அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் …!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை 4ம் தேதி ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரி, மதுரைஅண்ணாபல்கலைக்கழக வளாகம், தியாகராசர் பொறியியல் கல்லூரி,மதுரைகல்லூரி மற்றும்கப்பலூர் அரசு கலைக் கல்லூரிஆகியவற்றில்நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற வாக்குப்பதிவில் மதுரை மாவட்டம் 80.52 விழுக்காட்டை பதிவு செய்துள்ளது. மதுரை மத்தியில் 73.88%, மதுரை கிழக்கில் 79.90%, மதுரை வடக்கில் 72.63%, மதுரை தெற்கில் 78.19%, மதுரை மேற்கில் 77.77%, மேலூரில் 82.22%, சோழவந்தானில் 87.23% , திருமங்கலத்தில் 87.03%, திருப்பரங்குன்றத்தில் 81.41%, உசிலம்பட்டியில் 82.95% என வாக்குகள்பதிவாகியுள்ளன. மிகஅதிகபட்சமாக சோழவந்தான் சட்டமன்ற தொகுதியிலும் (87.23%), குறைவாக மதுரை வடக்கிலும் (72.63%) வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்களித்ததை உறுதி செய்யும் ஒப்புகைச்சீட்டுக்கருவிகள் (VVPAT) ஆகியவற்றை பாதுகாப்பாக சம்மந்தப்பட்ட தொகுதிகளுக்கு மதுராகல்லூரி மற்றும் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும்மையங்களுக்கு கொண்டு வரப்படுவதையும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சம்மந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள காப்பறையில் (Strong Room)வைக்கப்பட்டு வரும்பணிகளை மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வருகின்ற மே 4ம்தேதி நடைபெற உள்ளவாக்கு எண்ணிக்கை மையங்கள் மதுரையில் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.  கடந்த 2021 ஆம் ஆண்டு மூன்று இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக இரண்டு இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

மேலூர் மற்றும் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிகளின் வாக்குஎண்ணிக்கை ஒத்தக்கடையில் அமைந்துள்ள வேளாண்மை கல்லூரியிலும்,சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மதுரைஅண்ணாபல்கலைக்கழகவளாகத்திலும் மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிகளின் வாக்குஎண்ணிக்கை திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர்பொறியியல் கல்லூரியிலும், மதுரை மத்தி மற்றும் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு மதுரைகல்லூரியிலும்,திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிகளுக்கு மதுரை மாவட்டம் கப்பலூரில்  அமைந்துள்ள. அரசு கலைக் கல்லூரிவளாகத்திலும் நடைபெற உள்ளன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.