பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் – மரியாதை செய்த தி.மு.கழகத்தினர்
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெருந்தலைவர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15/07/25 செவ்வாய்க்கிழமை சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள காமராசரின் திருவுருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையையும் நோட்டுப் புத்தகங்களையும் வழங்கினார் .
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ் மாநில அணி நிர்வாகி செந்தில் பகுதி கழகச் செயலாளர் மோகன் மாநில, மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் , நிர்வாகிகள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைத்து அணியை சேர்ந்த அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.