அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வந்தே பாரத் ரயில் பயணிகள் பதற்றம் ..! திருச்சியில் நடந்தது என்ன ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க

வந்தே பாரத் ரயில் பயணிகள் பதற்றம் ..! களத்தில் மஜக தொண்டர்கள் ..!

பெங்களூரில் இருந்து மதுரைக்கு திருச்சி மார்க்கமாக 04.05.2025 இன்று மாலை சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆழ்வார் தோப்பு பகுதி ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நின்று கொண்டிருந்தது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

வீடியோ லிங்

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மஜக (மனிதநேய ஜனநாயகக் கட்சி ) வினர்க்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி ஷெரீப் தலைமையில், கொட்டும் மழையிலும் மஜக தொண்டர்கள் களத்திற்கு விரைந்தனர் உடனடியாக பயணிகளின் குறைகளை கேட்டு அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நேரம் அதிகரித்ததன் காரணமாக வீட்டிற்கு உடனடியாக செல்ல வேண்டும் என்று சொன்னவர்களுக்கு வாகன வசதிகள் ஏற்பாடு செய்து அவர்களை பத்திரமாக வழி அனுப்பி வைத்தனர்.

பின் ரயில்வே உயர் அதிகாரிகள் முதல் தொழில்நுட்ப பணியாளர்கள் வரை தொடர்பு கொண்டு உடனடியாக பணிகளை வீரிய படுத்த சொல்லி கேட்டுக்கொண்டனர்.

அதன்பின் ரயில்வே போலீஸாரோடு தேவையான உதவிகளை கேட்டு உதவி புரிந்தனர், மஜக வின் தொண்டர்களின் களப்பணியை நேரில் கண்ட CRPF போலீஸார்கள் வெகுவாக பாராட்டினர்.

பயணிகளும் அப்பகுதி பொதுமக்களும் தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை மஜக தொண்டர்களுக்கு தெரிவித்து கொண்டனர்.

களப்பணியில் மாவட்ட நிர்வாகிகள் தர்வேஷ்,சிராஜுதீன், ஆஷிக், சதாம், நூர் ரியாஸ், ஷேக் உசேன் உட்பட மஜக ஆழ்வார்தோப்பு கிளை நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.