தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் வடநாட்டவர்கள் அல்ல !
“இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் நான் சி.ஏ ( சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்) படிப்பில் தேர்ச்சி பெற்றேன்…. நான் சொல்கிறேன் தமிழ்நாட்டுக்கான எம்பிக்கள் எண்ணிக்கை அதிகமாக போகிறதே தவிர குறையப்போவதில்லை . எம்பிக்கள் எண்ணிக்கை குறைகிறது என்று கூறுபவர்கள் படிப்பறிவு அற்றவர்கள் அறிவில்லாதவர்கள் ! நான் சொல்வதைக் கேட்டாவது அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!
மிஸ்டர் பியூஷ் கோயல் ! தமிழ்நாட்டில் யாரும் தங்களை படித்தவர்கள் என்று கூறிக் கொள்வதில்லை ! ஏன் என்றால் இங்கு எல்லோருமே படித்தவர்கள். உதாரணமாக எங்கள் நகரில் எல்லோரும் காலையில் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொழுது நீங்கள் ஒரு கல்லை விட்டு எறிந்தால் அது ஒரு ஐஐடி ரிட்டையர்ட் பேராசிரியரையோ அல்லது ஒரு டாக்டரையோ அல்லது ஒரு பொறியாளரையோ அல்லது ஆடிட்டரையோ சென்று தாக்கும்.
இங்கு படித்தவர்கள் என்றவுடன் யாரும் அதிகமாக மரியாதை காட்ட மாட்டார்கள். ஆனால் நீங்கள் வடநாட்டவர் ! அங்கு படித்தவர்கள் என்றால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்!
உதாரணமாக தான் ஒரு தெய்வ பிறவி என்றும் தான் பயலாஜிக்கலாக பிறக்காதவன் என்று கூறிக் கொள்ளும் ஒரு பைத்தியக்காரரின் அமைச்சரவையில் நீங்கள் அமைச்சராக இருக்கிறீர்கள். உங்களுடைய சக அமைச்சர்கள் யார் யார் என்றால் ஒருவர் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுத்தால் சூரிய பகவான் கோபித்துக் கொள்வார் என்பார்.

ஒருவர் பல்கலைக்கழகங்களில் ஜோசியத்தை பாடமாக வைக்க வேண்டுமென்பவர். ஒருவர் பசு மாடுகளுக்கு குளிர்காலத்தில் கம்பளியை போர்த்தி, அதற்கு ஆதார் கார்டு கொடுத்து, அதனிடம் பகவத் கீதையை படித்துக் காட்ட வேண்டும் என்பவர். ஒருவர் மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட் இருந்தது என்பவர். ஒருவர் கோமியமே சிறந்த மருந்து.. அது எல்லா நோய்களையும் குணமாக்கி விடும் என்பவர். வேதத்தில் எல்லா அறிவியல் கண்டுபிடிப்பு இருக்கின்றன.. ஐன்ஸ்டீன் தியரி தப்பு என்று கூறுபவர் ஒருவர்!
இப்படி அடி முட்டாள்களும் முண்டக்கலப்பைகளும் அங்கம் வகிக்கும் மந்திரி சபையில் இருந்து வந்தவர் என்பதால் உங்களுக்கு உங்களுடைய படிப்பை பற்றிய அறிவு பெரிதாக தெரிகிறது ! அதை ஒரு தற்பெருமையாக எண்ணுகிறீர்கள்! அது நியாயமாக கூட இருக்கிறது.
ஆனால், நாங்கள் கூறுவது எம்பிக்களின் எண்ணிக்கை அல்ல மொத்த எம்பிக்கள் எண்ணிக்கையில் அது எத்தனை சதவீதம் என்பதுதான்! அந்த சதவிகிதம் என்பது பீகார் உ.பி போன்ற மாநிலங்களுக்கு அதிகமாக இருக்கிறது தமிழ்நாட்டுக்கு குறைந்து விடுகிறது. தமிழ்நாடு எம்பிக்கள் 7.18% இருந்து 5.88% ஆக குறையும். உத்திரபிரதேசம் 14.73% இருந்து 16.24% ஆகவும் பீகார் 7.37% இருந்து 8.47% ஆகவும் அதிகரிக்கும்.
இந்த சதவீதக்கணக்கு பற்றி உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றால் உங்களுடன் இருக்கின்ற இன்னொரு படித்தவரான அஸ்வினி வைஷ்ணவ் என்ற ஐஐடி பட்டதாரியிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அமைச்சரவையில் உள்ள பிற முண்டக்கலப்பைகளிடம் கேட்காதீர்கள் உங்களுடைய அறியாமையால் நீங்கள் உளறுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் வடநாட்டவர்கள் அல்ல !
பேசும்போது கொஞ்சம் யோசித்து பேசுங்கள் பியூஷ் கோயல் அவர்களே ! ஏனென்றால் பேசும்போது நீங்கள் யாரென்று வெளிப்பட்டு விடுகிறீர்கள் ! உங்களுடைய முட்டாள்தனம் அல்லது அயோக்கியத்தனம் அப்பட்டமாக தெரிந்து விடுகிறது! வருந்துகிறோம்
பின் குறிப்பு:
முக்கியமா நிர்மலா சீதாராமனிடம் கேட்காதீர்கள் !
“அத பத்தி எனக்கு என்ன கவலை ! நான் தான் எலக்சன்ல நிக்கிறது இல்லையே” என்று சொல்லிவிடுவார்.
— எம்.எஸ்.ராஜகோபால்








Comments are closed, but trackbacks and pingbacks are open.