ரவுடிகளை ஏவினாரா, திருச்சி தொழிலதிபர் ? மரண பயத்தில் பெண் தொழில் அதிபர் !

“நான்தான் அனுப்பினேன்.., அவங்ககிட்ட இடத்தை ஒப்படைச்சுட்டு போ” னு பி.டி.ஆர். மிகத்தெளிவாகவே பேசியிருக்கிறார்.

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

ரவுடிகளை ஏவினாரா, திருச்சி தொழிலதிபர் ? மரண பயத்தில் பெண் தொழில் அதிபர்

பெரியசாமி டவர்ஸ் உரிமையாளரான பெரியசாமி தங்கராசு ராஜன் (எ) பி.டி.ராஜனுக்கும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் என்ற இடத்தில் இயங்கிவரும் ஹேமாஸ் கிச்சன் ரெஸ்டாரன்ட் உரிமையாளர் ஹேமலதாவுக்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.உள்ளூர் வி.சி.க. பிரமுகர்களை ஏவிவிட்டு, கடையை காலி செய்யச் சொல்லி மிரட்டினார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார், பெரியசாமி டவர்ஸ் உரிமையாளர் பி.டி.ராஜன்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பழைய பேனருக்கு கீழே புதிய பேனர்..
பழைய பேனருக்கு கீழே புதிய பேனர்..

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

என்ன நடந்தது? ஹேமாஸ் கிச்சன் உரிமையாளர் ஹேமலதாவிடம் பேசினோம், ”இடம் தொடர்பா எனக்கும் பி.டி.ஆர்.க்கும் பிரச்சினை இருக்கு. கடைசியா, லால்குடி டி.எஸ்.பி. ஆபீஸ்ல அவங்களே கொடுத்த கம்ப்ளைண்ட்ல எங்கள கூப்டு விசாரிச்சாங்க. ஆறு மாசம் டையம் வாங்கிட்டு வந்து ஒரு வாரம்கூட ஆகல, அதுக்குள்ள உள்ளூர் ஆளுங்கள வச்சி கடைய காலி பண்ணுனு மிரட்ட ஆரம்பிச்சிட்டாங்க.

3

04.06.2023 மதியானம் 2 மணியிருக்கும். உள்ளூர்ல இருந்து, அன்பு, பாபு, ரமேஷ், மணிகண்டன் அப்புறம் அவுங்க ஆளுங்க முப்பது பேரு கும்பலா வந்து, கடைய மூடுனு பிரச்சினை பன்னாங்க. பொம்பளைங்கனு பார்க்காம கெட்டவார்த்தையில பேசுனாங்க. பி.டி.ஆர்.தான் அனுப்பினாருனு வந்தவங்க சொன்னாங்க. நான் அவருக்கே போன் போட்டேன். “அவங்ககிட்ட கடையை மூடி சாவிய கொடுனு” அவரும் சொன்னாரு. எங்க கடை பேனரை பிய்ச்சி எறிஞ்சிட்டு, நியூ லோட்டஸ் ரெஸ்டாரண்ட் னு பேனரை மாட்டிட்டு போயிட்டாங்க..” என்றார்.

ரவுடிகளை ஏவினாரா, திருச்சி தொழிலதிபர் ? மரண பயத்தில் பெண் தொழில் அதிபர் !
angusam.com – ரவுடிகளை ஏவினாரா, திருச்சி தொழிலதிபர் ? மரண பயத்தில் பெண் தொழில் அதிபர் !
4

பிரச்சினையில் ஈடுபட்டதாக கூறப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் அன்பு-வை தொடர்புகொண்டு கேட்டோம். ”பி.டி.ஆருக்கு ஏற்கெனவே இந்த இடத்தை வாங்கிக் கொடுத்தவன் என்ற முறையிலும், நான் உள்ளூரைச் சேர்ந்தவன் என்ற விதத்திலும்தான் நானும் எனது மாமா ரமேஷ்-சும் சென்றோம்.

அந்த அம்மாவாதான் உள்ளூர் காரங்க உதவி எனக்கு தேவை. வாங்க பேசிக்கலாம்னு உள்ள கூட்டிட்டு போனாங்க. வாடகையும் கொடுக்கலை, மிச்சம் காசும் கொடுக்கல. ஏதாவது செஞ்சி விசயத்தை முடிச்சுக்குங்கனு ’அன்பா’தான் பேசினோம். ஒன்றரை மணிநேரம் பேசியிருப்போம். முப்பது பேரேட எல்லாம் போகல. பேனரை கிழிக்கலை. கடைக்குப் பூட்டு போடல. கட்சியின் பெயரை நான் எந்த இடத்திலும் பயன்படுத்தவில்லை.” என தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார், அன்பு.

கிழிக்கப்பட்ட கடை பெயர் பலகைகள்
கிழிக்கப்பட்ட கடை பெயர் பலகைகள்

வழக்கை விசாரித்துவரும் இன்ஸ்பெக்டர் சுமதியிடம் பேசினோம்.”பி.டி.ஆர்., ஹேமாஸ் கிச்சன் தரப்பு ரெண்டு பேருக்கும் இடையில கேஸ் போயிட்டு இருக்கு. இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., டி.சி.னு நாங்க இருக்கிறப்போ, இந்த விவகாரத்தில் வி.சி.க. அன்பு, கமல் தலையிட என்ன இருக்கு? அவுங்களுக்கு இதுல வேலையே இல்லை. அவுங்க ரெண்டு குரூப்பா இருந்துகிட்டு இந்த மாதிரிதான் செய்திட்டு இருக்காங்க…” என்றார்.

”பி.டி.ஆர்.இன் தூதுவராக முதலில் ஹேமலதாவை அணுகியது, மாங்குடி கமல் என்பவர்தானாம். இதற்கிடையில், அன்புவின் ஆட்கள் புகுந்து ரகளை செய்ததை கேள்விபட்டு, லால்குடி டி.எஸ்.பி.க்கு போனை போட்டு உடனே போலீசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பேசியிருக்கிறார் மாங்குடி கமல்.”

சிசிடிவியில் பதிவான காட்சிகள்
சிசிடிவியில் பதிவான காட்சிகள்

லால்குடி டி.எஸ்.பி. அஜத்தங்கத்திடம்  பேசினோம், “எனக்கும் அதுதான் புரியலை. பாதிக்கப்பட்டவங்களும் எங்க சார்பா யாரையும் பேச சொல்லலைங்கிறாங்க. அப்புறம் எதுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சினு பெயரை சொல்லிக்கொண்டு இவர்கள் ஏன் தலையிடுகிறார்கள்? உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறேன்.” என்றார்.

மாங்குடி கமலை தொடர்பு கொண்டோம், ”நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியில மாவட்ட பொறுப்புல இருக்கேன். பி.டி.ஆர்.க்கு நாங்கதான் அந்த எடத்த முடிச்சு கொடுத்தோம். அந்த அடிப்படையில கொஞ்சம் பேசிவிடுங்கனு கேட்டாரு. நானும் பேசினேன். அந்த அம்மா என்ன மதிக்கல. நான் வந்துட்டேன். அப்புறம் அன்னிக்கு அவங்களா போன் பண்ணி, உள்ளூர் ஆளுங்க கடையில பிரச்சினை பன்றாங்கனு சொன்னாங்க. அவங்க கேட்கவும் தான் நான் டி.எஸ்.பி.க்கு போன் போட்டு நடவடிக்கை எடுக்க சொன்னேன்.

அதுக்குப்புறம்தான் பிரச்சினை பன்னுனதும் எங்க கட்சிகாரங்கதானு தெரிஞ்சது. அதுக்குள்ள அண்ணன் (பி.டி.ஆர்.) தலைவருக்கு (வி.சி.க. தலைவர் திருமாவளவன்) போன போட்டுட்டாரு. அவரு பெரம்பலூர் கிட்டுக்கு போன் அடிச்சி கேட்டிருக்காரு. கிட்டு என்கிட்ட கேட்டாரு. நடந்தத சொன்னேன். சரி நீயே நின்னு முடிச்சி கொடுன்னு சொல்லியிருக்காரு.” என புதுக்கதை ஒன்றை சொல்லி முடித்தார் அவர்.

“கமலை நான் தொடர்புகொண்டு உதவி கேட்கவில்லை. அவராகத்தான் என்னமா பிரச்சினையானு விசாரிச்சிட்டு, சரி நான் டி.எஸ்.பி.க்கு பேசுறேனு பேசுனாரு. திரும்ப இன்னிக்கி காத்தால (ஜூன்-06) சிறுகனூரை சேர்ந்த ராஜகோபால் என்பவரை அழைத்துகொண்டு என்னிடம் பேசினார். தலைவரே (திருமாவளவன்) என்கிட்ட பேசி இந்த பிரச்சினையை முடிச்சு கொடுனு சொல்லிட்டாரு. என்னனு சொல்லுங்க. பி.டி.ஆர். ஐ வர சொல்றேன். முடிச்சிட்டு போங்க.”னு பேசிட்டு போயிருக்காரு என்கிறார், ஹேமலதா.

உள்ளே புகுந்த ஆட்கள்..
உள்ளே புகுந்த ஆட்கள்..

பிரச்சினைக்குரிய இடத்தின் உரிமையாளரான பெரியசாமி டவர்ஸ் பி.டி.ராஜன் அவர்களை தொடர்புகொண்டோம், “அன்புவை எனக்கு யாரென்றே தெரியாது. நான் யாரையும் அனுப்பி வைக்கவில்லை. சிறுகனூரில் பெருமாள் என்பவர் அந்த இடத்தை வேண்டுமென்று கேட்டுக்கொண்டு இருந்தார். ஒருவேளை அவர் போயிருக்கலாம்.” என தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார்.

அன்புவின் ஆட்கள் ரெஸ்டாரண்டில் புகுந்து ஹேமலதாவிடம், ‘அன்பாக’ பேசிக்கொண்டிருந்த பொழுது, ஹேமலதாவுக்கும் பி.டி.ஆருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் என்பதாக ஒரு ஆடியோவை அனுப்பியிருக்கிறார். அந்த ஆடியோவில், “நான்தான் அனுப்பினேன்.., அவங்ககிட்ட இடத்தை ஒப்படைச்சுட்டு போ” னு பி.டி.ஆர். மிகத்தெளிவாகவே பேசியிருக்கிறார்.

”முழுக்க முழுக்க உரிமையியல் சார்ந்த இந்த விசயத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளுக்கும், உள்ளூரைச் சேர்ந்த அக்கட்சி உறுப்பினர்களுக்கும் என்ன வேலை? அவர்கள் ஏன், பெரியசாமி டவர்ஸ் பி.டி.ராஜனுக்கு ஆதரவாக அடியாட்களைப் போல, கடையில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டார்கள். இது கண்டிக்கத்தக்கது.

பிரச்சனைக்குரிய ஓட்டல்
பிரச்சனைக்குரிய ஓட்டல்

ஏற்கனவே, வி.சி.க. தலைவர் திருமாவளவனின் கடுமையான உழைப்பையும், அவரது அறிவார்ந்த செயல்பாடுகளையும் அறியாதவர்கள்; அவரைப் புரிந்து கொள்ளாதவர்கள்; அவர்மீது வன்மம் கொண்டவர்கள்தான், எங்கோ நிகழும் ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த கட்சியையுமே ”கட்டப்பஞ்சாயத்து கட்சி” என்று முத்திரை குத்த முயல்கிறார்கள். அவ்வாறு, கட்சி மீது பழிபோடுபவர்களுக்கு அல்வா சாப்பிட கொடுத்தது போல, இவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்று, சிலர் கட்சியின் செல்வாக்கை பயன்படுத்திக்கொண்டு உள்ளூர் அளவில் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசத்தில் ஈடுபடுவதை கட்சியின் தலைவர் கண்டிக்க வேண்டும். தயவு தாட்சண்யம் பார்க்காமல், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்கிறார், இப்பிரச்சினையை நம் கவனத்திற்கு கொண்டுவந்த வி.சி.க. நண்பர் ஒருவர்.

– ஆதிரன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.