கமிஷனர் இல்லத்தில் ஜல்சா

ஊரும் பேரும் சொல்லாமல் இன்ட்ரஸ்ட் நியூஸ்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரா ட்சி. இங்கு தற்காலிக பணியாளர்களாக சுமார் 65 பேர் நியமிக்கப்பட்டு அவர்கள் துப்புரவு பணி யாளர்களாகவும், டெங்கு பணி மற்றும் காய்கறிக் கழிவு மூலம் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகள் என பிரித்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி யாக ரூ.600 சம்பளம் என அரசு நிர்ணயித்துள்ள நிலையில், கொடுப்பதோ ரூ.380 மட்டுமே. மேலும் தினசரி 100 பேர் பணிபுரிவதாக கணக்கு காட்டப்பட்டாலும் பணிபுரிவது என்னவோ 65 பேர் மட்டுமே. இந்த தில்லாலங்கடி வேலை செய்வது அங்குள்ள ஒரு சுகாதார அலுவலர். 600க்கு 380, 35 பேருக்கான சம்பளம் என இவருக்கு ஒரு நாளைக்கான உபரி   வருமானம் மட்டும் 30 ஆயிரத்தை தாண்டும் என்கிறார்கள் இவரைப் பற்றி அறிந்தவர்கள்.

இந்த நகராட்சிக்கு புதிதாக அதிகாரிகள், ஏன் கமிஷனராகவே இருந்தாலும் உடனடியாக ஏதாவதொரு விஷயத்தில் அவர்கள் மீது அவதூறு பரப்பி அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றலாகி சென்று விட வைப்பதில் பலே கில்லாடியாம் இந்த தில்லாலங்கடி பார்ட்டி.

தீபாவளி வாழ்த்துகள்

கடந்த சில வாரத்திற்கு முன்பு புதிதாக வந்த நகராட்சி கமிஷனர் ஒருவர் தில்லாலங்கடி பார்ட்டியின் திருவிளையாடல் அறிந்து அவர் நடவடிக்கை எடுக்க முற்பட, சுகாதாரப் பணிகளில் ஈடுபடும் பெண்கள் மூலம் ஆணையர் மீதே பாலியல் ரீதியான புகார் தர வைத்து, பணிக்கு வந்த மூன்றே மாதத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்றால் இவரின் ஜகஜ்ஜால கில்லாடித் தனங்களை தெரிந்து கொள்ளலாம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

2வது கொரோனா முழு அடைப்பு காலக் கட்டத்தில் கூட அப் பகுதியில் உள்ள  ஜவுளி நிறுவனம் மற்றும் கடை களுக்கு சிறப்பு அனுமதி அளித்து பெரிய அளவில் கல்லா கட்டியதாகவும் இவர் மீது புகார் உண்டு. இதனால் இப்பகுதியில் தொற்று அதிகமாகி, அதில் எதிர்பாராத சிலர் மரணம் அடைந்த நிகழ்வும் உண்டு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இவற்றையெல்லாம் தாண்டிய ஒரு ஹைலைட் சமாச்சாரம் என்னவென்றால் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தங்கியிருப்பது நகராட்சி கமிஷனருக்கு ஒதுக்கப்பட்ட அரசு குடியிருப்பில்.

எந்நேரமும் மது அருந்திவிட்டு பணிக்கு செல்வது. பகல் நேரத்திலேயே கமிஷனருக்கு உரிய குடியிருப்பில் பெண்களுடன் சல்லாபம் செய்வது என இவரின் நடவடிக்கை மோசமான பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இவரது காமலீலைகளை அங்குள்ள ஒருவர் தனது செல்போனிலேயே படம்பிடித்து அனைவரிடமும் காட்டிய சம்பவமும் அரங்கேறி யுள்ளது.

நகரின் சுகாதாரத்தை பேணிக் காத்து மக்களுக்கு பெருந்தொற்று பரவாமல் பாதுகாப்பான வாழ் விற்கு வழிவகை செய்யக் கூடிய பொறுப்பான சுகாதார அலுவலர் பணியில் இருந்து கொண்டு, அடிமட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தில் கைவைப்பது, அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மீதே பழிசுமத்துவது, பணி நேரத்திலேயே பெண்களுடன் சல்லாபம் செய்து வருவது என அட்டூழியங்களை செய்து வரும் இந்த தில்லாலங்கடி பார்ட்டியை கட்டம் கட்டினால் இந்நகராட்சிக்கு விமோசனம் என்கிறார்கள் நகராட்சி நிர்வாகிகள்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.