டங்ஸ்டனுக்கு எதிராக அரிட்டாபட்டி பகுதியை பல்லுயிர் தளமாக அறிவிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !
மத்தியில் இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்பொழுது கச்சத்தீவு தாரை வார்த்தது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானம் எப்படி பயன்படவில்லையோ அதேபோன்றுதான் தற்பொழுது டங்ஸ்டனுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானமும் உள்ளது, அதனால் உடனடியாக பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் தளமாக இந்த பகுதியை அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் பேட்டி.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளான அரிட்டாபட்டி வள்ளாளப்பட்டி புளிப்பட்டி உள்ளிட்ட பத்திற்கு மேற்பட்ட கிராம பகுதிகளில் டங்ஸ்டன் உலோகம் எடுப்பதற்கான ஏலத்தினை வேதாந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனம் ஏலம் எடுத்த நிலையில் இந்த பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு வகையான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரிட்டாபட்டி பகுதிக்கு வந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அந்த பகுதி மக்களிடம் டங்ஸ்டன் சுரங்கம் குறித்து பேசினார் மேலும் இந்திரா காந்தி காலத்தில் கச்சத்தீவினை தாரை வார்த்த பொழுது அப்பொழுது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மௌனம் காத்து தீர்மானம் மட்டுமே நிறைவேற்றினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அதனால் எந்த பயனும் இல்லை அதே போன்று தற்பொழுது திமுக அரசு கொண்டுவந்துள்ள டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிரான தீர்மானமும் எந்த ஒரு பயனையும் தராது அதற்கு மாற்றாக இந்த மேலூர் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ளடக்கிய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் தளமாக அறிவிக்க சட்டத்தினை தமிழக அரசு இயற்ற வேண்டுமென பேட்டியளித்தார் சட்டம் இயற்றப்பட்டால் மட்டுமே இந்த பகுதி பாதுகாக்கப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.