ரூ.2 இலட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டூர் பகுதிகளில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகள் அருகே அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக நேற்று (22.04.2025) மாலை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் காவல் உதவி கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர், மற்றும் தனிப்படையினர் நேற்று (22.04.2025) மாலை 18.20 மணியளவில் காட்டூர் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய போது அப்பகுதியில் போலீசாரை கண்டதும் மூன்று நபர்கள் தப்பித்து ஓட முயன்ற போது அவர்களை காவல்துறையினர் விரட்டி மடக்கி பிடித்தனர்.

மேற்படி மூன்று நபர்களும் 1) ரெங்கா சுரேந்திரன் (வயது 33), த.பெ. ஜெகநாதன், தீரன் நகர், திருச்சி, 2) ராமர் @ ராகேஷ் 31/25, த.பெ.செல்வம், சண்முக நகர், உய்யகொண்டன்மலை, திருச்சி. 3) ஸ்ரீ ஹரிஷ்குமார் 30/25, த.பெ.வீரராஜ் 3வது குறுக்கு, தில்லை நகர், திருச்சி என்பதும், மேலும், அவர்களை விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தின் பேரில் அவர்களை சோதனை செய்த போது அவர்களிடமிருந்து ரூ.2,00,000/- மதிப்புள்ள போதை பொருட்களான மெத்தகுலோன், MDMA போதை மாத்திரைகள், செறிவூட்டப்பட்ட கஞ்சா, எடை இயந்திரம், ஐ போன்-2 மற்றும் ஆண்ட்ராய்டு போன் 1 ஆகியவற்றை கைப்பற்றி, மூவர் மீதும் திருவெறும்பூர் . 292/2025 .. 8 (c), r/w 20 (b) (il) (A), 22 (b), 22 (c), 23 (b). 27 (a) NDPS Act-ன்படி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், இது போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை, கஞ்சா, போலி மதுபானம், கள் விற்பனை மற்றும் மதிமயக்கும் பிற போதை வஸ்துக்கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுவதாக தெரிய வந்தால் பொதுமக்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 8939146100 (வாட்ஸ்அப்) மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0431-2333621 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.