”ஈழப்பிரச்சனை தான் எங்களின் பாதையை மாற்றியது”-’பறந்து போ’ சினிமா விழாவில் மாரிசெல்வராஜ் சொன்னது!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஜியோ ஹார்ட் ஸ்டார் வழங்கும் ஜி.கே.எஸ்.புரொடக்‌ஷன்ஸ், செவன் சீஸ் செவன் ஹில்ஸ் [ ஏழு கடல் ஏழு மலை] பேனர்களில் இயக்குனர் ராம் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பறந்து போ’. இதில் கதையின் நாயகனாக ‘மிர்சி’ சிவா, நாயகியாக மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி[ அறிமுகம்], மாஸ்டர் மிதுன் ரியன், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் இசை : சந்தோஷ் தயாநிதி, பாடல்கள் :மதன் கார்க்கி,  எடிட்டிங் : வி.எஸ்.மதி.

வரும் ஜூலை 04-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ‘பறந்து போ’ ரிலீஸாவதையொட்டி, படத்தின் நான்கு பாடல்கள் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூன்.12—ஆம் தேதி மதியம் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் மாரி செல்வராஜ், மிஷ்கின், மீரா கதிரவன், ரஞ்சித் ஜெயக்கொடி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, சுரேஷ் காமாட்சி, அருண் விஷ்வா, திங்க் மியூசிக் சந்தோஷ்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Sri Kumaran Mini HAll Trichy

கிரேஸ் ஆண்டனி
கிரேஸ் ஆண்டனி

படத்தின் ஹீரோயின் கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன், நடிகை வேணி, எடிட்டர் மதி ஆகியோர், இயக்குனர் ராமுக்கு நன்றி சொல்லியும் படத்தில் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். இயக்குனர்கள் மீரா கதிரவனும் ரஞ்சித் ஜெயக்கொடியும் ராம் படங்களின் கதாபாத்திரங்களைக் குறித்து சிலாகித்துப் பேசினார்கள். படம் வெற்றி பெற வாழ்த்தினார்கள் தயாரிப்பாளர்கள் தாணுவும் சுரேஷ் காமாட்சியும் அருண் விஷ்வாவும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“அஞ்சாறு வருசத்துக்கு முன்னால இருந்த சினிமாவுல நான் சந்தோஷமா இருந்தேன். ஆனால் இப்போ அப்படியில்லை. நிம்மதி சுத்தமா போச்சு. இந்த விழாவுக்கு வருமாறு ராம் வற்புறுத்திக் கூப்பிட்டான். அதனால தான் வந்தேன். ஒரு நாளைக்கு நான்கைந்து சினிமா விழாவுக்கு அழைப்பு வருது. எதுக்குமே நான் போறதில்லை. கூடிய சீக்கிரம் சினிமாவைவிட்டு நான் போகப் போறேன்” என ரொம்பவே விரக்தியாக பேசினார் டைரக்டர் மிஷ்கின்.

ஜியோ ஹாட் ஸ்டார் ரீஜெனல்  தலைவரான  கிருஷ்ணன்குட்டி பேசும் போது,

“அப்பா-மகனுக்கிடையிலான எமோஷனை அழகாகச் சொல்லும் இப்படத்தை தயாரித்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம். தமிழ்நாட்டைக் கடந்து இந்தியா முழுவதும் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்” என்றார். “இருபது பாடல்கள் உள்ள இப்படத்தில் நகைச்சுவையும் இருக்கு. அதனால் குடும்பத்துடன் ரசிக்கலாம்” என்றார் திங்க் மியூசிக் சந்தோஷ்.

பாடலசிரியர் மதன் கார்க்கி,

“இதற்கு முந்தைய ராம் வேறு. பறந்து போ ராம் வேறு. பாடல்களில் கவிதைநயம் அதிகம் வேண்டாம் என ராம் சொல்லிட்டார். அதனால் வேறுவிதமாக இப்படத்திற்கு 25 பாடல்கள் எழுதினேன். அதில் 19 பாடல்களை படத்தில் வைத்துள்ளார் ராம். என்னுடைய 1000-ஆவது பாடல் இப்படத்தில் இருக்கு” என்றார் பெருமிதத்துடன்.

பின்னணி பாடியுள்ள நடிகர் சித்தார்த் பேசியது.

“ராம் மிகச்சிறந்த படைப்பாளி. அவரின் படைப்புகளில் உண்மையும் நேர்மையும் இருக்கும். அவரது இந்தப் படத்தில் எனது பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சி”.

Flats in Trichy for Sale

”சினிமாவையும் பாடல்களையும் எப்படிப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தவர் ராம்” என்றார் சந்தோஷ் தயாநிதி.

”டைரக்டர் ராம் மிகவும் சென்ஸிபிளானவர். அவருக்கு சண்டைக் காட்சிகள் தேவயில்லை. நல்ல நடிகர்கள் மட்டும் அவரது கதைக்குப் போதும்” என்றார் ஜியோ ஹாட் ஸ்டார் கண்டெண்ட் ஹெட் பிரதீப் மில்ராய்.

சிவா
சிவா

ஹீரோ சிவா,

“ராம் படத்தில் நான் நடிக்கிறேன் என சொன்னதும் பலபேர் நம்பவில்லை. நான் இதுவரை செய்யாத படம், குடும்பப்படம். அனைத்து தரப்புக்கும் இப்படம் பிடிக்கும். இன்னும் அதிகம் கொண்டாடப்பட வேண்டிய இயக்குனர் ராமுடன் பணிபுரிந்ததில் மிகவும் திருப்தி” என்றார்.

மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

மாரிசெல்வராஜ் பேசும் போது,

“ராம் சாரின் படங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய் நான் வேலை பார்க்காத படம் இது. நான் அவரிடம் அசிஸ்டெண்டாக இருக்கும் போது பெரும்பாலும் காமெடிப் படங்களைத் தான் பார்ப்போம். 2009 ஈழப்பிரச்சனை தான் எங்களின் பாதையை மாற்றியது. அப்போதிருந்து தான் படங்களில் தீவிர அரசியல் பேச ஆரம்பித்தோம். தன்னுடைய சினிமா கேரக்டர்களில் பொய் இருக்கக் கூடாது என நினைப்பவர் ராம். அது இந்தப் படத்திலும் இருக்கு. என்னுடைய ‘வாழை’ போலவே இப்படமும் வெற்றி பெறும்” என்றார்.

இயக்குனர் ரா
இயக்குனர் ரா

இறுதியாகப் பேசிய இயக்குனர் ராம்,

“நான் வேலை செய்வதற்கு மிகவும் இலகுவான இடம் ஜியோ ஹாட் ஸ்டார். சிவா, கிரேஸ் போன்ற திறமையான கலைஞர்களை இப்படத்தில் பயன்படுத்திக் கொண்டதில் மகிழ்ச்சி. எனது அசிஸ்டெண்டுகள் மற்றும் டெக்னீஷியன்கள் அனைவருமே சிறந்த பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்தப் படத்தை வெளியிடுவது எங்களுக்கு மிகப்பெரிய பலம். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இப்படம் பிடிக்கும், நிச்சயம் ஜெயிக்கும்” என்றார் நம்பிக்கையுடன்.

 

—    மதுரை மாறன்  

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.