விருதுநகரில் 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் போக்சோ சட்டத்தில் போட்டோகிராபர் கைது !
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்(55) இவர் போட்டோகிராபராக அப்பகுதியில் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு போட்டோ எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக சிறுமியின் பெற்றோர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக போட்டோகிராபர் முருகேசன் மீது புகார் கொடுத்துள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதனை தொடா்ந்து புகாரை பெற்றுக் கொண்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி போட்டோகிராபர் முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, முருகேசனை காவல்துறையினர், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
— மாரீஸ்வரன்.