எம்.ஜி.ஆரின் முதல் காதலி!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் எம்.ஜி.ஆருக்கு சில பிரச்னைகள் இருந்தன. ‘சதி லீலாவதி’ படப்பிடிப்பின் ஆரம்ப நாட்களில் பெரும் சிரமப்பட்டார் எம்.ஜி.ஆர். சினிமாவைப்பற்றிய அடிப்படை புரிதல்கள் அவருக்கு கைவரவில்லை.

திரைப்படத்தின் நுணுக்கங்களை புரிந்துகொண்டாலும் நாடகத்தைத்தான் எம்.ஜி.ஆர் மிகவும் நேசித்தார். சினிமாவின் யதார்த்தங்களை உணர்ந்ததால் அவர் சினிமாவுக்குரிய உடல்மொழியில் நடித்து வெற்றிபெற்றார். ஆனால் அது எம்.ஜி.ஆருக்கு திருப்தியளித்த விஷயமல்ல. சினிமாவின் வெற்றிக்காக அவர் விருப்பமின்றி சில விஷயங்களை தியாகம் செய்யவேண்டியதானது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

சதி லீலாவதி திரைப்படம் வெளியாகி அபார வெற்றிபெற்றது. படத்தின் வெற்றியைவிட திரையுலகில் நாமும் நுழைந்துவிட்டோம் என்பதில் எம்.ஜி.ஆருக்கு பெரும் மகிழ்ச்சி. சதி லீலாவதியைத் தொடர்ந்து ‘இரு சகோதரர்கள்’ வாய்ப்பு. முதல் இரண்டு படங்களுக்குப்பின் வாய்ப்பின்றி இருந்தவருக்கு மீண்டும் எம்.கே.ராதா மூலம் 3-வது படவாய்ப்பு கிடைத்தது. 1938-ம் ஆண்டு 3-வது படமாக ‘தட்சயக்ஞம்’ வெளியானது.

இதில் கதாநாயகன் தட்சனாக எம்.ஜி.நடராஜ பிள்ளை என்பவர் நடித்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு மகாவிஷ்ணு வேடம். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கல்கத்தாவிலேயே நடந்தது. இது கம்பெனி தயாரித்த மாயா மச்சீந்திரா படத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஒரு வேடம் கிடைத்தது. அதற்கு முன் அவர் நடித்து வெளியான படம் வீர ஜெகதீஸ்….இந்த படம் வெளியான சமயம் எம்.ஜி.சக்கரபாணிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்திருந்தது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதனால் பெரியவனைப்போல் சின்னவனுக்கும் திருமணம் முடித்து விடவேண்டும் என்ற எண்ணம் சத்தியபாமாவுக்கு ஏற்பட்டது. ஆனால் அதற்கு எம்.ஜி.ஆர் உடன்படவில்லை. “சினிமாவில் பேரும் புகழும் பெறவேண்டும் என்பதுதான் என் வாழ்நாள் லட்சியம். திருமணம் அதற்குத் தடையாக இருக்கும். சினிமாவில் அப்படி ஒரு நிலையை எட்டியபின்தான் திருமணத்தைப் பற்றி சிந்திப்பேன்” என உறுதியாக தெரிவித்துவிட்டார்.

உள்ளம் உறுதி காட்டினாலும் 22 வயது வாலிபனால் இயற்கையான உணர்ச்சிகளை ஒளித்துவைக்கமுடியுமா?… அப்போது எம்.ஜி.ஆர் தங்கியிருந்த வீட்டுக்கு எதிரே ஒரு இளம்பெண் வசித்துவந்தார். இளமையும் அழகும் இணைந்த வசீகரமான இந்த இளம்பெண் மீது எம்.ஜி.ஆருக்கு  ஒருவித ஈர்ப்பு இருந்தது. படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் ஓய்வில் இருக்கும் சமயங்களில் அந்தப் பெண் எம்.ஜி.ஆர் வீட்டுக்குள் தண்ணீர் பிடிக்க குடத்துடன் வருவார். அப்போது அவளைக் கவர்வதற்காக எம்.ஜி.ஆர் ஒரு ஆர்மோனியப் பெட்டியை எடுத்துவைத்துக்கொண்டு ஏதாவது கத்திப்பாடுவார். அதை அந்தப் பெண் ஓரக்கண்ணால் பார்த்தபடி செல்வதைக் கண்டு ரசிப்பார்

எம்.ஜி.ஆர்.

கொஞ்சநாளில் இருவரும் கண்களாலேயே பேசிக்கொள்ளத் துவங்கினர். அரசல் புரசலாக சத்தியபாமாவின் காதுகளுக்கு இந்த சேதி வந்துசேர்ந்தது. பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் என்ன ஆகும் என பழுத்த அனுபவசாலியான அவருக்குத் தெரியாதா?! கொஞ்சநாட்களில் அந்த வீட்டை காலி செய்துகொண்டு வேறு இடத்துக்கு குடிபுகுந்தார்.எம்.ஜி.ஆர் தாடிவிட ஆரம்பித்தார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.