழி இன்று போடப்பட்டுள்ளது. தஞ்சையில் எது செய்தாலும் அது வெற்றி தான்.

அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் ஜெயலலிதா ஆன்மாவின் எண்ணமாக இருக்கும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

முன்னதாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், சிலரின் பேராசையால் 6 ஆண்டுகளுக்கு முன்பு கனத்த இதயத்தோடு அதிகவிலிருந்து பிரிந்து அமமுகவை தொடங்கியதாகவும், தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக நிர்வாகளை ஒரே மேடையில் சந்திப்பது மகிழ்ச்சி என்றும் கூறினார்.

“கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னீர்செல்வத்துடன் பேசி ஒன்றாக செயல்படுவோம் எனக் கூறினேன்.

அரசியலையும் தாண்டி அவருடன் எனக்கு நட்பு தொடர்ந்து வருகிறது. அதன்படி தற்போது அதிமுக, அமமுக இணைந்து கைகோர்த்து ஒன்றாக செயல்பட தொடங்கிவிட்டது.

துரோகிகளுக்கு பாடம் புகட்டி, திமுகவை அகற்றி, எந்த மனமாற்றத்திற்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் இணைந்து செயல்படுவோம்,” என்றார் டிடிவி தினகரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.