இளமையில் அரசியல் களம் கண்ட பிரமுகர்கள்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பெரியோர்களே..! தாய்மார்களே..!

 

*     திருநாவுக்கரசர் 26 வயதில் 1977ல் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர். மேலும், சட்டமன்ற துணை சபாநாயகர்.

ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டியை பின்தொடர.....

*     வி.எம்.இராஜலெட்சுமி 30 வயதில், 2016ல் சங்கரன் கோவில் சட்டமன்ற

உறுப்பினராகி, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

குறைவான முதலீட்டில் நிலையான வருமானம் -

*     கலைஞர் 1957ல் குளித்தலை தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிட்டு வென்றபோது அவருக்கு வயது 33

*     1970ம் ஆண்டு 25 வயதில் வைகோ கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்றார்.

*     1957 தேர்தலில் திமுக போட்டியிடும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடை பெற்ற உள்ளாட்சி தேர்தலில் மேக்கேரிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் முதல் வெற்றியைப் பெற்றவர் கோ.சி. மணி. அப்போது அவருக்கு வயது 28.

*     பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி இராமதாசு இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு முதன் முறையாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 36.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

*     1996ம் ஆண்டு நடைபெற்ற கரூர் நகராட்சித் தேர்தலில் 21 வயதில் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி வார்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2006 சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜிக்கு வயது 31.

*     முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 1989ம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட போது.  அவருக்கு வயது 35.

*1984ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பி னராக அதிமுக சார்பில்  ஜெ.ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்ட போது  அவருக்கு வயது 36.

*தற்போதைய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1984ம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் வெற்றியைப் பெற்றார். அப்போது அவருக்கு வயது 31.

*1977ம் ஆண்டு அதிமுக சார்பில் சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் முதல் வெற்றியை முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பெற்றார். அப்போது அவருக்கு வயது 29.

*1977ம் ஆண்டு அதிமுக சார்பில் சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் சபாநாயகர் தனபால் முதல் வெற்றியைப் பெற்றார். அப்போது வயது 26.

*அமைச்சர் கே.என்.நேரு திமுக சார்பில் 1989ம் ஆண்டு இலால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். அப்போது அவருக்கு வயது 37.

தொகுப்பு: நிலவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.