புதிதாக கட்டப்படும் வீடுகளை குறிவைக்கும் வினோத திருடர்கள்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதன் விரிவாக்க பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தற்பொழுது புதிய புதிய வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய வீடுகள் கட்டும்பொழுது அருகிலேயே சிறியதாக குடிசை அமைத்து தற்காலிக மின் இணைப்பு பெற்று வீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வார அங்குசம் வார இதழில்…

வினோத திருட்டுஇதை நோட்ட மிடும் மர்ம ஆசாமிகள் புதிய வீடுகளில் அமைப்பதற்காக வைக்கப்பட்டுள்ள மின் ஒயர்களை திருடி சென்று அருகில் உள்ள வயல்வெளியில் வைத்து எரித்து அவற்றில் உள்ள மின் காப்பர் கம்பிகளை விற்பனைக்காக எடுத்துச் செல்லும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேலும் புறநகர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள காலியிடங்களில் சமூக விரோதிகள் சிலர் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் அமர்ந்து மது அருந்துவதும் அதன் அருகிலேயே பாட்டிலை உடைப்பதும் உள்ளிட்ட தகாத சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வினோத திருட்டுஇதனால் புதிதாக வீடு கட்டும் வீட்டின் உரிமையாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

வினோதமாக மின் வயர்களை திருடிச் சென்று அதில் லாபம் பார்க்கும் மர்ம ஆசாமிகளை போலீசார் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இரவு நேரங்களில் துறையூர் மற்றும் புறவழிச்சாலை அதை சுற்றியுள்ள விரிவாக்க பகுதியில் அமைக்க பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

—    ஜோஷ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.