சொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் !

 

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தின் முதல் கட்டமாக கட்சியின் பெயரையும், கொள்கைகளையும் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

 

இதற்கு முன்பாக  காலை ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்கினார். பின்பு, ராமேஸ்வரம் மீனவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்க திட்டமிட்டிருந்தார். ஆனால், நேரமின்மை காரணமாக மீனவர்களிடம் சில நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு கிளம்பினார். இது மீனவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது குறைகளை மனம் விட்டு கமல்ஹாசனிடம் சொல்ல நினைத்தவர்களால், சொல்ல முடியாததால் மீனவர்களும், ரசிகர்களும் வருத்தப்பட்டனர். மீனவர்களிடையே 1 மணி நேரம் கலந்துரையாட திட்டமிட்டிருந்த நிலையில், 7 நிமிடம் மட்டுமே பேசினார்.

 

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இதற்கடுத்து கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. பின்பு, பரமக்குடிக்கு வந்த கமல்ஹாசன் மேடைக்கு வரவில்லை. காரில் இருந்தபடியே திரண்டிருந்த மக்களிடம் உங்கள் அன்புக்கு நன்றி என்றார். நேரமின்மை காரணமாக மேடையில் வரவில்லை என்று காரணம் கூறி அங்கிருந்து புறப்பட்டார்.மேலும் மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வரவேற்க மதுரை விமான நிலையம் செல்ல வேண்டும் என்பதால் அவர் பரமக்குடியில் பேசவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

 

1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். கமலின் வருகையை முன்னிட்டு அவர் செல்லும் வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்து வரவேற்பு அளித்தனர். ஆனால், மேடையில் கமல் பேசாததால், திரண்டிருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். தங்கள் ஆதர்ச நாயகனுக்கு  பரிசுகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கமல் மேடையில் ஏறாமல் திரும்பியதால் கடும் வெயிலில் மனம் உடைந்து போனார்கள் அவரது ரசிகர்கள்.

 

சொந்த ஊரிலேயே இவர் பேசவில்லை, தலைவர் இப்படி சொதப்புகிறாரேஎன அவரின் கட்சித் தொண்டர்களாகப் போகும், இப்போதைய ரசிகர்கள் அலுத்துக்கொண்டதை கேட்பதற்கு பரிதாபமாகவே இருந்தது.

 

தனிமனிதனாக எல்லோரையும் விமர்சனம் செய்யும் எதையும் எளிதாக செய்து விட முடியும் – மக்கள் தலைவராக மாறி அதை செயல்வடிவில் கொண்டு வருது எவ்வளவு கடினம் என்பதை கமல் இந்த கட்சி துவக்க விழா உணர்த்தியிருக்கும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.